புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்!

டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்!

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் எச்2எக்ஸ் என்ற பெயரிலான மினி எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போதே, இந்த எஸ்யூவி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. கச்சிதமாகவும், கம்பீரமாகவும் இதன் தயாரிப்பு நிலை மாடல் இருக்கும் என்று யூகிக்க முடிந்தது.

புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்!

இந்த புதிய கான்செப்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலானது ஹார்ன்பில் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், டாடா ஹார்ன்பில் எஸ்யூவியின் அறிமுகத்தை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்!

அல்ட்ராஸ் என்ற பெயரில் வரும் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார், பஸ்ஸார்டு என்ற பெயரில் வரும் ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல்களின் அறிமுகத்தை தொடர்ந்து புதிய ஹார்ன்பில் எஸ்யூவியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் இந்த புதிய மினி எஸ்யூவி கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஹாரியர் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் புதிய ஹார்ன்பில் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஹாரியர் போன்ற முகப்பு டிசைனை புதிய ஹார்ன்பில் எஸ்யூவியில் இடம்பெற இருக்கிறது. வசீகரமான பம்பர் அமைப்பு, அரை சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள், பாடி கிளாடிங் சட்டங்கள் என இந்த காரின் டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கும்.

புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்!

டாடா எச்2எக்ஸ் கான்செப்ட் மாடலின் டிசைன் தாத்பரியங்களை புதிய ஹார்ன்பில் எஸ்யூவி 70 முதல் 80 சதவீதம் வரை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த கார் 2.5 மீட்டர் வீல் பேஸ் பெற்றிருக்கும். இந்த கார் 1.8 மீட்டர் அகலமும், 1.6 மீட்டர் உயரத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்!

புதிய டாடா ஹார்ன்பில் மினி எஸ்யூவியில் 1.2 லிட்டர்ர பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் அறிமுகத்தை உறுதி செய்தது டாடா மோட்டார்ஸ்!

புதிய டாடா ஹார்ன்பில் மினி எஸ்யூவி கார் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மஹிந்திரா கேயூவி100 மற்றும் மாருதி இக்னிஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Tata Motors has revealed that it plans to launch the production version of the H2X concept in India.
Story first published: Wednesday, July 24, 2019, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X