டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களிலிருந்து டீசல் எஞ்சின் ஆப்ஷனை நீக்குவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் விரைவில் விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மறுவாழ்வு அளித்த மாடல்களாக டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்கள் கருதப்படுகின்றன. இந்த கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்பனையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

இந்த இரு கார்களும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில், டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களிலிருந்து டீசல் எஞ்சின் ஆப்ஷனை நீக்குவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு, டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.05 டீசல் எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

ஆனால், இந்த இரு கார்களிலும் டீசல் மாடலின் விற்பனை குறைவாகவே இருக்கிறது. அதாவது, 14 முதல் 15 சதவீதம் அளவிற்கே டீசல் மாடலின் பங்களிப்பு உள்ளது. கிட்டத்தட்ட 85 சதவீதம் அளவிற்கு பெட்ரோல் மாடலே விற்பனையாகிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

இந்த சூழலில், டீசல் எஞ்சினை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டி இருக்கும். அதற்கு தக்கவாறு விற்பனை மூலமாக போதிய பலன் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

இதனை மனதில் வைத்து, டீசல் மாடலை விலக்கிக் கொள்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மாதம் 31ந் தேதியுடன் டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் டீசல் எஞ்சின் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

தற்போது டாடா டியோகா மற்றும் டிகோர் கார்களில் பயன்படுத்தப்படும் 3 சிலிண்டர் 1.05 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

மறுபுறத்தில் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. டீசல் மாடலைவிட அதிக சக்திவாய்ந்த மாடலாக இருப்பதுடன், மைலேஜிலும் சிறப்பாக இருப்பதால் பெட்ரோல் மாடலையே வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டீசல் வேரியண்ட்டுகள் நீக்கம்?

குறைவான பட்ஜெட்டில் சிறந்த டீசல் எஞ்சின் ஆப்ஷனை டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்கள் வழங்கி வந்தன. இந்த நிலையில், டீசல் மாடல் விலக்கிக் கொள்ளப்பட இருப்பது டீசல் கார் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Most Read Articles
English summary
Tata's 1.05 litre, three-cylinder diesel engines do not meet BS-VI norms and are set to go off the production line on the 31st of March.
Story first published: Wednesday, March 6, 2019, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X