டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் காரான டிகோர் இவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் கார் வணிக ரீதியில் உபயோகிக்கும் வகையிலும் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கும் வகையிலும் கிடைக்கும் எனவும் டாடா நிறுவனம் கூறியுள்ளது.

டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

டாடா டிகோரின் ஆரம்ப விலையாக ரூ.9.44 லட்சம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திடம் இருந்து எலக்ட்ரிக் கார்களுக்கென சலுகைகள் அறிவிக்கப்பட்டால் இந்த விலை குறையவும் வாய்ப்புள்ளதாம்.

டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

டிகோர் இவி எலக்ட்ரிக் காரை முதலில் அரசாங்க மற்றும் கப்பற்படை வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கி வந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்த காரை மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

மூன்று வேரியண்ட்கள்

எக்ஸ்இ+, எக்ஸ்எம்+ மற்றும் எக்ஸ்டி+ என மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ள இந்த டிகோர் எலக்ட்ரிக் கார், நீண்ட தூர பயணம், குறைந்தளவு முன்பணம் மற்றும் முற்றிலுமாக மாசு உமிழ்வை ஏற்படுத்தாது போன்ற சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ஒரே சார்ஜ்ஜில் 213 கிலோமீட்டர்

பெரிய அளவில், 21.5 கிலோ வோல்ட் பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டாடா டிகோர் இவி காரானது, ஒருமுறை சார்ஜ் செய்தாலே சுமார் 213 கிலோமீட்டர் செல்லும் வலிமை வாய்ந்தது. இதற்கு ஏஆர்ஏஐ அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் டிரைவ் மற்றும் ஸ்போர்ட் என்ற இரு டிரைவிங் அமைப்புகளை கொண்டுள்ளது.

டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

பேட்டரி கூலிங் சிஸ்டம்

காரை வெப்பம் மிகுதியான இடத்தில் ஓட்டினாலும் காரில் இருக்கும் பேட்டரி கூலிங் அமைப்பு பேட்டரியை குளிர்ச்சியாக்கிவிடும் என கூறியுள்ளது, டாடா நிறுவனம். இதன் பேட்டரியை நிலையான சார்ஜிங் மற்றும் வேகமான சார்ஜிங் என இரு விதங்களில் சார்ஜ் செய்ய முடியும்.

டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

மாசற்ற இந்தியா

டிகோர் இவி எலக்ட்ரிக் கார் குறித்து டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன முதன்மை அதிகாரி ஆஷேஷ் தார் கூறுகையில், டிகோர் இவி எலக்ட்ரிக் மாடல், எங்களது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட தூரம் செல்ல கூடிய வாகனமாகவும் அதேநேரம் அதிக வருவாயை தரும் வாகனமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட மாடல் கார். டிகோர் மாடலின் இந்த புது வெர்சன், ஏற்கனவே அரசாங்க வாடிக்கையாளர்களுக்கும் கடற்படையை சேர்ந்தவர்களுக்கும் விற்கப்பட்டு வந்துள்ளது. இந்தியாவில் அடிக்கடி பழுதடையாமல் நிலையான கார் இயக்கத்திற்கு எங்களது இந்த தயாரிப்பு வலுவூட்டும் என்றார்.

டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

3 வருடத்தில் 1.25 லட்ச கிமீ

டாடா நிறுவனம் டிகோர் இவியின் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கியுள்ளது. ஏர்பேக்ஸ், ஏபிஎஸ்யுடன் கூடிய இபிடி, சீட் பெல்ட்டை நினைவூட்டும் மற்றும் அதிக வேகத்தில் செல்லும் போது எச்சரிக்கும் வசதி, பின்புற பார்கிங் சென்சார் என பல அம்சங்கள் இந்த எலக்ட்ரிக் காரில் உள்ளன. இந்த காரை நிச்சயம் 3 வருடத்தில் 1.25 லட்ச கிலோமீட்டர் தூரம் ஓட்டி செல்ல முடியும் எனவும் கூறுகின்றனர்.

டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இறுதியில், இந்திய மார்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது. இந்த காரின் சிறப்பம்சங்களில் முக்கியமானது, ஒரே ஒருமுறை சார்ஜ் செய்தாலே 213 கிலோ மீட்டர் பயணம் செல்லலாம் என்பது தான். இந்த காருக்கான முன்பதிவு இந்தியா முழுவதும் உள்ள டாடா நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் ஆரம்பமாகிவிட்டது. இதனால் இந்த எலக்ட்ரிக் காரின் விநியோகம் மிக விரைவில் இருக்கும்.

Most Read Articles
English summary
Tata Tigor EV Extended Range Launched In India: Prices Start At Rs 9.44 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X