எலெக்ட்ரிக் கார்களுக்கான 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் டாடா!

எலெக்ட்ரிக் கார்களுக்காக 300 ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை டாடா மோட்டார்ஸ் அமைக்க இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் கார்களுக்கான 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் டாடா!

எலெக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், வலுவான வர்த்தக திட்டத்துடன் தனது எலெக்ட்ரிக் கார் வர்த்தகத்தை மேற்கொள்ளவும் மிகப்பெரிய திட்டத்துடன் அதிரடி காட்ட உள்ளது. அடுத்த 12 முதல்ல 18 மாதங்களில் 4 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை தனிநபர் சந்தையை குறிவைத்து அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் டாடா!

முதல் மாடலாக டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத டிகோர் எலெக்ட்ரிக் காரில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த காரின் பேட்டரி 200 கிமீ தூரம் பயணிப்பதற்கான வாயப்பை வழங்கும்.

எலெக்ட்ரிக் கார்களுக்கான 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் டாடா!

தற்போது டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அரசுத் துறை பயன்பாட்டுக்காக மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாடலானது 140 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த கார் எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.11.58 லட்சம் மற்ரும் ரூ.11.92 லட்சம் விலையில் கிடைக்கிறது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் டாடா!

ஆனால், தனிநபர் பயன்பாட்டுக்கான மாடல் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருவதால் விலையும் கூடுதலாக இருக்கும். இதைத்தொடர்ந்து, டாடா டியாகோ, அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் மாடல்கள் வர இருக்கின்றன.

எலெக்ட்ரிக் கார்களுக்கான 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் டாடா!

இந்த புதிய கார்களின் விற்பனையை வலுவாக கொண்டு செல்லும் விதத்தில், டெல்லி, மும்பை, பெங்களூர், மும்பை, புனே ஆகிய 5 முக்கிய பெரு நகரங்களில் 300 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. வரும் 2020 மார்ச் மாதத்திற்குள் இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

எலெக்ட்ரிக் கார்களுக்கான 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் டாடா!

முதல் 50 சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் 15kW திறன் கொண்ட சார்ஜர் பொருத்தப்பட இருக்கின்றன. இதைத்தொடர்ந்து அமைக்கப்படும் சார்ஜ் ஏற்றும் நிலையங்களி்ல 30 முதல் 50kW திறன் கொண்ட ஃபா்ஸட் சார்ஜர்கள் பொருத்தப்பட இருக்கின்றன. மெட்ரோ அல்லாத நகரங்களில் எலெக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சாதாரண சார்ஜரை வீட்டில் அமைத்து தர டாடா திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் டாடா!

டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மூன்று மாதங்கள் கட்டணமில்லாமல் சார்ஜ் செய்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்க இருரக்கிறது. தற்போது 9 மாநிலங்களில் 13 நகரங்களில் 85 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.

எலெக்ட்ரிக் கார்களுக்கான 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் டாடா!

இந்த நிலையில், இந்த எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்த உள்ளது. இந்த விரைவு சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் டாடா கார்களுக்கு மட்டுமின்றி, பிற நிறுவனங்களின் கார்களுக்கும் சார்ஜ் ஏற்றும் வாய்ப்பும் வழங்கப்பட இருக்கிறது.

Most Read Articles
English summary
Tata is planning to set up 300 fast charging stations in metro cities.
Story first published: Saturday, August 3, 2019, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X