ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

மூன்று வரிசையாக ஏழு இருக்கைகளை கொண்ட ஹெரியர் பஸ்ஸார்ட் மாடல் காரை 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கார் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

மேலும் டாடா நிறுவனத்திலேயே இந்த கார் மட்டும் தான் இதன் முழுமையான திறனால் இந்நிறுவனத்தின் ஜேஎல்ஆர் பெறப்பட்ட ஒமேகா மாடுலர் கட்டமைப்பால் வடிவமைக்கப்படுகிறது. இந்த பஸ்ஸார்ட் காரின் உலகளாவிய அறிமுகம் இந்த வருடத்தின் துவக்கத்தில் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

இந்த நிகழ்ச்சியில் இந்த கார் குறித்து டாடா நிறுவனம் கூறுகையில், பஸ்ஸார்ட் என்கிற பெயர் உலகளாவிய ஆட்டோமொபைல் சந்தையில் மிக பிரபலமானது. இந்திய மார்கெட்டில் இந்த கார் அறிமுகமாகும் போது பெயர் மாற்றப்படலாம் என தெரிவித்தது. இதனால் பஸ்ஸார்ட் காரின் இந்திய அறிமுகத்தின் போது காரின் பெயர் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

இதுவரை சோதனை ஓட்டங்களில் ஈடுப்பட்ட பல கார்களின் தகவல்களை நமது தளத்தில் பதிவிட்டு இருக்கிறோம். ஆனால் அதை எல்லாம் விட அதிகமான தகவல்களை ஹெரியர் பஸ்ஸார்ட் காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் தருகின்றன.

ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

அதன்படி பார்க்கும்போது, இந்த காரில் 18 இன்ச் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பின்பகுதியின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், காரின் மொத்த நீளமும் அதிகரித்துள்ளது. அதேபோல் ஹெரியர் பஸ்ஸார்ட்டின் உயரமும் 80 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

இந்த உயரம் அதிகரிப்புக்கு காரணம், மூன்றாவது வரிசையில் உள்ள இருக்கைகளில் அமருபவர்கள் சவுகரியமான உணர்வை உணர வேண்டும் என்பதற்காக தானாம். இந்த மூன்றாவது வரிசை வரை காற்று செல்லும் வகையில் ஏசியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பஸ்ஸார்ட்டில் மூன்றாவது வரிசையில் அமருபவர்கள் தங்களது மொபைல்களுக்கு சார்ஜ் செய்ய மின்சார துளைகளும், கூடுதலாக யூஎஸ்பி இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

ஏழு இருக்கைகளை கொண்ட இந்த பஸ்ஸார்ட் காருக்கு இதன் முந்தைய மாடலான ஐந்து இருக்கைகளை கொண்ட ஹெரியர் காரின் முன்புற டிசைன்கள் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் கூடுதல் நீளத்துடன் பெட்டகம் வடிவில், வழக்கமான டெயில் லைட்களுடன் உள்ளது. இதனுடன் பின்புற ஸ்பாய்லரும் புதியதாக மாற்றப்பட்டுள்ளது.

ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

டாடா ஹெரியர் பஸ்ஸார்ட்டில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் எடையை எதிர்கொள்ளும் பொருட்டு 170 பிஎச்பி ஆற்றலை வழங்கக்கூடிய திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த என்ஜினுடன் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வில் ஆறு வேக நிலைகளை கொடுக்கக்கூடிய டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் அமைப்பும் உள்ளது.

ஏழு இருக்கைகளுடன் நியூ டாடா ஹெரியர்... இந்திய அறிமுகம் எப்போது?

எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் காரால் டாடா ஹெரியர் கார் மிக பெரிய சரிவை கண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் சில அப்டேட்களுடன் இந்த பஸ்ஸார்ட் காரை டாடா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இருப்பினும் இந்த அப்டேட்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை உயர்ரக காராக நினைக்க வைக்காது என்பதும் டாடா நிறுவனத்திற்கு நன்றாகவே தெரியும். செல்டோஸ் காரில் கியா நிறுவனம் வழங்கியுள்ள தொழிற்நுட்பங்களுடன் இதன் தொழிற்நுட்பங்களை ஒப்பிட்டால் பஸ்ஸார்ட் குறைவான அம்சங்களையே கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Spy Pics: Tata Harrier (Buzzard) Automatic Spotted Testing Ahead Of Launch Early Next Year
Story first published: Saturday, October 26, 2019, 14:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X