ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

டாடா நானோ கார் ஹெலிகாப்டராக மாறியுள்ளது. இதுகுறித்த ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார் நானோ. இந்திய மக்களுக்கு 1 லட்ச ரூபாய் என்ற மிக மிக மலிவான விலையில் கார் கொடுத்தே ஆக வேண்டும் என்ற அவரது பெரும் முயற்சியின் விளைவாக மார்க்கெட்டிற்கு வந்த கார்தான் நானோ. நானோ கார் முயற்சியை கையில் எடுத்தபோது ஒட்டுமொத்த உலகமே ரத்தன் டாடாவை ஆச்சரியத்துடன் பார்த்தது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

புதிய முயற்சிகளுக்கு கேலி, கிண்டல்கள் வருவது என்பது இயல்பான ஒன்றுதான். நானோ கார் முயற்சிக்கும் கூட அப்படித்தான் வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு கார் என்பதெல்லாம் சாத்தியமே அல்ல என்று பலர் கூறினர். ஆனால் பல்வேறு போராட்டங்கள், தடைகளை கடந்து, வாக்குறுதி கொடுத்தபடியே 1 லட்ச ரூபாய் என்ற ஆச்சரியமான விலையில் டாடா நானோ அறிமுகமானது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

இந்திய மக்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தது இந்த காருக்காகதான். உலகின் மிக மலிவான விலை கார் என்றும் கூட நானோவை சொல்லலாம். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகதான் சென்றது. ஆனால் அதன்பின் நானோ விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக சரிவடைய தொடங்கியது. பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எழுந்த சந்தேகம் இதற்கு மிக முக்கியமான காரணம்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

நாட்கள் செல்ல செல்ல நானோ காரின் உற்பத்தியால் டாடா நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட தொடங்கியது. இருந்தாலும் நானோ கார் உற்பத்தி, விற்பனையை நிறுத்துவதா? வேண்டாமா? என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குள்ளேயே ஏகப்பட்ட குழப்பங்கள். காரணம் இது ரத்தன் டாடாவின் கனவு கார்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

ஆரவாரமாக வந்தாலும் நானோ படுதோல்வியடைந்து விட்டது என்பதே உண்மை. ஆனால் ரத்தன் டாடாவின் முயற்சியை நிச்சயமாக பாராட்டித்தான் ஆக வேண்டும். அதேபோல் மிதிலேஷ் பிரசாத்தின் முயற்சியையும் நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும். எதற்காக என கேட்கிறீர்களா? டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் மிதிலேஷ் பிரசாத். அதற்காகதான்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

பீகார் மாநிலத்தில் உள்ள சப்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்த மிதிலேஷ் பிரசாத். இவரிடம் டாடா நானோ கார் ஒன்று உள்ளது. அதனை ஹெலிகாப்டராக மாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மிதிலேஷ் பிரசாத். ரோட்டார் பிளேடு, வால், டெயில் பூம் மற்றும் ரோட்டார் மாஸ்ட் ஆகியவற்றுடன் தனது காருக்கு ஹெலிகாப்டர் போன்ற லுக்கை மிதிலேஷ் பிரசாத் வழங்கியுள்ளார்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

வெளிப்புறம் மட்டுமல்ல. மிதிலேஷ் பிரசாத் தனது டாடா நானோ காரின் இன்டீரியரையும் ஹெலிகாப்டரை போல் 'கஸ்டமைஸ்' செய்துள்ளார். அத்துடன் புத்தம் புதிய தோற்றம் அளிக்கும் வகையில் பெயிண்ட்டும் செய்யப்பட்டுள்ளது. மிதிலேஷ் பிரசாத்தின் ஹெலிகாப்டர்-கார் வீதியில் வந்தால், அனைவருக்கும் ஆச்சரியம் தொற்றிக்கொள்கிறது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

குழந்தைகளோ பின்னால் ஓடி வர தொடங்கி விடுகின்றனர். 2, 3 தசாப்தங்களுக்கு முன் அம்பாஸிடர் காரை பார்த்தால், நாம் எப்படி பின்னாலேயே ஓடுவோம். அதுபோலதான் மிதிலேஷ் பிரசாத்தின் ஹெலிகாப்டர் காரை பார்த்தாலும் குழந்தைகள் பின்னாலேயே ஓடி வருகின்றனர். மிதிலேஷ் பிரசாத்தின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு காரணம் என்ன தெரியுமா?

