ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம், இந்திய மார்க்கெட்டில் எஸ்யூவி ரக காரை களமிறக்குகிறது. விலை குறைவு என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியுள்ளது.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). Morris Garages என்பதன் சுருக்கமே எம்ஜி. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் எம்ஜி நிறுவனம் தற்போது இந்தியாவிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளது. இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் தனது முதல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹெக்டர்தான் (MG Hector) எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள முதல் கார். இது எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வரும் மே மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும் எம்ஜி ஹெக்டர் கிடைக்கும். இதில், பெட்ரோல் இன்ஜினானது 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு யூனிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்ததாக இருக்கும்.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படவுள்ளது. ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே சமயம் டீசல் இன்ஜினானது 2 லிட்டர் யூனிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வாரி வழங்கும்.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

இது டர்போ டீசல் இன்ஜின் ஆகும். பெட்ரோல் இன்ஜினை போல் டீசல் இன்ஜினிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ்தான் வழங்கப்படவுள்ளது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படாது. அனேகமாக அடுத்த ஆண்டுதான் (2020) டீசல் இன்ஜினில், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரானது 5 சீட்டர் மாடல் ஆகும். இந்தியாவில் டாடா ஹாரியர் (Tata Harrier), மஹிந்திரா எக்ஸ்யூவி500 (Mahindra XUV500) மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு எம்ஜி ஹெக்டர் கடும் சவாலை அளிக்கவுள்ளது. இது 5 சீட்டர் மாடல்தான் என்றாலும், டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரியதாக இருக்கும்.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

இதன்மூலம் சௌகரியமாக அமர்ந்து பயணிக்கலாம் என்பதுடன் பொருட்களை வைத்து கொள்வதற்கு நிறைய இட வசதியும் கிடைக்கும். எம்ஜி நிறுவனமானது ஹெக்டர் எஸ்யூவி காரின் 7 சீட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனால் 7 சீட்டர் மாடல், 2020ம் ஆண்டுதான் லான்ச் செய்யப்படும்.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. ஹெக்டர் எஸ்யூவி மூலம் இதனை சரியாக பயன்படுத்தி கொண்டு இந்தியாவில் எம்ஜி நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெக்டர் எஸ்யூவியை களமிறக்குவதற்கான நாள் நெருங்கி வருவதால், இந்தியா முழுவதும் டீலர்ஷிப்களை அமைக்கும் பணிகளை எம்ஜி நிறுவனம் துரிதப்படுத்தியுள்ளது.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

அனேகமாக ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, குறைந்தபட்சம் 50 டீலர்ஷிப்களாவது அமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஹெக்டர் எஸ்யூவி காரை தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதுவும் எஸ்யூவி ரக கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யூவி 2019ம் ஆண்டுன் இறுதியில் அல்லது 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு களமிறங்கும். இதுதவிர ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கார் அளவுடைய மற்றொரு எஸ்யூவி ரக காரை இந்தியாவில் களமிறக்குவதற்கும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டை எம்ஜி நிறுவனம் பிடிக்க முயல்வதையே இது காட்டுகிறது. இதற்கு ஹெக்டர் ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கும். எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு அறிமுகமாக இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட எம்ஜி ஹெக்டர் காரின் வீடியோ டிவிசியை நீங்கள் கீழே காணலாம்.

எனினும் இதன் விலை மிகவும் அதிகமாக இருக்குமோ? என்ற தயக்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்களுக்கு நிகராகதான் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் விலை இருக்கும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டீம் பிஎச்பி தள உறுப்பினர் ரவீன்அவி மூலமாக இந்த தகவல் தெரியவந்துள்ளது.

ஜாக்பாட்... இந்த கார் இந்தியாவிற்கு இவ்வளவு குறைவான விலையில் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை...

அதாவது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரானது ரூ.14-18 லட்சம் வரையிலான விலைகளில்தான் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரானது ரூ.12.69-16.25 லட்சம் என்ற விலைகளிலும், மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரானது ரூ.12.72-19.48 லட்சம் என்ற விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலம் ஹலோல் (Halol) நகரில் உள்ள ஜென்ரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனத்தின் தொழிற்சாலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி உருவாக்கப்படவுள்ளது.

Note: Tata Harrier Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Tata Harrier, Mahindra XUV500 Rival MG Hector SUV Expected Price, Features. Read in Tamil
Story first published: Monday, March 25, 2019, 20:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X