டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அல்ட்ராஸ் காருடன் களமிறங்க உள்ளது. அட்டகாசமான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் சவாலான விலையில் இந்த புதிய டாடா அல்ட்ராஸ் கார் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

அண்மையில்தான் டாடா அல்ட்ராஸ் காருக்கான பிரத்யேக இணைய பக்கத்தை டாடா மோட்டார்ஸ் துவங்கி வைத்தது. இந்த நிலையில், அந்த இணையப் பக்கத்தில் தற்போது புதிய படங்கள் மற்றும் தகவல்களையும் வெளியிட்டு, கார் வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டி இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் ஃப்ரேம் இல்லாத வைப்பர்கள் இடம்பெற இருக்கின்றன. அதேபோன்று, சைடு மிரர்கள் கிளாஸ் பிளாக் எனப்படும் மிகவும் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கின்றன. இது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

அடுத்து காரின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் இரட்டை வண்ண டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, பின்னேந்தலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் வடிவமைப்பில், க்ரோம் அலங்காரமும் கவர்ச்சியாக இருக்கின்றது. கருப்பு வண்ண கூரை இடம்பெற்றுள்ளது.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் புதிய படங்களில் ஒன்று, இன்டீரியரானது டியூவல் டோன் எனப்படும் இரட்டை வண்ண கலவையில் கொடுக்கப்பட்டு இருப்பதும் தெரிகிறது. ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் கதவு தாழ்ப்பாள்களிலும் க்ரோம் பூச்சூ இடம்பெற்றுள்ளன.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது. ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இடம்பெறும்.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

டாடா நெக்ஸான் காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் வர இருக்கிறது. இந்த எஞ்சின் 92 பிஎச்பி பவரையும், 201 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

சாதாரண பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். பெட்ரோல் எஞ்சின் தேர்வு சற்று தாமதமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

சாதாரண பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் வர இருக்கிறது. டாடா அல்ட்ராஸ் காருக்கான 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய படங்கள் மற்றும் தகவல்கள்!!

புதிய டாடா அல்ட்ராஸ் கார் வரும் ஜூலை மாத மத்தியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டா ஜாஸ், மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்ஸா கார்களுக்கு கடும் போட்டியை அளிக்கும்.

Most Read Articles
English summary
Tata Motors has updated the official website of the Altroz with more images today.
Story first published: Monday, June 24, 2019, 16:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X