பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு...

டாடா டிகோர் ஜேடிபி கார் ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான டாடா நிறுவன டீலர்ஷிப்களில் அதனை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு தற்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டியாகோ மற்றும் டிகோர் ஜேடிபி மாடல் கார்களை டாடா நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்தது. ஜேடிபி டிவின்ஸ் கார்கள் வரிசையில் சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட மாடலாக இந்த கார்கள் கருதப்படுகின்றன.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இந்த ஜேடிபி டிவின்ஸ் கார்களை கோவை ஜெயம் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் காலங்களில் தயாரிக்க உள்ள வாகனங்களையும் இந்த நிறுவனத்துடன் இணைந்தே டாடா தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

டாடாவின் டிகோர் ஜேடிபி மாடல் கார் முன்னதாக வெளிவந்த மற்ற செடான்களின் வரிசையில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த அதிசக்தி வாய்ந்த மாடலில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

டாடா டிகோரின் முன்புறத்தில் க்ரில் அமைப்பு மற்றும் ஜேடிபி பேட்ஜ் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், இதில் சிறப்பம்சமாக பனி விளக்குகள், இரு புரொஜெக்டர் ஹெட்லைட், பெரிய ஏர்டேம் அமைப்பு ஆகியவை இந்த புதிய மாடலில் அமைக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

பின்புறத்தில் கிளியர் லென்ஸ் உடைய எல்இடி மின் விளக்கு மற்றும் முக்கிய அம்சமாக இரட்டை குழல் சைலென்சர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, மற்ற டாடா கார் தயாரிப்புகள் போலவே டிகோரிலும் சிறப்பான இடவசதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸில் இயங்கும் இந்த கார் வெறும் 10 செகண்ட்டில் 0-100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

மேலும், இந்த கார்களில் சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற இரண்டு டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், சிட்டி மோட் சாதாரண வேகத்திலும், ஸ்போர்ட் மோட் அதிவேகத்தில் காரை செலுத்தவும் பயன்படுகிறது.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இதைத்தொடர்ந்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக, டியாகோ மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், முதல்முறையாக கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என்னும் புதிய வசதியை டாடா கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது வளைவுகளில் கார் கவிழாமல் பாதுகாப்பாக செல்ல உதவுகிறது.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

இந்நிலையில், டியாகோ காரின் டெலிவரியை டாடா நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில், தற்போது டிகோர் ஜேடிபி மாடல் கார்கள் விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளன. மேலும், இந்த புதிய டிகோர் ஜேடிபி செடானை டெஸ்ட் டிரைவ் செய்ய அதன் டீலர்கள் சந்தையில் வெளியிட்டுள்ளனர்.

பட்ஜெட் கார்... டாடா டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்!

டாடா டிகோர் ஜேடிபியின் இந்த வருகை அதன் போட்டி நிறுவனங்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Tata opens Test Drive For Tigor JTP. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X