அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் கருப்பு எடிசன் மாடல் அடுத்த மாதம் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் ஒன்றான ஹாரியர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த எஸ்யூவி ரக ஹாரியர் காரை நடப்பாண்டின் ஆரம்பத்தில்தான் டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், இதனை கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற வாகன கண்காட்சியிலேயே அந்நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் ஹாரியருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவியது. ஆனால் இது முழுமையாக நீடிக்கவில்லை. புதிய எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் போன்ற கார்களின் வருகையால் ஹாரியரின் விற்பனை சற்று சரிவைக் காண ஆரம்பித்துள்ளது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆகையால், இதனை ஈடுகட்டும் விதமாக டாடா நிறுவனம், ஹாரியரில் கணிசமான அப்டேட்டுகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், பனோரமிக் சன்ரூஃப் தேர்வு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை, அக்ஸசெரீஸ் முறையிலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு டாடா வழங்கி வருகின்றது. இதுமட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்நிலையில், வாடிக்கையாளர்களை மேலும் கவரும் வகையில், டாடா ஹாரியர் எஸ்யூவியில் புதிய வண்ணமாக கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு கருப்பு எடிசன் (Black Edition) பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய வண்ணத்தால், ஹாரியர் கார் கருஞ்சிறுத்தையைப் போன்று காட்சியளிக்கின்றது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்த கருப்பு நிறம் ஹாரியன் வெளிப்புறம் மட்டுமின்றி உட்புறத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், ஹாரியரின் லெதர் இருக்கை முதல் டேஸ்போர்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் முழுக்க முழுக்க கருப்பு நிறம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆகையால், இதற்கு முன்னதாக வெளிவந்த வண்ணத் தேர்வைக் காட்டிலும் தற்போதைய கருப்பு எடிசன் ஹாரியர் மிகவும் கவர்ச்சிகரமான மாடலாக மாறியுள்ளது. அதற்கேற்ப வகையில், இதன் அலாய் வீல் டிசைன், பெடல் ஷேப்பில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீலிற்கும் கருப்பு நிறமே கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்த புதிய நிறத்திலான ஹாரியர் அண்மையில், அதன் டீலர் ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. அதில், காரின் பக்கவாட்டு வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புற தோற்றம் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் கசிந்தன.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்த புகைப்படத்தின் மூலம், ஹாரியர் கருப்பு எடிசன் மாடலில் காஸ்மெடிக் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ஸ்டாண்டர்டு ஹாரியரில் இடம்பெற்றுள்ள அதே எஞ்ஜின் மற்றும் சிறப்பம்சங்களே இதிலும் இடம்பெறுகின்றது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

புதிய கருப்பு எடிசன் ஹாரியர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இத்துடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்தில் தயாராகும் எஞ்ஜினில்தான் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்த எஞ்சின் 170 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

எம்ஜி ஹெக்டர், கியா செஸ்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் இந்த கார் அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் களமிறங்க இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை டாடா நிறுவனம் மிக விரைவில் வெளியிட உள்ளது. மேலும், ஹாரியர் எஸ்யூவிக்கு ரூ. 13 லட்சத்திலிருந்து, ரூ.16.76 லட்சம் வரையிலான விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Tata Harrier Black Edition Launching In Next Month. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X