டாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்!

டாடா கார்களுக்கு சிறப்பு பராமரிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயன் தரும் என்று கருதப்படும் இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை காணலாம்.

டாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்!

*Image courtesy Team-BHP

ஒரு பக்கம் வாகன விற்பனையில் நிலவும் பெரும் தேக்க நிலை மற்றும் சந்தைப் போட்டி அதிகரித்து வரும் நிலையில், தனது கார்களை சிறந்த மதிப்பு வாய்ந்ததாக முன்னிறுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தனது பிரபல கார் மாடல்களுக்கு அசத்தலான பராமரிப்பு மற்றும் வாரண்டி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

டாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, டிகோர், நெக்ஸான் மற்றும் நெக்ஸா ஆகிய கார் மாடல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அல்லது 40,000 கிமீ தூரத்திற்கான கட்டணமில்லா இலவச பராமரிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. டீம் பிஎச்பி தள உறுப்பினர் ஒருவர் செய்தித்தாளில் வந்த இந்த விளம்பர விபரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

டாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்!

இந்த சிறப்பு பராமரிப்புத் திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கான இலவசர பராமரிப்பு, இலவச வாரண்டி மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணமில்லா சாலை அவசர உதவி திட்டமும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்!

பருவமழை கால சலுகையாக டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் மற்றும் ஹெக்ஸா கார்களுக்கு இந்த சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது இந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு பாக்கெட்டில் இருந்து பெரிய அளவில் எந்த செலவும் இல்லாத வகையில் இருக்கும்.

டாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்!

இதுதவிர்த்து, இந்த கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகளும் வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, இருப்பில் இருக்கும் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.07 லட்சம் வரை சேமிப்பை பெறும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

MOST READ: சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

டாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்!

டாடா டியாகோ காருக்கு ரூ.75,900 வரையிலும், நெக்ஸான் எஸ்யூவிக்கு ரூ.77,900 வரையிலும், ஹெக்ஸா காருக்கு ரூ.1.07 லட்சம் வரையிலும் சேமிப்பு பெறும் வாய்ப்பு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

MOST READ: ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்

டாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்!

கடன் திட்டத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கடன் பெறும் வாய்ப்பையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. தனது கார்களுக்கு ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் வரை கடன் பெறும் வாய்ப்பும் உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

MOST READ: செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கிய கோஹ்லி, யுவராஜ்... நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் காரணம் இதுதான்

டாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்!

அனைத்து கார் நிறுவனங்களுமே இருப்பு அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு சேமிப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த சிறப்புச் சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை தரும். ஆனால், இந்த சிறப்பு சலுகை திட்டம் குறித்து மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். எனவே, அருகில் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்களை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளவும்.

Most Read Articles

English summary
Tata is offering a 3 year/ 40,000Kms maintenance package for Tata Tiago, Tigor, Nexon and Hexa this monsoon. This offer enables makes the ownership for the range of cars hassle-free with free maintenance for the next 3 years. The company's maintenance package will also include free roadside assistance and warranty for 3 years according to reports from Team-BHP.
Story first published: Tuesday, August 20, 2019, 10:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more