டாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் வெளியாகி இருக்கிறது.

டாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

அண்மையில் நடந்து முடிந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஸ்ஸார்டு என்ற பெயரில் 7 சீட்டர் கான்செப்ட் எஸ்யூவியை காட்சிக்கு வைத்திருந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலாக இந்த பஸ்ஸார்டு எஸ்யூவி வர இருக்கிறது.

டாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

இந்த நிலையில், டாடா பஸ்ஸார்டு கான்செப்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலானது இந்தியாவில் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய எஸ்யூவியானது கசினி என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய பஸ்ஸார்டு எஸ்யூவிக்கு கசின், கசினி, ஷிக்ரா மற்றும் டிமெரோ ஆகிய பெயர்களை காப்புரிமை நிறுவனத்திடம் தேர்வுக்காக அனுப்பியிருந்தது. இதில், கசினி பெயர் இறுதி செய்யப்பட்டு உரிமம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

டாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

டாடா கசினி எஸ்யூவியானது 4,661 மிமீ நீளமும், 1,894 மிமீ அகலமும், 1,786 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 2,741 மிமீ வீல் பேஸ் கொண்டது. டாடா ஹாரியர் எஸ்யூவியைவிட 63 மிமீ கூடுதல் நீளமும், 80 மிமீ அதிக உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், வீல் பேஸ் ஒன்றுதான்.

டாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

இந்த புதிய எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.

புதிய டாடா அல்ட்ராஸ் காருக்கு அடுத்தபடியாக, இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய டாடா கசினி எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது.

டாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

கசினி பெயர் காரணம்

சனிக் கிரகத்தையும், அதன் 4 துணைக் கோள்களுக்கு இடையிலான இடைவெளி மற்றும் வட்டப்பாதைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் இத்தாலி ஆய்வு மையம் ஆகியவை இணைந்து கசினி - ஹைஜென் என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தின.

டாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

கடந்த 1625 இத்தாலியில் பிறந்து 1712ம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த கசினி என்ற விண்வெளி ஆய்வாளரின் நினைவாக செயற்கைகோளுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், தனது புதிய 7 சீட்டர் எஸ்யூவி காருக்கு கசினி பெயரை டாடா மோட்டார்ஸ் காப்புரிமை நிறுவனத்திடம் பதிவு செய்து பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Source: financialexpress

Most Read Articles
English summary
Tata Buzzard SUV To Be Called As Cassini In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X