புகழ்வாய்ந்த ஹாரியர் காருக்கு இலவச அப்டேட்டை வழங்கும் டாடா: எதற்கு தெரியுமா?

டாடா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த எஸ்யூவி ரக காரான ஹாரியர் காருக்கு இலவச அப்டேட்டை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

பட்ஜெட் ரக கார் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில், ஹாரியர் எஸ்யூவி ரக காரும் ஒன்றாக இருக்கின்றது. இந்த கார் அந்நிறுவத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

இந்த காரை டாடா நிறுவனம், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி களமிறக்கியது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

களமிறங்கிய அன்றிலிருந்து தற்போது வரை இந்த கார் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. இதனால், சில நகரங்களில் இந்த காருக்கான காத்திருப்பு காலம் தற்போது மூன்று மாதங்களாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டாடா ஹாரியர் காரில், அதன் உரிமையாளர்கள் சந்தித்து வரும் சிக்கல்கள் மற்றும் பிரச்னைகளை குறைக்கும் நடிவடிக்கையை டாடா நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

அண்மைக் காலங்களாக சர்வீஸின்போது, வாடிக்கையாளர்கள் அளித்து வந்த புகாரின்பேரில் டாடா நிறுவனம், இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றது. அந்தவகையில், டாடா ஹாரியர் காரை பயன்படுத்தி வரும், அதன் உரிமையாளர்கள் சிலர், சிறிய சிக்கலைச் சந்தித்து வந்துள்ளனர். இதனால், அந்த காரை பயன்படுத்தும்போது அசௌகரியமான அனுபவத்தை உணர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

ஆகையால், வாடிக்கையாளர்களின் இந்த அவல நிலையை கலைக்கும் விதமாக, டாடா நிறுவனம் ஹாரியர் காரில் சில அப்டேட்டுகளை செய்ய இருக்கின்றது. அதேசமயம், இந்த அப்டேட்டினை அந்நிறுவனம் இலவசமாக மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை டீம்பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

டாடா ஹாரியரில் ஏற்பட்ட கோளாறுகளாக, க்ளட்ச் பெடல் ரிடர்ன் ஸ்பிரிங், க்ளட்ச் கம்ப்ரஸ்ஸன் ஸ்பிரிங், செவரல் ஹோல் கிளாம்ப்ஸ், டெயில்கேட் ஸ்விட்ச் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் அப்டேட் சாப்ட்வேர் அப்டேட் உள்ளிட்டவை இருக்கின்றன.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

இதனையே, தற்போது டாடா நிறுவனம் இலவசமாக அப்டேட் செய்ய இருக்கின்றது. அவ்வாறு, அப்டேட் செய்யப்பட்டுகளைப் பெறவிருக்கும் பாகங்களின் புகைப்படத்தைத்தான் டீம் பிஎச்பி தளத்தின் பயன்பாட்டாளர் சவுரப்001 என்பவர் பகிர்ந்துள்ளார். இதனை நீங்கள் கீழே காணலாம்.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

அந்தவகையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டத்தின் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட உள்ளது. இந்த அப்டேட்டானது, தற்போது ஹாரியர் கார் பயன்பாட்டாளர் அனுபவித்து வரும் அசௌகரியமான அனுபவத்தை குறைக்க இது உதவும். மேலும், இது தற்போது இருக்கும் குறைவான பெர்ஃபார்மென்ஸை சீர் செய்யவும் உதவும். இதனால், தங்குதடையில்லா இன்ஃபோடெயிண்மென்ட்டின் பயன்பாட்டை அதன் உரிமையாளர் பெற முடியும்.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

இத்துடன், அதன் ஸ்டியரிங் வீல் செட்-அப்பும் சிறு அப்டேட்டைப் பெற இருக்கின்றது. அவ்வாறு நல்ல ரெஸ்பான்ஸினை வழங்கும் வகையிலான அப்டேட்டினை அது பெற இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, காரில் ஏற்படும் அதிர்வு, அதிக சப்தம், கடுமையான அனுபவம் உள்ளிட்டவற்றைக் குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

இறுதியாக, காரின் க்ளட்சை எளிதாக பயன்படுத்தும்வகையில், அதனை கூடுதல் சுலபமானதாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த அப்டேட்டுகள் அனைத்தும், டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான சர்வீஸ் மையங்களில் மட்டுமே செய்யப்பட உள்ளன.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

டாடா நிறுவனம் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை அதன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இந்நிறுவனம், இதுபோன்று வாடிக்கையாளர்களின் குறைகளைக் கண்டறிந்து, அதற்கு உடனடியாக தீர்வு காண்பது முதல் முறையல்ல. அவ்வாறு, இதற்கு முன்னதாக, அதன் தயாரிப்புகள் பலவற்றில், வாடிக்கையாளர்கள் சந்தித்த சில இடையூறுகளை அப்டேட்டாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

டாடா நிறுவனம் இந்த ஹாரியர் எஸ்யூவி ரக காரை அதன் இம்பேக்ட் 2.0 டிசைனில் உருவாக்கியுள்ளது. அந்தவகையில், ஒமெகா ஆர்கிடெக்சர் பிளாட்பாரத்தில் வைத்து அந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், ஹாரியரின் லுக் மற்றும் ஸ்டைல், துடிப்பான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

டாடா ஹாரியர் எஸ்யூவி கார், எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸஇசட் ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. சமீபத்தில் இந்த காரின் விலையை டாடா நிறுவனம் உயர்த்தியது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

அந்தவகையில், ரூ. 31 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் விலை வரையிலான விலை உயர்வை டாடா ஹாரியர் எஸ்யூவி கார் பெற்றது. இதனால், ரூ. 12.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியரின் ஆரம்பி நிலை கார் தற்போது ரூ. 12.99 லட்சமாக உயர்வைப் பெற்றுள்ளது. இவ்வாறு, இந்த வரிசையில் இருக்கும் அனைத்து வேரியண்டுகளும் விலை உயர்வைப் பெற்றிருக்கின்றது.

கூடுதல் சிறப்பான பயண அனுபவத்திற்காக இலவச அப்டேட்டை வழங்கும் டாடா...

ஹாரியர் எஸ்யூவி கார் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் தேர்வில் கிடைக்கின்றது. இது 143பிஎச்பி பவரையும், 350என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் ஹூண்டாய் காரில்

இடம்பெற்றிருப்பதைப்போன்று, 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரைப் பெற்றிருக்கின்றது. இதே அம்சம்தான் புதிய வருகையாக இருக்கும் கஸ்ஸினி மாடலில் இருக்கின்றது.

Most Read Articles
English summary
Tata Harrier Gets Free Updates. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X