மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

டாடா நிறுவனத்தின் டியாகோ கார் ஜூன் மாத விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் ஒன்றான டியாகோ ஹேட்ச்பேக் ரக கார் கடந்த ஜூன் மாதத்தில் கணிசமான விற்பனையை அள்ளி குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், டாடாவின் டியாகோ கார், ஹேட்ச்பேக் வரிசையில் இந்தியாவில் விற்பனையாகும் மற்ற நிறுவனங்களின் கார்களைக் காட்டிலும் அதிகளவிலான விற்பனையைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

அவ்வாறு, டாடா டியாகோ கார் கடந்த ஜூன் மாத விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பதாக ரஷ்லேன் ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

மேலும் இந்த கார், விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன் ஆர் காருக்கு அடுத்தபடியாக இருக்கின்றது. ஆனால், வேகன் ஆர் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனையைக் காட்டிலும் 9.57 சதவிகிதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அவ்வாறு, 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 11,311 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருந்துத. ஆனால் நடப்பாண்டில் 10,228 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்துள்ளது.

மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

இந்த காரின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, மாருதி சுஸுகி நிறுவனம், அதன் அப்டேடட் மாடலை கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. அவ்வாறு, இந்த கார் புதிய டிசைன், புதிய எஞ்ஜின் திறன் உள்ளிட்டவற்றை இந்த கார் பெற்றிருந்தது. இருப்பினம் தற்போது சந்தையில் நிலவும் போட்டியின் காரணமாக இந்த சரிவைச் சந்தித்துள்ளது.

மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அதேசமயம், டாடா நிறுவனத்தின் டியாகோ காரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனையைக் காட்டிலும் 33.51 சதவிகிதம் சரிவைச் சந்திள்ளது. முன்னதாக, இதேபோன்று விற்பனையைச் சரிவைச் சந்தித்ததால், டாடா நிறுவனம், டியாகோவின் பெட்ரோல் வேரியண்ட் எக்ஸ்இ, எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்இசட் மாடல்களுக்கு பலவிதமான சலுகைகளை வாரி வழங்கியது.

மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

அந்தவகையில், எக்ஸ்சேஞ்ச் சலுகை, இன்சூரன்ஸ் பணத்தில் கேஸ்பேக் உள்ளிட்ட சலுகைகளை வாரி வழங்கியது. இதனால், டாடா டியாகோவின் விற்பனை கணிசமாக உயர்வை் சந்திதது. அவ்வாறு, 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 8,327 யூனிட்டை விற்பனைச் செய்தது. ஆனால், நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் டியாகோ வெறும் 5,537 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்துள்ளது.

மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

இதேபோன்று, மற்ற நிறுவனங்களின் ஹேட்ச்பேக் ரக கார்களும் கணிசமான விற்பனையைச் சந்தித்துள்ளது. இதுகுறித்த தகவலை பட்டியலாக கீழே காணலாம்.

Jun-19 Jun-18 Diff %
Maruti WagonR 10,228 11,311 -9.57
Tata Tiago 5,537 8,327 -33.51
Maruti Celerio 4,871 6,570 -25.86
Renault Kwid 4,360 4,939 -11.72
Hyundai Santro 4,141 NA NA
Datsun Go 188 365 -48.49
மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

டாடா நிறுவனம், டியாகோ காரில் ஆட்டோமேடிக் ஏஎம்டி அம்சத்தை புதிதாக இணைத்து அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மாற்றத்தைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும், அந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை. ஆகையால், டாடா டியாகோவில் முன்னதாக பொருத்தப்பட்டிருந்த அதே எஞ்ஜின்கள்தான் தற்போதும் இடம் கிடைக்கும்.

மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

அந்தவகையில், 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட், 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷன் மற்றும் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனிலும் இந்த கார் கிடைக்கின்றது.

மாருதி செலிரியோ, ஹூண்டாய் சேன்ட்ரோ கார்களை அசால்டாக வீழ்த்திய டாடா டியாகோ...

இதில் பெட்ரோல் எஞ்ஜின், 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, டீசல் வேரியண்ட் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு எஞ்ஜின்களும் மல்டி டிரைவ் மோட்களான சிட்டி மற்றும் ஈகோ தரத்தில் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Tata Tiago June sale report. Read In Tamil.
Story first published: Thursday, July 11, 2019, 20:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X