வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

இளைஞர் ஒருவர் ரூ. 5 லட்சம் செலவு செய்து டாடா நெக்ஸான் காரை, சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸுக்கு ஈடான நிலையில் மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

வாகன உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் டாடா நிறுவனம், பட்ஜெட் விலையில் கூடுதல் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதில் முனைப்பை செலுத்தி வருகிறது. அந்தவகையில், அந்த நிறுவனம் அறிமுகம் செய்த நெக்ஸான் மாடல், இந்தியாவின் முதல் 5 நட்சத்திர ரேட்டிங் பெற்ற பாதுகாப்பான கார் என்ற பட்டத்தை அண்மையில் பெற்றது.

வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

இந்த சிறப்புமிக்க காரை, இளைஞர் ஒருவர் ரூ. 5 லட்சம் மதிப்பில் மாடிஃபை செய்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோவை தமிழ்4யு என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் காட்சியாகி இருக்கும் கார், மஞ்சள் நிறத்தில் வெளிப்புறத்தையும், கருப்பு நிறத்தில் மேற்கூரையையும் பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த காரின் இன்டீரியர் பகுதியிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், இதன் ஆடியோ சிஸ்டம், இருக்கைகள், டேஷ் போர்ட், வீல்கள் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட்டள்ளன. இதில், ஆடியோ சிஸ்டத்திற்கு மட்டும் ரூ. 3 லட்சம் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

அந்தவகையில், டாடா நெக்ஸான் காரில் பயனியர் ஹெட் யூனிட், 3-வே ஆடிசன் ஸ்பீக்கர்கள் முன் பக்கத்திலும், 2-வே ஆடிசன் ஸ்பீக்கர்கள் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் ராக்ஃபோர்ட் ஃபோஸ்டேஜ் பி2 சப் ஊஃப்ர், இன்டிவிட்சுவல் ஆம்பிளிஃபையர் மற்றும் ஹெலிக்ஸ் டிஎஸ்பி 2 புராசெஸ்ஸர் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கர்கள் அனைத்தும் ஒளிரும் மின் விளக்குகளைப் பெற்றுள்ளன.

வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

இதைத்தொடர்ந்து, ரூ. 2 லட்சம் மதிப்பில் காரின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், காரின் இருக்கைக்கு லெதர் போர்த்தப்பட்டுள்ளது. மேலும், டேஷ் போர்டின் வண்ணம் வெளிப்புறத்திற்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பின் பக்க இருக்கையில் அமர்பவர்கள் வீடியோக்களைக் கண்டுகளிக்கும் வகையில் இரண்டு டிஸ்பிளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

மேலும், சிறப்பு வசதியாக பின்பக்க இருக்கையில் இருப்பவர்களுக்கு ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, நெக்ஸான் காரில் சொகுசு கார்களுக்கு வழங்குவதைப்போன்ற வீல் ரிம்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களால், டாடா நெக்ஸான் கார், ரோல்ஸ் ராய்ஸின், தங்கை மாடலைப் போன்று காட்சியளிக்கின்றது. அதாவது, நெக்ஸான் கார் மிகவும் சொகுசு நிறைந்த காராக மாறியுள்ளது.

வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

டாடா நெக்ஸான் காரை இவ்வாறு மாடிஃபை செய்யும் பணியினை கோயம்பத்தூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஆர்எம் டெக்கர்ஸ் என்னும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கான ஒட்டுமொத்த தொகையாக நெக்ஸானின் உரிமையாளர் ரூ. 5 லட்சம் வரை செலவு செய்துள்ளார். டாடா நிறுவனம், இந்த நெக்ஸான் காரை எக்ஸ்-ஷோரூமில் 6.65 - 10.99 என்ற விலையில் விற்பனைச் செய்து வருகின்றது.

வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

இந்நிலையில், தற்போது மாடிஃபை செய்திருக்கும் அதன் உரிமையாளர் ரூ. 5 லட்சம் செலவு செய்திருப்பது, பணத்தை வீணடிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், நெக்ஸான் காரின் தரத்தை கருத்தில கொண்டு பார்த்தோமேயானால், இந்த வீணடிப்பது நமக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்துகிறது.

வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

ஏனென்றால், இது இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காராக இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இந்த கார் பல விபத்திகளில், அதன் உரிமையாளர்களை சிறு காயங்களின்றி காப்பாற்றியிருப்பதை அண்மையில் நிகழ்ந்த சில விபத்து சம்பவங்கள் உறுதி செய்கின்றன.

வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ!

டாடா நிறுவனம் ஏற்கனவே இந்த நெக்ஸான் மாடலில் இரு வண்ணக் கலவை ஆப்ஷனில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், நெக்ஸான் எக்ஸ்இசட்+ மற்றும் எக்ஸ்இசட்ஏ+ ஆகிய இரு வேரியண்ட்களையும், டியூவல் கலர் காம்பினேஷனில் அந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகிறது.

Most Read Articles
English summary
Tata Nexon Cabin Modification. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X