திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

அதிக திறன் வாய்ந்த பேட்டரியுடன் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் தற்போது டாக்சி மார்க்கெட் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கான பயன்பாட்டை மனதில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனிநபர் மார்க்கெட்டை குறிவைத்து, அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் திறன்வாய்ந்த பேட்டரியுடன் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

இந்த புதிய மாடலில் 21.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பேட்டரியை சாதாரண சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக மின்னேற்றம் செய்வதற்கான இரண்டு போர்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 213 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல் 140 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த புதிய மாடல் தனிநபர் சந்தையை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டது.

திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் அதிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்ட இந்த மாடலானது எக்ஸ்இ ப்ளஸ், எக்ஸ்எம் ப்ளஸ் மற்றும் எக்ஸ்டி ப்ளஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மாடலானது வெள்ளை (பியர்ல்எசென்ட் ஒயிட்), நீலம் (ஈஜிப்தியன் புளூ) மற்றும் சில்வர் (ரோமன் சில்வர்) ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

Most Read: விலையுயர்ந்த பைக்குகளில் ஜாலி ரைடு சென்றவர்களை திட்டிதீர்த்த பாதசாரிகள்... ஏன் தெரியுமா???

திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

ரூ.9.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், அரசின் மானியம் போக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 30 நகரங்களில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read: செப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது!

திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காருக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

Most Read: மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

திறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

இந்த புதிய கார் அறிமுகம் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனைப் பிரிவு தலைவர் ஆசிஷ் தர் கூறுகையில்,"இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும். வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுத் தரும்," என்று தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
Tata Motors has launched the extended range Tigor EV in India.
Story first published: Wednesday, October 9, 2019, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X