மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

மாருதி ஆல்ட்டோ (Maruti Alto) காரை தெரியாதவர்கள் யாரும் இங்கு இருக்கவே முடியாது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை, தொடர்ந்து 13 வருடங்களாக தன் கைவசம் வைத்திருந்த கார்தான் மாருதி ஆல்ட்டோ. ஆனால் நம்பர்-1 பட்டத்தை, மாருதி டிசையர் (Maruti Dzire) காரிடம், கடந்த 2018ம் ஆண்டு பறிகொடுத்தது.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு மொத்தம் 2.56 லட்சம் மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அதே ஆண்டில் விற்பனையான மாருதி டிசையர் கார்களின் எண்ணிக்கையோ 2.64 லட்சம். மாருதி ஆல்ட்டோ தொடர்ந்து 13 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த கால கட்டத்தில் அதனை எதிர்க்க சரி நிகரான போட்டியாளர்கள் யாருமே இல்லை.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

இதனால்தான் மாருதி ஆல்ட்டோ காரால் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால் நானோ (Tata Nano) காரின் உதவியுடன் மாருதி ஆல்ட்டோவை எதிர்க்க துணிந்தது இந்தியாவின் டாடா மோட்டார்ஸ். டாடா நானோ காருக்கு அறிமுகமே தேவையில்லை. உலகின் மிக மலிவான கார் என்ற அடையாளத்துடன் கம்பீரமாக களமிறங்கியது டாடா நானோ.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

இந்திய மக்களுக்கு 1 லட்ச ரூபாய் என்ற மிக குறைவான விலையில் கார் வழங்க வேண்டும் என்ற டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் கனவின் விளைவாக பிறந்ததுதான் டாடா நானோ. ஆனால் ரத்தன் டாடாவின் கனவு திட்டத்திற்கு பரிசாக கிடைத்தது என்னவோ படுதோல்விதான். மலிவான விலை கார் என்றாலும், அவ்வளவு எளிதாக மறக்க முடியாத தோல்வியை சந்தித்தது டாடா நானோ.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

நானோ கொடுத்த படுதோல்வி காரணமாக கடந்த சில வருடங்களாக இந்த செக்மெண்ட்டில் இருந்து சற்று விலகியே இருந்தது டாடா. ஆனால் டாடா நிறுவனம் தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்து வரும் சிறிய ரக காரான டியாகோ (Tata Tiago) பிரம்மாண்ட வெற்றியை ருசித்துள்ளது. இதனால் டாடா கூடாரம் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

எனவே புதிய சிறிய ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை டாடா நிறுவனம் மீண்டும் தூசி தட்டி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா நிறுவனத்தின் லைன் அப்பில் இந்த கார், டியாகோவிற்கு கீழாக நிலை நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

டாடா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் வகை காரான டியாகோ, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான கார்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 6 மாதங்களில், சராசரியாக ஒவ்வொரு மாதமும், 7,600 யூனிட்களுக்கும் மேற்பட்ட டாடா டியாகோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

தற்போது மாருதி ஆல்ட்டோ முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் மலிவான ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில், கார் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாகவும், டியாகோ வெற்றி கொடுத்த நம்பிக்கை காரணமாகவும், மலிவான விலையில் ஹேட்ச்பேக் ரக காரை களமிறக்க டாடா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

டாடா நிறுவனத்தின் புதிய மலிவான ஹேட்ச்பேக் வகை காரானது, ஆல்பா (ALFA-Agile Light Flexible Advanced) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் புதிய மாடல் கார்களை உருவாக்க ஆல்பா பிளாட்பார்ம்மை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

டாடா நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் அடுத்த தலைமுறை மாடல்களை உருவாக்கவும் ஆல்பா பிளாட்பாரம்தான் உபயோகிக்கப்படும் என கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இனி ஆல்பா மற்றும் ஒமேகா ஆகிய 2 முக்கிய பிளாட்பார்ம்களில்தான் முழு கவனத்தையும் செலுத்தவுள்ளது.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

சிறிய கார்களை உருவாக்க ஆல்பா பிளாட்பார்மும், எஸ்யூவி போன்ற பெரிய கார்களை தயாரிக்க ஒமேகா பிளாட்பார்மும் பயன்படுத்தப்படவுள்ளன. இதனிடையே டாடா நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் காரானது, குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

மாருதி ஆல்ட்டோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கு இது கடும் போட்டியை வழங்கும். என்றாலும் இந்த கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தற்போதைக்கு வெளியாகவில்லை. டாடா நிறுவனத்தின் புதிய எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே வருங்காலத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...

எனவேதான் புதிய எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா நிறுவனம் களமிறக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. எலெக்ட்ரிக் எதிர்காலத்தை மனதில் வைத்தே, மேற்குறிப்பிட்ட ஆல்பா மற்றும் ஒமேகா ஆகிய இரண்டு பிளாட்பார்ம்களும் டிசைன் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tata Motors Plans To Launch New Affordable Hatchback- Will Rival Maruti Alto, Renault Kwid. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X