பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை திரையுலக பிரபலம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார், எந்த காரை வங்கியுள்ளார் உள்ளிட்ட விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

சொகுசு வாழ்க்கைக்கு பெயர் போனவர்களாக திரைப்பட நடிகர் இருக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையை கண்டு பொறாமை கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்தவகையில், நடிகர் மற்றும் நடிகைகள் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பிய மற்றும் எதிர்பார்க்க முடியாத வாழ்க்கையை திரைப்படங்கள்மூலம் வாழ்ந்து பார்க்கின்றனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

அவ்வாறு, நடிப்பினில் மட்டுமின்றி அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் அதே சொகுசான வாழ்க்கையையே வாழ விரும்புகின்றனர். ஆகையால், அவர்கள் வசிக்கும் இல்லம், கார் என அனைத்திலும் சொகுசையே எதிர்பார்க்கின்றனர்.

இதனை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், பல கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் என்ற லக்சூரியஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். இந்த கார், இந்தியாவில் 2.14 கோடி ரூபாயில் இருந்து 4.64 கோடி ரூபாய் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இதில், அல்லு அர்ஜுன் வாங்கிய ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார், ஹை எண்ட் மாடல் என கூறப்படுகின்றது. விலை, வரி மற்றும் கூடுதல் சொகுசு வசதிகள் ஏற்பாடு செய்ததன் காரணமாக இந்த கார் கூடுதல் விலையைப் பெற்றுள்ளது. ஆனால், அதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அது 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் வாங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

அல்லு அர்ஜுனின் கராஜில் ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்கள் அணி வகுத்து நிற்கின்றன. தற்போது அதன் வரிசையில் புதிய ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரும் சேர்ந்துள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

முன்னணி திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி தொழிலதிபர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்கள் இருக்கின்றன. இதற்கு இந்த காரில் உள்ள சொகுசு வசதியே முக்கிய காரணம். அதுமட்டுமின்றி இந்த கார் பாதுகாப்பிற்கும் சிறந்ததாக இருக்கின்றது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

நடிகர் அல்லு அர்ஜுன், முன்னதாக தனது ஷூட்டிங் உள்ளிட்ட நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, ஒரு சாதாரணமான கேரவன் வேனை 7 கோடி ரூபாய் செலவில் லக்சூரியஸ் கேரவனாக மாற்றியிருந்தார். இதற்கான பணியை, புகழ்வாய்ந்த ரெட்டி கஸ்டமைஸ் நிறுவனம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் மேலும் ஓர் புதிய காராக ரேஞ்ச் ரோவர் லக்சூரியஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

ரேஞ்ச் ரோவர் வரிசையில் 3 லிட்டர் வி6 டர்போ டீசல் எஞ்ஜின் ஆரம்பநிலை மாடலாக இருக்கின்றது. இது 358 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். அதேசமயம், இதன் வரிசையில் அதிக சக்தி கொண்ட வேரியண்டாக 4.4 லிட்டர் வி8 டர்போ டீசல் என்ஜின் மாடல் இருக்கின்றது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இது, 440 பிஎச்பி பவரையும் 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதேபோன்று, பெட்ரோல் வேரியண்டில் ஆரம்ப நிலை மாடலாக இருக்கும் 3 லிட்டர் வி6 சூப்பர்சார்ஜட் எஞ்ஜின் 335 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இதில் ஹை எண்ட் வேரியண்டாக உள்ள 5 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் 543 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இதில், உள்ள அனைத்து எஞ்ஜின்களும் 8 ஸ்பீடு இசட்எஃப் டார்க் கன்வெர்டர் திறன் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பெற்றுள்ளன. இத்துடன், அனைத்து வீல்களும் இயங்கும் சிறப்பு வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கின்றது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

நடிகர் அல்லு அர்ஜுனைப் போன்றே, முன்னதாக ஓர் அரசியல் பிரபலமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கியிருந்தார். அந்த அரசியல்வாதி கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஆவார். அவர் வாங்கிய காரின் மதிப்பு 11 கோடி ரூபாய் ஆகும். இந்த காரை அவர் வாங்கிய பின்னணி குறித்த தகவலை கீழே காணலாம்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

எம்டிபி நாகராஜ் (MTB Nagaraj) என்ற அரசியல்வாதியை பற்றி நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா? உங்களில் சிலருக்கு அவரை தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். கடந்த சில வாரங்களுக்கு முன் இவரது பெயர் செய்திகளில் பலமாக அடிபட்டது. கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

எம்டிபி நாகராஜ் கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தார். இந்த சூழலில் கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்து, பாஜக ஆட்சியை பிடித்தது. எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்றார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

