ஊருக்கு புதிதாக வந்தவரை இப்படியா ஏமாற்றுவது... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

ஊருக்கு புதிதாக வந்த நபரை ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மிரட்டி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

நாட்டில் பொது வாகனங்கள் பல இருந்தாலும், பெரும்பாலான மக்களால் பயன்படுத்தும் வாகனங்களில் முதல் இடத்தில் ஆட்டோக்கள் இருக்கின்றன. இவற்றின் கட்டணம் பொதுவாகனத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேர வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் இந்த ஆட்டோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

மேலும், இதுபோன்ற பல காரணங்களை மக்கள் ஆட்டோக்களை பயன்படுத்துவதற்கு கூறலாம். அதேசமயம், ஒரு சிலர் ஆட்டோக்களில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். அதற்கு, ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் பயணத்திற்கு பின்னர், மீட்டருக்கு மேல் பத்து ரூபா போட்டுக் கொடுங்க, 30 ரூபாய் போட்டுக் கொடுங்க என வாக்குவதத்தில் ஈடுபடுவது காரணமாக இருக்கின்றது.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

அதிலும், முக்கியமாக ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் பயணத்திற்கு மீறிய கட்டணத்தைப் பெறுவதற்காக, மீட்டருக்கு சூடு வைக்கின்றனர். இதனால், வெறும் 50 ரூபாய் காட்டணத்திற்கு பதிலாக ரூ. 80 முதல் ரூ. 100 வரை அந்த மீட்டர்கள் காட்டுகின்றன. இதுபோன்ற குளறுபடி காரணமாக ஒரு சில மக்கள் ஆட்டோக்களையே வெறுக்கின்றனர்.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

இந்நிலையில், 18 கிமீ பயணித்ததற்காக ஐடி பணியாளர் ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் ரூ 4,300 கட்டணமாக வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. இது, மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் அரங்கேறியுள்ளது.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், புனே நகரத்தில் புதிய வேலையில் சேருவதற்காக பேருந்து மூலம் பயணித்துள்ளார். அவ்வாறு, கடந்த புதன்கிழமை காலை சுமார் 5 மணியளவில் புனேவின் கத்ராஜ் பகுதியில் இறங்கியுள்ளார். ஆனால், அங்கிருந்து யெரவடா என்ற பகுதிக்கு அவர் செல்ல வேண்டும்.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

ஆனால், அப்போது விடியற்காலை என்பதால் அந்த பகுதியில் வேறெந்த வாகனமும் தென்படவில்லை. இதனால், சாலையோரத்தில் நின்றவாறு ஓலா மற்றும் ஊபர் வாகனங்களுக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், அப்போது ஒரு வாகனமும் அங்கு வரவில்லை. இதனால், சோர்ந்துபோன அவர் சாலையோரத்தில் நின்றவாறு காத்திருந்துள்ளார்.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

அந்த நேரத்தில் அவ்வழியாக ஓர் ஆட்டோ வந்துள்ளது. அதில், பயணிப்பதற்காக அவர் முயற்சித்துள்ளார். ஆனால், அந்த ஆட்டோவில் ஏற்கனவே வெறொரு நபர் அமர்ந்திருந்தார். அவர்தான், ஆட்டோ ஓட்டுநர் என்று, அப்போது ஆட்டோவை இயக்கிய நபர் கூறியுள்ளார். மேலும், அவர் மதுபோதையில் இருப்பதால், போலீஸாரிடம் இருந்து தப்பிக்க தான் இந்த ஆட்டோவை இயக்குவதாக கூறியுள்ளார்.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

இதனை அனுசரித்துக்கொண்ட சுரேஷ்பாபு, குறிப்பிட்ட நேரத்தில் வேலையிடத்திற்கு போய் சேரவேண்டும் என்பதற்காக ஆட்டோவில் ஏறி பயணிக்க தொடங்கியுள்ளார். அவ்வாறு, அவர் சேர வேண்டிய இடத்தை 18 கிமீ கடந்த பின்பு அடைந்துள்ளார். இந்த பயணத்திற்கான கட்டணமாக மீட்டரில் ரூ. 600 காண்பித்துள்ளது. அதைக் கொடுக்க சுரேஷ் பாபு முயற்சித்துள்ளார். ஆனால், ஆட்டோவை இயக்கியவரும், அதில் அமர்ந்திருந்த ஆட்டோ ஓட்டுநரும் ரூ. 4,300-யை கொடுக்குமாறு கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

அந்த சமயத்தில் அந்த சாலையில் யாரும் இல்லை எனக் கூறப்படுகின்றது. மேலும், அப்போதும் அந்த பகுதி இருட்டாகவே இருந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனால், செய்வதறியாமல் ஆட்டோக்காரர்கள் கேட்ட அந்த தொகையைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். தொடர்ந்து, ஆட்டோவின் பதிவெண்ணை எடுத்துக் கொண்ட அவர், யெரவடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஊருக்கு புதிதாக வந்தவரை ஏமாற்ற முயன்ற ஆட்டோ ஓட்டுநர்... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க!

இதுகுறித்து யெரவடா காவல்நிலைய அதிகாரிகள் கூறியதாவது, "சுரேஷ் பாபு என்ற ஐடி துறை பணியாளர் அளித்த புகாரை நாங்கள் பதிவு செய்துள்ளோம். அவரின் புகாரின் நடவடிக்கை எடுக்கும்விதமாக, அரஜாகதத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது" என தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Techie Charged Rs 4,300 For 18km Auto Ride. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X