வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, நெக்ஸான் மற்றும் ஹெக்ஸா உள்ளிட்ட கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த கார்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களை வழங்கி வருகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

ஆனால் ஹாரியர் காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ட்யூயல் டோன் கலர் ஆப்ஷனை வழங்காதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எஸ்யூவி ரக காரான டாடா ஹாரியர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகமானது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் காரில் ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களை வழங்கவில்லை. மாறாக மோனோ டோன் கலர் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

டாடா ஹாரியர் காரில் ட்யூயல் டோன் கலர் ஆப்ஷனை அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஒரு சில ஹாரியர் உரிமையாளர்களோ, ஆஃப்டர் மார்க்கெட் வழியில் ட்யூயல் டோன் கலரை அப்ளை செய்து கொண்டனர்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

இந்த சூழலில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் லைன் அப்பில் இறுதியாக ட்யூயல் டோன் கலர் ஆப்ஷனை தற்போது சேர்த்துள்ளது. ஆர்கஸ் ஒயிட் மற்றும் கலிஸ்டோ காப்பர் கலர் ஆப்ஷன்களுடன் ட்யூயல் டோன் ஹாரியர் வந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

ட்யூயல் டோன் கலர் ஆப்ஷனை சேர்த்திருப்பதை தவிர, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் காரில் வேறு எவ்விதமான மாற்றங்களையும் செய்யவில்லை. இது தொடர்பாக ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டது முதலே ஹாரியரின் விற்பனை சிறப்பாகதான் இருந்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 1,800 ஹாரியர் கார்களை விற்பனை செய்து வருகிறது. தற்போதைய நிலையில் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் கார் டாடா ஹாரியர்தான்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

நேரடி போட்டியாளர்களான ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் ஒப்பிடும் போது, டாடா ஹாரியர் காரின் விற்பனை மிகவும் அதிகம். ஆனால் தற்போது டாடா ஹாரியர் காரின் விற்பனை குறையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது டாடா ஹாரியர் காரின் விற்பனையில் தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

ஏனெனில் டாடா ஹாரியர் காரில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வசதிகளுடன் முதல் நாள் முதலே எம்ஜி ஹெக்டர் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கு பெட்ரோல் இன்ஜின், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் சன் ரூஃப் போன்ற வசதிகளை உதாரணமாக கூறலாம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

எனவே டாடா ஹாரியர் காருக்கு, எம்ஜி ஹெக்டர் அச்சுறுத்தலாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் காரில் ட்யூயல் டோன் கலர் ஆப்ஷனை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

முன்னதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப ஹாரியர் இன்ஜினை மேம்படுத்தும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. அத்துடன் ஹாரியர் பெட்ரோல், ஹாரியர் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளும் தொடங்கி விட்டன.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

இதன் மூலமாக எம்ஜி ஹெக்டர் வழங்கவுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இவை எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

இதனிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக செய்யவுள்ள மிகப்பெரிய லான்ச் அல்ட்ராஸ்தான். பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரான டாடா அல்ட்ராஸ், வரும் வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

மாருதி சுஸுகி பலேனோ, சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார் மாடல்களுடன், டாடா அல்ட்ராஸ் போட்டியிடவுள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

அல்ட்ராஸ் காருக்கு பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் காரின் 7 சீட்டர் வேரியண்டை களத்தில் இறக்கவுள்ளது. இந்த கார் டாடா பஸ்ஸார்டு என்ற பெயரில், 2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

2019 ஜெனீவா மோட்டார் ஷோ நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் டாடா ஹாரியர் காரின் 7 சீட்டர் வெர்ஷனும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

அனேகமாக நடப்பு ஆண்டு இறுதியில் டாடா ஹாரியர் காரின் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பாகவும் தற்போது வரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...

டாடா ஹாரியர் காரின் 7 சீட்டர் வெர்ஷனை போலவே, எம்ஜி ஹெக்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷனும் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்ஜி ஹெக்டரின் 7 சீட்டர் வெர்ஷன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Harrier Is Now Available With Dual Tone Color Option. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X