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

பைலட் ஆக வேண்டும் என்பதுதான் மிதிலேஷ் பிரசாத்தின் கனவு. ஆனால் மிதிலேஷ் பிரசாத்தால் தனது பைலட் கனவை நிறைவேற்ற முடியவில்லை. இதில் தோல்வியடைந்ததால்தான் ஹெலிகாப்டர் போன்ற காரை உருவாக்கியதாக மிதிலேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். அவரது ஹெலிகாப்டர்-கார் உலா வரும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

எனினும் ஹெலிகாப்டரில் பறப்பது போன்று மிதிலேஷ் பிரசாத் கற்பனை மட்டுமே செய்து கொள்ள முடியும். ஆம், இந்த கார் சாலைகளில் மட்டுமே ஓடும். பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் போலவே இருந்தாலும், இதற்கு பறக்கும் திறன் கிடையாது. ஆனால் தனது கனவை நிறைவேற்றி கொள்வதற்காக, இதுபோன்ற முயற்சிகளை செய்யும் முதல் நபர் என மிதிலேஷ் பிரசாத்தை கூற முடியாது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

வட கிழக்கு சீனாவை சேர்ந்த ஸூ யுவே என்ற விவசாயியும் கூட தனது கனவை நிறைவேற்றும் நோக்கில் இதுபோன்ற வித்தியாசமான முயற்சி ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் பறக்க வேண்டும் என்பது ஸூ யுவேவின் கனவு. அதுவும் சொந்த விமானத்தில்!!

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

ஆனால் தனது கனவை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஏர்பஸ் ஏ320 (Airbus A320) போல் ஒரு விமானத்தையே அவர் உருவாக்கினார். பார்ப்பதற்கு அச்சு அசலாக ஏர்பஸ் ஏ320 போலவே அந்த விமானம் இருந்தது. இந்த திட்டத்திற்காக தனது சேமிப்பில் இருந்த 2.6 மில்லியன் யுவானுக்கும் (USD 374,000) மேற்பட்ட தொகையை அவர் செலவிட்டார்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

இந்திய மதிப்பில் சொல்வதென்றால், கிட்டத்தட்ட 2.65 கோடி ரூபாய்க்கும் மேல். ஆனால் மிதிலேஷ் பிரசாத் தனது ஹெலிகாப்டர் காரை உருவாக்க எவ்வளவு செலவு செய்தார்? என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக விவசாயி ஸூ யுவே உருவாக்கிய விமானம் பறப்பதற்கு பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

அதற்கு பதிலாக அதனை ஹோட்டல் போல் மாற்றி, விருந்தினர்களை விழுந்து விழுந்து கவனிக்க இருப்பதாக ஸூ யுவே தெரிவித்திருந்தார். இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளும், அதற்கு அதனை செய்தவர்கள் சொல்லும் காரணங்களும் அனைவரின் கவனத்தையும் சட்டென ஈர்த்து விடுகின்றன. தற்போது மிதிலேஷ் பிரசாத்தின் ஹெலிகாப்டர்-கார் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Image Courtesy: Ruptly

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

மிதிலேஷ் பிரசாத் எனும் இளைஞர் டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாற்றி அசத்தியுள்ள நிலையில், மற்றொரு மெக்கானிக் ஒருவரோ ரோல்ஸ்ராய்ஸ் காரையே சொந்தமாக வடிவமைத்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

ஆம், உண்மைதான். ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்த இளம் மெக்கானிக் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

உலகின் அனைத்து தரப்பினரின் கனவு காராக ரோல்ஸ்ராய்ஸ் விளங்குகிறது. பணம் இருந்தாலும் ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்குவது பலருக்கு பகல் கனவாகவே இருக்கிறது. ஏனெனில், அந்த காரை வாங்குவதற்கான சட்டத்திட்டங்களும், பின்புல ஆராய்ச்சியும் தடை கற்களாக இருக்கின்றன.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

