திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது!

அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது!

இந்தியாவின் மின்சார கார் மார்க்கெட் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா கார் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தாலும், அது தனி நபர் சந்தைக்கானதாக இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.

திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், அண்மையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் தனிநபர் சந்தையை குறிவைத்து களமிறக்கப்பட்டது. அடுத்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், அரசுத் துறை நிறுவனங்களுக்கு டிகோர் மின்சார கார்களை சப்ளை செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனிநபர் மார்க்கெட்டிற்கான மாடலையும் அறிமுகம் செய்கிறது.

திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது!

அடுத்த வாரம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், அரசுத் துறை பயன்பாட்டுக்கு வழங்கப்படும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியானது 144 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்குகிறது.

திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது!

ஆனால், புதிதாக வரும் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, தனிப்பட்ட பயன்பாட்டுக்கான சந்தையில் இது சிறந்ததாக இருக்கும்.

Most Read: மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது!

ற்போதைய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் 72 வோல்ட் ஏசி இன்டக்ஷன் மின் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின் மோட்டார் 40.23 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 90 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும்.

Most Read: குத்தகை திட்டத்தை அடுத்து சிறப்பு சலுகை திட்டம்: ஹோண்டா அதிரடியால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்!!!

திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது!

டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ரூ.11.58 லட்சம் முதல் ரூ.11.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஃபேம்-2 மானியத்திட்டத்தின் தள்ளுபடி மூலமாக ரூ.9.96 லட்சம் முதல் ரூ.10.30 லட்சம் விலையில் கிடைக்கிறது. ஆனால், அதிக தூரம் பயணிக்கும் திறனுடன் வரும் புதிய மாடலின் விலை அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

English summary
Tata Motors has revealed that it will launch the Tigor electric car with extended range by next week.
Story first published: Thursday, September 19, 2019, 18:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X