புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ள டாடா நிறுவனத்தின் நியூ டாடா நெக்ஸான் மாடல் காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்த மேலும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

நெக்ஸான் மாடலில் இருந்து இந்த நியூ 2020 நெக்ஸான் புதிய முன்புற டிசைன், புதிய பம்பர் டிசைன், ஃபாக் லைட்ஸ் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட மேற்புற தளம் மற்றும் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய ஹெட்லைட்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளதை இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன. மேலும் இந்த புதிய மாடலில் வித்தியாசமான க்ரில் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதால் நியூ 2020 நெக்ஸான் கார் பார்பதற்கு புத்தம் புது வடிவில் உள்ளது.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

நியூ நெக்ஸானில் புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பின்புற டிசைன்களையும் எதிர்பார்க்கலாம். மற்றப்படி வெளிப்புற டிசைனில் வேறெந்த மாற்றமும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. உட்புற டிசைனிலும் இந்த புதிய எஸ்யூவியில் சிறிய அளவிலான மாற்றங்களே நடந்திருக்கும் என்றே தெரிகிறது.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

என்ஜினை பொறுத்தவரையில், நியூ 2020 நெக்ஸானில் பிஎஸ்6 தரம் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த புதிய நெக்ஸானின் என்ஜின் தற்போதைய மாடலை விட அதிகளவிலான ஆற்றலை வெளிப்படுத்தும்.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

தற்போதைய மாடலில் உள்ள இரு என்ஜின் தேர்வுகளில், மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 108 பிஎச்பி பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மற்றொரு நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 108 பிஎச்பி பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

இரு என்ஜின்களும் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனையாகிறது. ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ட்ரைவிங் மோட்களில் தற்போதுள்ள நெக்ஸான் மாடல் கிடைக்கிறது.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

டாடா நிறுவனம் சமீபத்தில் குறுப்பிட்ட எண்ணிக்கையில் நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசனையும் வெளியிட்டிருந்தது. அதுகுறித்த விரிவான தகவல்களை பெற கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

நியூ 2020 நெக்ஸானில் முழுவதும் டிஜிட்டலாக மாற்றப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டர் அமைப்பையும் எதிர்ப்பார்க்கலாம். அதேபோல், ஸ்மார்ட் இணைப்புகளுடன் கூடிய அப்டேட் செய்யப்பட்ட தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் நியூ நெக்ஸான் எஸ்யூவியில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்காரின் உட்புற அமைப்பு ஒழுங்கமைப்பட்டுள்ளதால் திருப்தியான கேபின் உணர்வை பெறலாம்.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

நியூ 2020 நெக்ஸான் சந்தைக்கு அறிமுகமாகும் போது, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியினை கொடுக்கும்.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

டாடா நிறுவனம் எலக்ட்ரிக் கார் உற்பத்தியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்களில் டாடா நிறுவனம் ஜிப்ட்ரோன் என்ற இவி தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இத்தகைய டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் குறித்த விரிவான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...

டாடா நிறுவனம் நெக்ஸான் எஸ்யூவியை அறிமுகப்படுத்திய போது, அதன் மாடர்ன் டிசைன்களால் மிக பெரிய அளவில் பிரபலமானது. அதேபோல் தான் இந்த நியூ 2020 நெக்ஸான் எஸ்யூவி இதை விட மெருக்கேற்றப்பட்ட டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், உலகளாவிய என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டிலும் ஐந்து ஸ்டார்களை பெற்றுள்ளதால் வாடிக்கையாளர்களிடையே பெரியளவில் விற்பனையான மாடல் காராக அமையும். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இந்த புதிய நெக்ஸானால் தற்போதைய மாடலும் சில விற்பனை யூனிட்களை பார்க்கும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
2020 Tata Nexon Spied Testing Ahead Of Launch In India: Spy Pics & Details
Story first published: Wednesday, October 16, 2019, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X