டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆஹோ, ஓஹோ!

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. மேலும், முன்பதிவு எண்ணிக்கை புதிய மைல்கல்லை கடந்து அசத்தி இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆஹோ, ஓஹோ!

கடந்த ஜனவரி மாதம் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் வந்த இந்த புதிய எஸ்யூவிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆஹோ, ஓஹோ!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை இந்த புதிய டாடா எஸ்யூவி பெற்றிருக்கிறது. முன்பதிவு செய்த 2,000 வாடிக்கையாளர்களுக்கு இதுவரை டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆஹோ, ஓஹோ!

முன்பதிவு கணிசமாக இருக்கும் நிலையில், இந்த காருக்கான காத்திருப்பு காலமும் நீண்டுள்ளது. அதேநேரத்தில், முன்பதிவு செய்தவர்களுக்கு வெகு சீக்கிரமாக டெலிவிரி கொடுப்பதற்கான முயற்சிகளிலும் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. அடுத்த 4 மாதங்களுக்கு உற்பத்தியாகும் டாடா ஹாரியர்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆஹோ, ஓஹோ!

டாடா ஹாரியருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவிக்கான வரவேற்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 என்ற கார் கட்டமைப்பு கொள்கையை தழுவிய ஒமேகாஆர்சி என்ற பிளாட்ஃபார்மில்தான் டாடா ஹாரியர் உருவாக்கப்பட்டுள்ளது. லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் எஸ்யூவி உருவாக்கப்படும் அதே கட்டமைப்பு கொள்கை என்றாலும், ஹாரியர் நீளத்தில் கூடுதலாக வடிவமைக்கப்பட்டது.

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆஹோ, ஓஹோ!

அத்துடன், இந்திய சாலை நிலை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களுக்கான எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கார் குறித்த தகவல் கசியத் துவங்கியது முதலே வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலும், எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆஹோ, ஓஹோ!

டாடா ஹாரியர் எஸ்யூவி 4,598 மிமீ நீளமும், 1,894 மிமீ அகலமும், 1,706 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல் பேஸ் 2,741 மிமீ ஆக உள்ளது. இந்த கார் 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இந்த பரிமாணங்கள் மூலமாக, சிறப்பான இடவசதி, இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற அம்சங்களை பெற்ற எஸ்யூவி மாடலாக இருக்கிறது.

நேரடி போட்டியாளராக கருதப்படும் ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் ஃபியட் நிறுவனத்தின் அதே 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆஹோ, ஓஹோ!

இந்த எஸ்யூவியில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளையும், மிரர் லிங்க் செயலியையும் சப்போர்ட் செய்யும்.

இந்த காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் ஆகியவை விலை உயர்ந்த வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆஹோ, ஓஹோ!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி பாதுகாப்பு அம்சங்களிலும் சிறந்த மாடல். இந்த எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரோல்ஓவர் மிட்டிகேஷன், பிரேக் அசிஸ்ட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ஆகிய வேரியண்ட்டுகளில் விருப்பம்போல் தேர்வு செய்யும் வாய்ப்புள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர், நிஸான் கிக்ஸ் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடுகிறது.

Most Read Articles
English summary
Tata Harrier has bagged Over 10,000 Bookings since its launch in January 2019.
Story first published: Saturday, March 16, 2019, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X