டாடா அல்ட்ராஸின் இந்திய அறிமுக குறித்த தகவல்கள் வெளியானது...

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான டாடா அல்ட்ராஸை அடுத்த மாதம் டிசம்பரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார் 45எக்ஸ் கான்செப்ட்டில் கடந்த ஆண்டில் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

டாடா அல்ட்ராஸின் இந்திய அறிமுக குறித்த தகவல்கள் வெளியானது...

டாடா நிறுவனத்தின் ஆல்பா கட்டமைப்பில் உருவாகியுள்ள முதல் காராக விளங்கும் அல்ட்ராஸ், இதன் வரிசையில் உள்ள மற்ற அனைத்து கார்களையும் விடவும் அகலமான மாடலாக உள்ளது. ஆனால் அல்ட்ராஸின் வீல்பேஸ் இந்த வரிசையில் மிக சிறியதாக உள்ளது. இதனால் ஆல்பா கட்டமைப்பு வருங்காலத்தில் மினி-எஸ்யூவி தயாரிக்கவே பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

டாடா அல்ட்ராஸின் இந்திய அறிமுக குறித்த தகவல்கள் வெளியானது...

டாடா அல்ட்ராஸ், நவீன தொழிற்நுட்பங்கள் மற்றும் இணைப்பு வசதிகள் என ஏகப்பட்ட உட்புற அம்சங்களை கொண்டுள்ளது. பெரிய தொடுதிரை இன்போடெயின்மெண்ட் அமைப்பு, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, அடியில் வளைந்த ஸ்டேரிங் வீல் மற்றும் இரு வகையான க்ளைமேட் கண்ட்ரோல் தேர்வு போன்றவை இந்த காரில் உட்புற அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா அல்ட்ராஸின் இந்திய அறிமுக குறித்த தகவல்கள் வெளியானது...

டாடா ஹெரியர் காரில் முதன்முறையாக கொடுக்கப்பட்ட இம்பேக்ட் 2.0 என்கிற டிசைன் அமைப்பில் தான் டாடா அல்ட்ராஸின் வெளிப்புற டிசைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஹேட்ச்பேக்கின் மொத்த கொள்ளவு 341 லிட்டராக உள்ளது.

டாடா அல்ட்ராஸின் இந்திய அறிமுக குறித்த தகவல்கள் வெளியானது...

இந்த புதிய டாடா அல்ட்ராஸ் இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்திலேயே வெளியாக வேண்டியது. ஆனால் டாடா நிறுவனம் பிஎஸ்6 கார்களுடன் இந்த காரை அறிமுகப்படுத்தலாம் என திட்டமிட்டு தற்போது அதை நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த காரின் பெட்ரோல் மாடல்கள் டாடா டியாகோவில் இருப்பது போன்று 1.2 லிட்டர் என்ஜினை பெற்றுள்ளன.

டாடா அல்ட்ராஸின் இந்திய அறிமுக குறித்த தகவல்கள் வெளியானது...

மற்றொரு முதன்மை தேர்வாக டாடா நெக்ஸானி உள்ள 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் என்ஜினுடன் உள்ளது. தற்சமயம் 1.5 லிட்டர் என்ஜின் 90 பிஎச்பி பவரை வெளியிட்டு வருகிறது. இதை விட அதிகமான ஆற்றலை இந்த என்ஜின் அல்ட்ராஸின் டீசல் வேரியண்ட்டில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

டாடா அல்ட்ராஸின் இந்திய அறிமுக குறித்த தகவல்கள் வெளியானது...

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளுடனும் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட என்ஜின்களுடன் அல்ட்ராஸ் மாடல் தற்போதைக்கு வெளியாகவில்லை.

Most Read:2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...

டாடா அல்ட்ராஸின் இந்திய அறிமுக குறித்த தகவல்கள் வெளியானது...

அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்த டாடா அல்ட்ராஸ் காரை காண இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களை பற்றி நாம் கவலைப்படவே தேவையில்லை. ஏனெனில் டாடா கார்களில் எப்போதும் அதிகப்பட்சமான பாதுகாப்பு உபகரணங்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கும்.

Most Read Articles

English summary
Tata Altroz To Be Unveiled In December: India Launch Early 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X