பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் டாடா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

இனி வரும் காலங்களில் உலகில் உள்ள அனைத்து சாலைகளையும் மின்சார வாகனங்கள் ஆளவிருப்பது தற்போதே உறுதியாகிவிட்டது. அதிலும், இந்தியாவில் மிக விரைவில் இந்நிகழ்வு மிக விரைவில் அரங்கேற இருக்கின்றது. அதற்கேற்ப வகையிலான நடவடிக்கையை அண்மைக் காலமாக மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு எதிராக மிகப் பெரிய போர் தொடுக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

இதனால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகன உற்பத்தியில் முனைப்பைச் செலுத்தி வருகின்றன. இதனடிப்படையில், நாட்டின் வாகன உலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும், டாடா நிறுவனமும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் டாடா டிகோர் ரகத்திலான எலக்ட்ரிக் காருடைய விலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ஆட்டாகார் இந்தியா தளம் வெளியிட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

டாடாவின் இந்த எலக்ட்ரிக் காருக்கு தற்போது ரூ. 9.99 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரூ. 10.90 லட்சம் என உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த கார் வர்த்தக, ரீதியாக இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனைச் செய்யப்பட உள்ளது. ஆகையால், இதை தனி நபர் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

மேற்கூறிய எக்ஸ்-ஷோரூம் விலையுடன் 1 சதவீதம் டேக்ஸ் (டிசிஎஸ்) சேர்க்கப்பட உள்ளது. ஆகையால், இந்த காரின் விலை சற்று கூட இருக்கின்றது. அதேசமயம், இந்த எலக்ட்ரிக் காருக்கு இந்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்பட இருக்கின்றது. அந்தவகையில், டாடா டீகோர் ரக எலக்ட்ரிக் காருக்கு ரூ. 1.62 லட்சம் வரை மானியம் கிடைக்க இருக்கின்றது. அரசின் மானியம் இல்லையென்றால், இந்த கார் ரூ. 11.61 லட்சத்திலிருந்து, ரூ. 11.71 லட்சமாக கிடைக்கும்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

அதேசமயம், இந்த கார் பெட்ரோல் வேரியண்டைக் காட்டிலும் ரூ. 4 லட்சம் அதிகம் விலைக் கொண்டதாக இருக்கின்றது. மேலும், இது இரண்டு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அந்தவகையில், டிகோர் இவி எக்ஸ்எம் மற்றும் டிகோர் இவி எக்ஸ்டி ஆகிய இரு வேரியண்டில் கிடைக்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, இந்த கார் வெள்ளை, நீலம் மற்றும் சில்வர் ஆகிய மூன்று விதமான வண்ண தேர்வில் கிடைக்கும்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

இத்துடன், இதில் பாதுகாப்பு மற்றும் நவீன அம்சங்களும் வழங்கப்பட உள்ளன. அந்தவகையில், ட்யூவல் ஏர் பேக், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற இருக்கின்றன. இத்துடன், கூடுதல் வசதிகளும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி ஆகிய இரு வேரியண்ட்களின் அம்சங்களும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது. ஆனால், இதற்கு பின்னர் வரும் மாடல்களில் அவை மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 14 அங்குலம் கொண்ட அல்லாய் ஸ்டீல் வீலுக்கு பதிலாக அலாய் வீல் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், பவர் அட்ஜஸ்டபிள் விங் கண்ணாடிகளும் இணைக்கப்பட உள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

தொடர்ந்து, இந்த கார் வர்த்தக ரீதியாக இயங்க இருப்பதால், அதற்கேற்ப வகையிலான அம்சத்தை உள்ளடக்கிய காராக களமிறங்க இருக்கின்றது. ஆனால், இதன் பூட் ஸ்பேஸ் ஸ்டாண்டர்டு வேரியண்டைக் காட்டிலும் 89 லிட்டர் குறைவாக இருக்கின்றது. ஸ்டாண்டர்டு வேரியண்டின் பூட் ஸ்பேஸ் 419 லிட்டராக இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

மேலும், கூடுதல் வசதியாக வெளிப்புறத்தில் இருக்கும் வண்ணத்தையே பம்பர் மற்றும் டூர் ஹேண்டில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், க்ளைமேட் கன்ட்ரோல், எல்இடி டெயில் லைட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, பவர் விண்டோஸ் மற்றும் ப்ளூடூட்த், ஆக்ஸ், யுஎஸ்பி ஆகிய வசதிகள் கொண்ட ஹார்மேன்-சோர்ஸ்ட் 2டின் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிமியம் வசதிகள் இதில் இணைக்கப்பட உள்ளன.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

டாடா டிகோரின் இந்த இரு எலக்ட்ரிக் மாடலிலும் ஒரே மாதிரியான திறன்கொண்ட எஞ்ஜின்தான் பொருத்தப்பட உள்ளது. அந்தவகையில், 30kW திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது 41 எச்பி பவரையும், 105 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இதற்கான சக்தியை 16.2 kWh பேட்டரி வழங்க இருக்கின்றது. இது ஒரு முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 142 கிமீ வரை செல்லும்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டாடாவின் முதல் எலக்ட்ரிக் கார் விலை கசிந்தது...

இந்த பேட்டரி 80 சதவீத சார்ஜை 6 மணி நேரத்திலேயே அடைந்துவிடும் திறன் கொண்டது. அதுவே, இதை டிசி 15kW பாஸ்ட் சார்ஜர் முறையில் சார்ஜ் செய்யும்போது 90 நிமிடங்களிலேயே முழு சார்ஜை அடைந்துவிடும். இத்துடன், இந்த எலக்ட்ரிக் காருக்கு மூன்று வருடங்கள் அல்லது 1.25 லட்சம் கிமீ என்ற வாரண்டியை டாடா நிறுவனம் வழங்க இருக்கின்றது. இதே வாரண்டியைத்தான் பேட்டரி பேக்கிற்கும் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Tata Tigor Electric Car Priced From Rs. 9.99 Lakh. Read In Tamil.
Story first published: Thursday, June 27, 2019, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X