அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

டாடா நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் பார்க்கும்போது இந்த புதிய டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட்டில் புதிய அளவில் பெரிய க்ரில் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது தெரிகிறது. மேலும் இதன் முன்புறம் கூர்மையாகவும் பிளவுப்பட்ட ஹெட்லைட்ஸ் அமைப்பு, புதிய டிசைனில் ஃபாக் லைட் மற்றும் அகலமான மைய ஏர் டேம் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.

அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

ஆனால் இந்த சோதனை ஓட்ட காரில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்கு பொருத்தப்படவில்லை. இருப்பினும் இந்த விளக்கு விற்பனை மாடலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்புறத்தில் இவ்வாறான மாற்றங்கள் இருந்தாலும் காரின் பின்புறத்தில் எந்த டிசைன் அப்டேட்டும் செய்யப்பட்டதாக தெரியவில்லை.

அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் 2.0 என்கிற தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஏழு-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் அமைப்பு மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற தற்போதைய மாடலில் உள்ள அனைத்து தொழிற்நுட்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் தற்போதைய காரை விட கூடுதல் அப்டேட்டை கொண்டிருக்கும்.

அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படவுள்ள இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 83 பிஎச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறனுடையது. தற்போது விற்பனையாகி வரும் டியாகோ மாடலில் உள்ள கூடுதல் தேர்வான 1.0 லிட்டர் டீசல் என்ஜினை ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் டாடா நிறுவனம் வழங்கும் திட்டத்தில் இல்லை.

அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

ரூ.4.40 லட்சத்தில் இருந்து ரூ.6.77 லட்சம் வரையிலான விலையில் தற்போதைய டாடா டியாகோ மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2016ல் அறிமுகமான டாடா டியாகோ கார் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை கணிசமான விற்பனை எண்ணிக்கையை பின்பற்றி வருகிறது.

அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு டிசைனில் மாற்றத்துடன் ஃபேஸ்லிஃப்ட்டாக அறிமுகமாகவுள்ள டாடா டியாகோ காரை காண்பதற்கு வாடிக்கையாளர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட், டிகோர் ஃபேஸ்லிஃப்ட் கார்களும் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளன.

அளவில் பெரிய க்ரில் அமைப்புடன் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...

2020ல் தொடர்ந்து ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களாக களமிறக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், டியாகோ ஃபேஸ்லிஃப்ட்டை அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே அறிமுகப்படுத்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளதால் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எதுவும் தெளிவாக தெரியவரவில்லை.

Most Read Articles
English summary
Spy Pics: Tata Tiago Facelift Spotted Testing Ahead Of Next Year Launch, Features Larger Grille
Story first published: Thursday, November 21, 2019, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X