அந்த சமயத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் எம்டிபி நாகராஜூம் ஒருவர். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்டிபி நாகராஜின் பெயர் தற்போது செய்திகளில் மீண்டும் பலமாக அடிபட தொடங்கியுள்ளது. ஆனால் இம்முறை முற்றிலும் வேறொரு வித்தியாசமான காரணத்திற்காகதான் அவர் பெயர் செய்திகளில் அடிபட்டு வருகிறது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

எம்டிபி நாகராஜ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கார் வாங்கியதெல்லாம் பெரிய செய்தியா? என நீங்கள் நினைத்து விட வேண்டாம். எம்டிபி நாகராஜ் வாங்கியிருப்பது ஒன்றும் சாதாரண கார் கிடையாது. ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII (Rolls Royce Phantom VIII) காரைதான் எம்டிபி நாகராஜ் தற்போது சொந்தமாக்கியுள்ளார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இதில் அப்படி என்ன சிறப்பு என கேட்கிறீர்களா? இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் கார்களில் இதுதான் மிகவும் விலை உயர்ந்த மாடல். இந்த செய்தி எப்படி வெளி உலகத்திற்கு வந்தது தெரியுமா? இந்த காருடன் எம்டிபி நாகராஜ் இருக்கும் புகைப்படத்தை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிவேதித் ஆல்வா டிவிட்டரில் வெளியிட்டார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இதன் பின்புதான் வெளி உலகத்திற்கு இந்த செய்தி தெரியவந்து. இந்த காரை வாங்க வேண்டும் என்ற கனவு எம்டிபி நாகராஜூக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எப்படியோ தற்போது அந்த கனவை எம்டிபி நாகராஜ் நிறைவேற்றி கொண்டுள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கவே செய்கிறது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆனால் எம்டிபி நாகராஜ் போன்ற ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை நிறைவேற்ற முடிகிறது. இந்த காரை டெலிவரி எடுத்தவுடன் ஒசக்கோட்டையில் உள்ள கோயில் ஒன்றுக்கு எம்டிபி நாகராஜ் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன. அதன்பின் கர்நாடக மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவையும் அவர் இந்த காரில் சென்று சந்தித்துள்ளார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகதான் அவர் எடியூரப்பாவை சந்தித்துள்ளார். கர்நாடக மாநிலம் தற்போது கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கர்நாடக பகுதிகள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அங்கு மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இதற்கு உதவும் வகையில் எம்டிபி நாகராஜ் 1 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இதற்கான காசோலையை வழங்குவதற்காகதான் அவர் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்துள்ளார். எம்டிபி நாகராஜ் தற்போது வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII கார் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில், சொகுசு வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பார்த்து பார்த்து வேலை செய்துள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

கார்தான் என்றாலும் கூட உல்லாச கப்பலில் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த கார் என்னதான் வேகமாக சென்றாலும் கூட கேபின் மிகவும் அமைதியாக இருக்கும். இதற்காக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தி இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்த காரில் 6.75 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இந்த ட்வின்-டர்போ இன்ஜின் வி12 யூனிட் ஆகும். இது அதிகபட்சமாக 563 பிஎச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 5.4 வினாடிகளில் எட்டி விடும்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII லக்ஸரி காரின் விலை என்ன தெரியுமா? 9.5 கோடி ரூபாய். இதற்கே மலைத்து விடாதீர்கள். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாந்தம் VIII காரில் பல்வேறு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களையும் வழங்கி வருகிறது. இவற்றை நீங்கள் தேர்வு செய்தால், காரின் விலை இன்னும் அதிகரிக்கும். அதிகரிக்கும் என்றால், லட்சங்களில் அல்ல. கோடிகளில். ஆம், இன்னும் ஒரு சில கோடி ரூபாய் அதிகரிக்கலாம்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

எனினும் எம்டிபி நாகராஜ் ஏதேனும் ஹை-எண்ட் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை தேர்ந்து எடுத்துள்ளாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் ஒரு அரசியல்வாதியுடம் உள்ள மிகவும் விலை உயர்ந்த கார் அனேகமாக இதுவாகதான் இருக்கும். எம்டிபி நாகராஜின் பின்னணி தெரிந்தால் நீங்கள் மலைத்து விடுவீர்கள்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆம், எம்டிபி நாகராஜ் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 1,000 கோடி ரூபாய்க்கும் மேல். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக எம்டிபி நாகராஜ் தனது சொத்துக்கள் குறித்து அறிவித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Telugu Strar Allu Arjuns Buys Range Rover SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X