ஐபிஎல் போட்டியின்போது இதை நீங்கள் கவனித்தீர்களா...? - டாடாவின் புதிய முயற்சி!

ஐபிஎல் போட்டியின்போது பெரும்பாலான ரசிகர்கள் இதை கவனித்திருக்க மாட்டீர்கள். அப்படி கவனிக்கவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான்.

ஐபிஎல் போட்டியின்போது இதை நீங்கள் கவனித்தீர்களா...? - டாடாவின் புதிய முயற்சி!

2019ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியானது, கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டியின்போது இதை நீங்கள் கவனித்தீர்களா...? - டாடாவின் புதிய முயற்சி!

விவோ நடத்தும் 2019ம் ஆண்டிற்கான இப்போட்டியில் அஃபிசியல் பார்ட்னராக டாடாவும் இணைந்துள்ளது. கடந்த வருடமும் ஐபிஎல் அணிக்கு அஃபிஷியில் பார்ட்னராக டாடா இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, டாடாவின் நெக்ஸான் கார் முன் நிறுத்தப்பட்டது.

ஐபிஎல் போட்டியின்போது இதை நீங்கள் கவனித்தீர்களா...? - டாடாவின் புதிய முயற்சி!

இந்த நிலையில், நடப்பாண்டின் ஐபிஎல் போட்டியில், அந்த நிறுவனத்தின் ஹாரியர் கார் ஸ்பான்சராக முன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரினை டாடா நிறுவனம் லேண்ட் ரோவர் அடிப்படையில், எச்5எக்ஸ் என்ற புதிய கான்செப்ட் மாடலாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்திருந்தது.

ஐபிஎல் போட்டியின்போது இதை நீங்கள் கவனித்தீர்களா...? - டாடாவின் புதிய முயற்சி!

பின்னர், ஹாரியர் என்ற பெயரில் அந்த மாடலை சந்தையில் அறிமுகம் செய்தது. உயர்த்தப்பட்ட பேனட் அமைப்பு, வலிமையான முகப்பு தோற்றம் ஆகியவை இந்த காரின் சிறப்பாக உள்ளது. இதைத்தவிர்த்து, பேனட்டின் கீழ்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்லைட், முகப்பின் மேல்புறத்தில் உள்ள இரண்டு பகல்நேர எல்இடி மின்விளக்குகள் அதன் கவர்ச்சியை மேலும் கூட்டும் வகையில் உள்ளது.

இந்த புத்தம் புதிய மாடலை பிரபலம் செய்யும் விதமாக டாடா நிறுவனம், ஐபிஎல் போட்டியில் ஸ்பான்சராக முன் நிறுத்தியது. மேலும், ஐபிஎல் போட்டியின்போது வரும் விளம்பரங்களில் இந்த கார் குறித்த விளம்பரங்களை இதுவரை ஐந்து பாகங்களாக வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், ஐந்து பாகங்களும் காரின் கவர்ச்சி மற்றும் சிறப்பம்சங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் டங்கள் படத்தின் நடிகை பாத்திமா சனா செயிக் மற்றும் குல்லி பாய் நடிகர் சித்தாந் சதுர்வேதி இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பரங்களின் வரிசையை இந்த பதிவில் காணலாம்.

டாடா ஹாரியர் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கின்றது. மேலும், இந்த மாடல்களில் ஆரம்ப மாடலான எக்ஸ்இ மாடலின் விலை ரூ. 12.69 லட்சமாக டெல்லி எக்ஸ்-ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஹை வேரியண்டான எக்ஸ்இசட் மாடலின் மதிப்பு ரூ. 16.25 லட்சமாக உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டுள்ள, ஃபியட் நிறுவனத்தின் அதே 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போார்ஜ்டு டீசல் எஞ்சின்தான் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்ஜின் 138பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இல்லை.

ஐபிஎல் போட்டியின்போது இதை நீங்கள் கவனித்தீர்களா...? - டாடாவின் புதிய முயற்சி!

ஒரே புஷ்ஷில் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் வசதி இந்த எஸ்யூவியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவிதமான டிரைவிங் மோடுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Tata Harrier SUV: 5 new TVCs released, to air during IPL cricket matches. Read In Tamil.
Story first published: Friday, April 19, 2019, 18:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X