புதிய டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

டாடா நிறுவனத்தில் இருந்து அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட்டிற்கு பயன்படுத்தக்கூடிய மறைப்புடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

டாடா கிராவிட்டாஸ் காரின் பொது சாலை சோதனை ஓட்ட புகைப்படங்களை கடந்த வாரங்களில் பல முறை பார்த்திருப்போம். ஆனால் இந்த கார் இவ்வாறு க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் ஈடுப்படுவது இதுவே முதல்முறை.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

வாடிக்கையாளர்களின் பெரிய எதிர்பார்ப்பில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள கார்களில் ஒன்றாக விளங்கும் டாடா கிராவிட்டாஸ் இந்த சோதனை ஓட்டத்தில் அதிக உருவ மறைப்புடன் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், காரின் வடிவம் கூட சரியாக இல்லை.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

பொது மக்களின் விற்பனைக்கு ஒரு கார் செல்வதற்கு முன்னதாக கண்டிப்பாக க்ராஷ் டெஸ்ட்டில் அந்த கார் ஈடுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் டாடா கிராவிட்டாஸ் காரும் விரைவில் க்ராஷ் டெஸ்ட்டிற்கு அனுப்பப்படலாம். இது அதற்கு முந்தைய சோதனை ஓட்டமாக இருக்கலாம்.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

க்ராஷ் டெஸ்ட்டிற்கு அனுப்பப்படும் கார்களில் இத்தகைய மறைப்புகள், ஸ்பெஷல் கோட்டிங்கில் பெயிண்ட்களாகவோ அல்லது காருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரகாசமான நிறங்களாகவோ கொடுக்கப்படுகின்றன.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

பெயிண்ட் மட்டுமில்லாமல் டேட்டா அனலைசிஸ் மற்றும் அளவீடுகளை துல்லியமாக காட்டும் கருவிகள் போன்றவையும் இந்த க்ராஷ் டெஸ்ட் மறைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தகைய க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டத்தில் கார் ஈடுப்படுத்தப்படுவது அரிதானது.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

டாடா ஹெரியர் மாடலின் அடுத்த தலைமுறை காராக கிராவிட்டாஸ் அறிமுகமானாலும் தனக்கென சில தனித்துவங்களையும் பெற்றுள்ளது. அதாவது இந்த கிராவிட்டாஸ் எஸ்யூவி காரில் கூடுதல் இருக்கை வரிசை மற்றும் பொருட்களை ஏற்றி செல்ல மேற்புறத்தில் தண்டவாளங்களை கொண்டுள்ளது. மேலும் கூடுதல் இருக்கை வரிசையினால் காரின் நீளம் அதிகரிக்கப்பட்டிருப்பது மட்டுமில்லாமல் வெளிப்புறத்தில் கூடுதலாக பேனல் சேர்க்கப்பட்டிருக்கிறது.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

காரின் பின்புற டிசைன் சிறிது டாடா சவாரியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. நவீன தொழிற்நுட்பங்கள் லேண்ட் ரோவரின் டிஸ்கவரி மாடலில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி முன்புற ஹெட்லைட் பொசிஷன் உள்ளிட்டவற்றில் ஹெரியரை தான் கிராவிட்டாஸ் எஸ்யூவி பின்பற்றியுள்ளது.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

ஏனெனில் இந்த இரு மாடல்களும் டாடா நிறுவனத்தின் புதிய ஒமேகா ஆர்க் ப்ளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளன. டாடாவின் இந்த புதிய ஒமேகா ஆர்க் ப்ளாட்ஃபாரம் லேண்ட் ரோவரின் டி8 கட்டமைப்பில் இருந்து பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

அதேபோல் டாடா ஹெரியரில் உள்ள 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தான் இந்த 2020 கிராவிட்டாஸ் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் டாடா ஹெரியரில் 138 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் கேம்பஸிலும் இந்த என்ஜின் அமைப்பு தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் வெவ்வேறான ஆற்றல்களை வெளிப்படுத்துகிறது.

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட் மறைப்புடன் சோதனை ஓட்டம்...

இதனால் இந்த என்ஜின் கிராவிட்டாஸ் எஸ்யூவி-லும் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். அதாவது 170 பிஎச்பி வரையில் ஆற்றலை கூடுதலாக வெளிப்படுத்தும் வகையில் இருக்கலாம். ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதலாகவும் வழங்கப்படவுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ள இந்த கார் இந்திய சந்தையில் ரூ.14 லட்சம் வரையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா ஹெரியரின் ஆரம்ப விலை ரூ.12.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2020 Mahindra Bolero BS6 Caught Testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X