இந்த நிலையில், சிறு வயது முதலே ரோல்ஸ்ராய்ஸ் கனவில் இருந்த இளம் மெக்கானிக் ஒருவர் அதனை சொந்தமாக தயாரித்து அசத்தியுள்ளார். கஜகஸ்தான் நாட்டின் கரகண்டா பகுதியை சேர்ந்த ரஸ்லன் முகனோவ் என்ற அந்த மெக்கானிக்கின் கைவண்ணத்தில் உருவான ரோல்ஸ்ராய்ஸ் காரின் படங்களையும், கூடுதல் தகவல்களையும்தான் நாம் பார்க்க போகிறோம்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

கனவு கார்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கனவு ரோல்ஸ்ராய்ஸ் கார் உருவான விதத்தை காட்டும் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

சிறு வயது கனவு

பள்ளியில் படிக்கும்போது முகனோவ் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வாங்க வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்து வந்துள்ளார். அந்த ஆர்வம் காரணமாக வாகன மெக்கானிக் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மேலும், ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்குவது சாத்தியமில்லை என்று உணர்ந்த பின் இந்த முயற்சியை கையிலெடுத்துள்ளார்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

பென்ஸ் கார்

பழைய பென்ஸ் 190இ வி12 காரை வாங்கி, அதற்கு ரோல்ஸ்ராய்ஸ் பாடியை செதுக்கி பொருத்தியுள்ளார்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

வடிவமைப்பு

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரின் புகைப்படங்களை வைத்து ஸ்கெட்ச் போட்டு இந்த காரை உருவாக்கியுள்ளார். ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை அப்படியே காப்பியடிக்காமல் தனது மனதில் பட்ட கனவு ரோல்ஸ்ராய்ஸ் உருவத்தை அப்படியே நிஜமாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

நிதி ஆதாரம்

இந்த காரை வடிவமைப்பதற்கு போதிய நிதி இல்லாததால் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த காரை அவரால் வடிவமைக்க முடியவில்லை. ஆனால், இடைவிடாத முயற்சியின் பலனாக அந்த கார் இறுதி வடிவம் பெற்றுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

உதவி இல்லை

இந்த காரை வடிவமைப்பதாக சொன்னபோது முகனோவ் சகோதரர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட யாரும் உதவி செய்ய முன்வராமல் கேலி பேசியுள்ளனர். ஆனால், இந்த கார் இறுதிக் கட்டத்தை அடைந்தபோது அனைவரும் பாராட்டியுள்ளனர்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

பானட்டில் பருந்து சிலை

ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் பானட்டின் முன்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்பிரிட் ஆஃப் எக்டஸி சிற்பத்துக்கு பதிலாக இவர் சோவியத் யூனியன் சின்னமான கழுகு சிலையை காரில் பொருத்தி அழகு பார்த்துள்ளார்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

செலவு

பழைய பென்ஸ் காரை இதுபோன்று ரோல்ஸ்ராய்ஸ் காராக மாற்றுவதற்கு 3,000 டாலர் செலவு பிடித்ததாக முகனோவ் தெரிவித்துள்ளார்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

வாடகைக்கு...

இந்த காரை பலர் திருமண நிகழ்வு உள்ளிட்ட விசேஷங்களுக்கு வாடகைக்கு எடுத்துச் செல்கின்றனராம்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

செலிரிபிரிட்டி

இந்த காரை வடிவமைத்த பின்னர் அந்த பகுதியின் நட்சத்திரமாக இவர் ஜொலித்து வருகிறார். சில விளம்பர தட்டிகளில் கூட இவரது படத்தை போட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு பிரபலமாக மாறியுள்ளார். ஒரு வோட்கா விளம்பரத்தில் முகனோவ் இருப்பதை காணலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வடிவமைத்து அசத்திய மெக்கானிக்!

மிதிலேஷ் பிரசாத் மற்றும்ரஸ்லன் முகனோவ் போன்ற இளைஞர்கள் உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கின்றனர். கார்களை இவ்வாறு மாடிபிகேஷன் செய்வதற்கு தனித்திறமை கண்டிப்பாக வேண்டும். அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

Most Read Articles
English summary
Tata Nano Car Converted Into A Helicopter : Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X