இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்!

டாடா நிறுவனம் காம்பேக்ட் ரகத்திலான மினி ட்ரக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்!

டாடா நிறுவனம், அதன் புதிய தலைமுறை கமர்சியல் ரகத்திலான இன்ட்ரா எனும் புதிய மினி ட்ரக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ட்ரக்கை எஸ்சிவி இன்டஸ்ட்ரீஸுக்கு தேவையான அளவில் நவீனபடுத்தி அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. அதற்கேற்ப இன்ஜினியரிங் மற்றும் பாடி அமைப்பு இந்த மினி ட்ரக் பெற்றிருக்கின்றது.

இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்!

காம்பேக்ட் ரகத்தில் உருவாகியிருக்கும் இந்த மினி ட்ரக், அதிக இட வசதி கொண்டதாகவும், சிறந்த பவரை வெளிப்படுத்தும் வகையிலும், அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ட்ரக் அதிக மைலேஜை கொடுக்கும் திறனையும் பெற்றுள்ளது.

இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்!

அந்தவகையில், டாடா இன்ட்ரா மினி ட்ரக்கின் நீளம் 2,512 எம்எம்-ஆகவும், அகலம் 1,602எம்எம் ஆகவும் இருக்கின்றது. இதனால், இந்த மினி ட்ரக்கில் கூடுதல் இட வசதி கிடைக்கின்றது. வி10 மற்றும் வி20 ஆகிய இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த ட்ரக், ரூ. 5.35 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்!

டாடா நிறுவனம் இந்த ட்ரக்கை வருகின்ற வருடம் அமலுக்குள்ளாக இருக்கும் மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயார் செய்துள்ளது. அந்தவகையில், அதன் எஞ்ஜின்களை பிஎஸ்-6 தரத்திற்கு ஏற்ப ட்யூன் அப் செய்துள்ளது.

இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்!

இதில், இன்ட்ரா வி20 மினி ட்ரக்கில் 1400சிசி திறன் கொண்ட டிஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 52KW (70எச்பி) பவரை வெளிப்படுத்தும். அதேபோன்று, வி10 மாடலில் 800 சிசி திறன் கொண்ட டிஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 KW (40எச்பி) திறனை வெளிப்படுத்தும். இத்துடன் இந்த மினி ட்ரக்கில் பவர் ஸ்டியரிங் வழங்கப்பட்டுள்ளது. இது 4.75 மீட்டர் இடைவெளியைக் கூட எளிதில் வளைத்து திருப்ப உதவும். இத்துடன், இதன் எஞ்ஜின்கள் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மினி ட்ரக்கின் கட்டுமானத்தை ரோபஸ்ட் பாடி ஷெல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதியாக இஎல்ஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய சீட்பெல்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ட்ரக்கின் உள்ளே சிறிய அளவிலான கேபின் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மேம்படுத்தப்பட்ட எர்கோனோமிக்ஸ் மற்றும் என்விஎச் லெவல்கள், சோர்வை ஏற்படுத்தாத பயண முறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், நவீன வசதிகளாக இன்ட்ரா மினி ட்ரக்கில் மொபைல் சார்ஜிங் பாயிண்ட், எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பெரிய அளவிலான ஹெட்லேம்ப், வின்ட் ஸ்கிரீன், லாக்கேஜ் க்ளோவ் பாக்ஸ், டேஸ் போர்ட் ஸ்டோரேஜ், டூர் ட்ரிம்ஸ், ஹெட்ரெஸ்ட், ப்ரீ பிட்டெட் மியூஸிக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், பிரீமியம் வேரியண்டில் ஏசி ஆப்ஷன் வழங்கப்பட இருக்கின்றது.

இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மினி ட்ரக்கின் கியர் லிவர் டேஸ் போர்டில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ட்ரக் நீண்ட தூர பயணத்திற்கு பயன்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. குறைவான மெயின்டெனன்ஸ் முறையில் களமிறங்கி இருக்கும் இன்ட்ரா ட்ரக்கிற்கு, டாடா நிறுவனம், 2 வருடங்கள் அல்லது 72,000 கிமீட்டர்கள் வாரண்டி வழங்க இருக்கின்றது. மலிவான விலையில் பல்வேறு அம்சங்களைக் கொண்டு களமிறங்கும் இந்த மினி ட்ரக் தான் இனி இந்தியச் சாலைகளை ஆள இருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Intra Mini Truck Launch. Read In Tamil.
Story first published: Friday, May 24, 2019, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X