கடும் சந்தைப் போட்டி... அசத்தலான அம்சங்களுடன் வரும் டாடா ஹாரியர்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் அருமையான தேர்வாக அறிமுகமான டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு 6 மாதங்களுக்குள் சோதனை காலம் துவங்கிவிட்டது. எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் போன்ற புத்தம் புதிய மாடல்களின் வருகையால், டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடும் சந்தைப் போட்டி... ஹாரியர் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை அவசரமாக சேர்த்த டாடா!

எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் போன்ற புதிய எஸ்யூவி மாடல்களில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், ஹாரியர் எஸ்யூவியில் இருந்த குறைகளை களையும் முனைப்பில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. அண்மையில்தான் வாடிக்கையாளர்களின் கொடுத்த யோசனைகளின்படி, சில அப்டேட்டுகளை டாடா மோட்டார்ஸ் வழங்கியது.

கடும் சந்தைப் போட்டி... ஹாரியர் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை அவசரமாக சேர்த்த டாடா!

இதைத்தொடர்ந்து, தற்போது மேலும் சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹாரியர் எஸ்யூவியை டாடா அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆம், டாடா ஹாரியர் எஸ்யூவியில் இருந்த பெரிய குறை, சன்ரூஃப் இல்லாதது. பல வாடிக்கையாளர்கள் வெளிச்சந்தையில் சன்ரூஃப் வாங்கி பொருத்தி அழகு பார்த்தனர்.

கடும் சந்தைப் போட்டி... ஹாரியர் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை அவசரமாக சேர்த்த டாடா!

ஆனால், அது நிச்சயம் சட்ட விதிகளுக்கு மீறிய செயலாக இருக்கும் என்பதுடன், பாதுகாப்பு பிரச்னையும் எழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமே இப்போது சன்ரூஃப் வசதியுடன் ஹாரியர் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருக்கிறது.

கடும் சந்தைப் போட்டி... ஹாரியர் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை அவசரமாக சேர்த்த டாடா!

அத்துடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் விரைவில் டாடா ஹாரியர் எஸ்யூவி வர இருக்கிறது. சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஹாரியர் எஸ்யூவி இப்போது ரகசியமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

கடும் சந்தைப் போட்டி... ஹாரியர் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை அவசரமாக சேர்த்த டாடா!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் ஆட்டோமேட்டிக் ஹாரியர் எஸ்யூவியின் ஸ்பை படங்களை ஆட்டோார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. வரும் பண்டிகை காலத்திற்கு டாடா ஹாரியர் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படும் என்பது தெரிய வருகிறது.

கடும் சந்தைப் போட்டி... ஹாரியர் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை அவசரமாக சேர்த்த டாடா!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருப்பது நிச்சயம் சிறப்பான விஷயம். அத்துடன், இந்த புதிய மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கடும் சந்தைப் போட்டி... ஹாரியர் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை அவசரமாக சேர்த்த டாடா!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த எஞ்சினை அதிக பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் சந்தைப் போட்டி... ஹாரியர் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை அவசரமாக சேர்த்த டாடா!

புதிய அப்டேட்டுகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் மூலமாக வாடிக்கையாளர் தேர்வில் டாடா ஹாரியர் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.

Source: Autocarindia

Most Read Articles
English summary
Tata Harrier automatic model with sunroof spotted in Bengaluru.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X