பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக ரூ.1,200 கோடியை முதலீடு செய்த டாடா மோட்டார்ஸ்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு ரூ.1,200 கோடியை டாடா மோட்டார்ஸ் முதலீடு செய்துள்ளது.

பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக ரூ.1,200 கோடியை முதலீடு செய்த டாடா மோட்டார்ஸ்!

தற்போது பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிகள் அமலில் உள்ளன. அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தால் மாசு உமிழ்வு பெரு நகரங்களின் சுவாசப் பிரச்னையாக மாறி இருக்கிறது. இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் விதத்தில், அடுத்து பிஎஸ்-5 மாசு உமிழ்வு விதிகளுக்கு பதிலாக நேரடியாக பிஎஸ்- மாசு உமிழ்வு விதிகளை அமல்படுத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக ரூ.1,200 கோடியை முதலீடு செய்த டாடா மோட்டார்ஸ்!

அத்துடன், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்துடன் கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.

பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக ரூ.1,200 கோடியை முதலீடு செய்த டாடா மோட்டார்ஸ்!

மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணையான தரத்துடன் கார்களை அறிமுகம் செய்ய துவங்கிவிட்டது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் எஞ்சின்களை பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக ரூ.1,200 கோடியை முதலீடு செய்த டாடா மோட்டார்ஸ்!

தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டெர் பட்செக் கூறுகையில்," பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக கார் எஞ்சின்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, ரூ.1,200 கோடியை முதலீடு செய்யப்பட்டுள்ளது," என்று கூறி இருக்கிறார்.

பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக ரூ.1,200 கோடியை முதலீடு செய்த டாடா மோட்டார்ஸ்!

ஒரே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் செய்த அதிக அளவு முதலீடாக இது தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று, அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது வர்த்தகத்திற்கு தக்கவாறு, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களை தயாரிப்பதற்காக பெரும் முதலீடுகளை செய்து வருகின்றன. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் மூலமாக புதிதாக தயாரிக்கப்படும் கார்களின் நச்சுப் புகை வெளியேற்ற அளவு வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது.

பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக ரூ.1,200 கோடியை முதலீடு செய்த டாடா மோட்டார்ஸ்!

பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக கார் நிறுவனங்கள் பெரும் முதலீடுகளை செய்து வருகின்றன. பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது.

பிஎஸ்-6 எஞ்சின்களுக்காக ரூ.1,200 கோடியை முதலீடு செய்த டாடா மோட்டார்ஸ்!

ஆனால், அதற்கு தக்கவாறு விற்பனை இருக்குமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. மேலும், பிஎஸ்-6 கார்களின் விலையை முதலீட்டுக்கு தக்கவாறு கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. எனவே, பெட்ரோல் கார்களை மட்டுமே உற்பத்தி செய்யவும், டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Most Read Articles
English summary
Tata Motors has revealed, more than ₹1,200 crore funded for the BS-6 transition.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X