இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது!

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்ததுடன் மட்டுமல்லாது, உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது!

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் பல உன்னத தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி கொண்டுள்ளது. இதில், மிக முக்கியமான ஒரு தயாரிப்பு நெக்ஸான். பொதுவாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தில் மிகவும் பின்தங்கி காணப்படுகின்ற என்ற பேச்சு பரவலாக உலகம் முழுவதும் உள்ளது. ஆனால் அந்த விதியை மாற்றி எழுதியது நெக்ஸான்தான்.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது!

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் மற்றும் ஒரே 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமை டாடா நெக்ஸானிடம்தான் உள்ளது. குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் நெக்ஸான் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றபோது, அனைத்து நிறுவனங்களும் டாடா மோட்டார்ஸை அன்னாந்து பார்த்தன.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது!

பலரின் புருவங்களையும் உயர்த்திய டாடா நெக்ஸான், காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாடா நெக்ஸான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது டாடா நெக்ஸான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 22 மாதங்களே ஆகின்றன. அதற்குள்ளாக புதிய மைல்கல் ஒன்றை டாடா நெக்ஸான் எட்டியுள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது!

ஆம், டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் ஒரு லட்சமாவது யூனிட்டை இன்று (ஜூலை 19) உற்பத்தி செய்துள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 22 மாதங்களுக்கு உள்ளாகவே 1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது டாடா நெக்ஸான். நெக்ஸான் காரின் 1 லட்சமாவது யூனிட் புனேவிற்கு அருகே உள்ள ராஞ்சாகாவுன் ஆலையில் இருந்து வெளிவந்துள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது!

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெக்ஸான் காரின் 50 ஆயிரமாவது யூனிட்டை டாடா நிறுவனம் உற்பத்தி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் டாடா நெக்ஸான் போட்டியிட்டு வருகிறது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது!

இந்த கடும் போட்டிகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் திகழ்ந்து வருகிறது. இதற்கு குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து பெற்ற 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. டாடா நெக்ஸான் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது!

இதில், 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அடக்கம். பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த வல்லது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது!

6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி உள்ளிட்ட டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் டாடா நெக்ஸான் காரில் உள்ளன. டாடா நெக்ஸான் காரில், ரியர் ஏசி வெண்ட்களுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், கீ லெஸ் எண்ட்ரி, ரிவர்ஸ் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த காம்பேக்ட் எஸ்யூவி, ரூ.6.62 லட்சம் முதல் ரூ.11.01 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Tata Nexon Compact SUV Crosses 1,00,000 Unit Production Milestone. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X