இந்த நிலைக்கு வந்த பின்னரும் நானோ காரை கைவிடாமல் அடம் பிடிக்கும் டாடா!

நானோ கார் விற்பனையில் மோசமான சூழலில் இருந்தபோதிலும், அதனை கைவிடாமல் அடம் பிடித்து வருகிறது டாடா மோட்டார்ஸ்.

இந்த நிலைக்கு வந்த பின்னரும் நானோ காரை கைவிடாமல் அடம் பிடிக்கும் டாடா!

உலகின் மிக குறைவான விலை கார் மாடல் என்ற பெருமையுடன் டாடா நானோ கார் கடந்த 2008ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில் கவனத்தை ஈர்த்த இந்த கார் விற்பனையில் பல இமாலய சாதனைகளை படைக்கும் என்று கருதப்பட்டது.

இந்த நிலைக்கு வந்த பின்னரும் நானோ காரை கைவிடாமல் அடம் பிடிக்கும் டாடா!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் கனவை நனவாக்கிய இந்த கார் திட்டம் வந்த வேகத்திலேயே புஸ்வானம் ஆனது. அறிமுகம் செய்யப்பட்டு அடுத்தடுத்த மாதங்களில் விற்பனை தொடர்ந்து குறையத் துவங்கியது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலைக்கு வந்த பின்னரும் நானோ காரை கைவிடாமல் அடம் பிடிக்கும் டாடா!

இருப்பினும், ரத்தன் டாடாவின் கனவு கார் திட்டமாக இருந்ததால், நானோ காரை எப்படியாவது வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் எடுத்தது. காரை மேம்படுத்துவதற்கும், சிறப்பு கடன் திட்டங்களும் கூட அறிவிக்கப்பட்டன. எனினும், நானோ கார் பக்கம் வாடிக்கையாளர் தலை வைத்து படுக்க கூட விரும்பவில்லை.

இந்த நிலைக்கு வந்த பின்னரும் நானோ காரை கைவிடாமல் அடம் பிடிக்கும் டாடா!

இந்த சூழலில், ரத்தன் டாடாவிற்கு டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற மிஸ்திரி, கருத்து வேறுபாடுகள் காரணமாக டாடா மோட்டார்ஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, டாடா நானோ கார் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார். ஆனால், அவை நடந்து ஆண்டுகள் ஓடிய பின்னரும் நானோ கார் திட்டத்தை கைவிடும் திட்டம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இல்லை.

இந்த நிலைக்கு வந்த பின்னரும் நானோ காரை கைவிடாமல் அடம் பிடிக்கும் டாடா!

இந்த சூழலில், கடந்த மூன்று மாதங்களாக ஒரு நானோ கார் கூட விற்பனையாகவில்லையாம். அப்படி இருந்தும் நானோ கார் எதிர்காலம் குறித்தோ அல்லது அதன் விற்பனை நிறுத்தப்படும் என்பது குறித்தோ எந்த அறிவிப்பையும் டாடா மோட்டார்ஸ் வெளியிடாமல் இருந்து வருகிறது.

இந்த நிலைக்கு வந்த பின்னரும் நானோ காரை கைவிடாமல் அடம் பிடிக்கும் டாடா!

இந்த சூழலில், வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளும், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளும் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இதற்கு ஏற்றவாறு டாடா நானோ காரின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு வந்த பின்னரும் நானோ காரை கைவிடாமல் அடம் பிடிக்கும் டாடா!

அதேபோன்று, எஞ்சினையும் பிஎஸ்-6 விதிகளுக்கு தக்கவாறு மேம்படுத்த வேண்டும். ஆனால், இதற்கு முதலீடு செய்ய டாடா மோட்டார்ஸ் தயாராக இல்லை என்று தெரிகிறது. எனவே, அடுத்த சில மாதங்களில் டாடா நானோ காரை விலக்கிக் கொள்வது குறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

Source: ET Auto

Most Read Articles
English summary
over the years, the demand for the Tata Nano, once dubbed as 'People's Car' is at a all-time low. According to ET Auto, the company has stated that the Tata Nano has failed to produce even a single unit in the past three months.
Story first published: Thursday, April 4, 2019, 13:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X