பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகுந்த தேசமாக மாற்ற மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறையும் என மத்திய அரசு நம்புகிறது. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையும் வெகுவாக குறையும். எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் இந்தியாவிற்கு இவ்வாறு பொருளாதார ரீதியிலான பயன்கள் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதற்காக, மானியம், ஜிஎஸ்டி வரி குறைப்பு என பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது. 2030ம் ஆண்டிற்குள் இந்தியா முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களின் தேசமாக மாற வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

இதற்காக புதிய திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மூன்று சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும். அதே சமயம் 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனையாகும் 150 சிசிக்கு உட்பட்ட அனைத்து இரு சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

இந்த வரிசையில் 2030ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்காக மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருக்கின்றன.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அத்துடன் பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் அவ்வளவாக பிரபலமாகவில்லை. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது பொதுமக்களுக்கு இன்னும் பெரிய அளவில் நம்பிக்கையும் ஏற்படவில்லை. இந்த சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மத்திய அரசின் திட்டம் குறித்து TERI (The Energy and Resources Institute) இயக்குனர் அஜய் மாத்தூர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

காற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியில், பெட்ரோல் மற்றும் டீசல் சார்ந்த எரிபொருள் வாகனங்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறந்த மாற்றாக இருக்கும். ஆனால் அடுத்த சுமார் 10 ஆண்டுகளுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழுமையாக மாறுவது என்ற அரசின் இலக்கை எட்டுவது மிகவும் கடினமானது. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் தேவை என அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

அதாவது 2030ம் ஆண்டிற்குள் முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி விட முடியாது. அதற்கு இன்னும் காலம் ஆகும் என்கிற ரீதியில் அஜய் மாத்தூர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வேகத்தில் மாற்றம் நடைபெற்று விடாது எனவும் கூறியுள்ளார். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை அவர் குறை கூறவில்லை. எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கான்செப்டிற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்காது என்பதுடன், பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவும் குறைவு என்பதே இதற்கு காரணம். ஆனால் சர்வதேச அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் உள்ள மக்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் அவ்வளவாக அறிமுகமாகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

இதுகுறித்து அவர் கூறுகையில், ''சர்வதேச அளவில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் உள்ளன. ஆனால் அத்தகைய சௌகரியமான எலெக்ட்ரிக் வாகனங்களை இங்குள்ள மக்கள் இன்னும் பார்க்கவில்லை'' என்றார். எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் எலெக்ட்ரிக் டாக்ஸிகள் ஆகியவற்றை அறிமுகம் செய்வதன் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் பயணம் தொடங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

இதுகுறித்து அவர் கூறுகையில், ''பஸ்கள் மற்றும் டாக்ஸிகள் போன்ற கமர்ஷியல் வாகனங்களைதான் முதலில் எலெக்ட்ரிக்காக மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் அவைதான் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்துகின்றன'' என்றார். இந்தியாவை பொறுத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடைவதில் இருக்கும் மற்றொரு முக்கியமான பிரச்னை ரேஞ்ச் எனவும் அஜய் மாத்தூர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஒரு முறை சார்ஜ் செய்தால் எலெக்ட்ரிக் வாகனம் எவ்வளவு தூரம் பயணம் செய்யும் என்பது மிகவும் முக்கியமானது. எனது எலெக்ட்ரிக் கார் நடுவழியில் சார்ஜ் தீர்ந்து விட்டால், அந்த சமயத்தில் எனக்கு அருகில் சார்ஜிங் ஸ்டேஷன் தேவை. ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன் இல்லாவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனது அச்சம்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

இதே நீங்கள் சீனாவை பார்த்தீர்கள் என்றால், அங்கு அனைத்து புதிய பஸ்களும், டூவீலர்களும் எலெக்ட்ரிக்தான். அங்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டது. ஆனால் இந்தியாவில் அது இன்னும் நடக்கவில்லை'' என்றார். அஜய் மாத்தூர் குறிப்பிட்டுள்ளதைபோல், எலெக்ட்ரிக் வாகனம் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பது முக்கியமானது.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

இந்தியாவில் அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் அதிகளவில் அறிமுகமாகவில்லை. சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால், 452 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும். இதுபோல் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் அதிகளவில் அறிமுகமாக வேண்டும்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா? இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி!!

அதேபோல் நடுவழியில் சார்ஜ் தீர்ந்து வாகனம் நின்று விடுமோ? என்ற அச்சமும் மக்களுக்கு இருக்கவே செய்கிறது. இந்த அச்சம் விலக வேண்டுமானால், பெட்ரோல் பங்க்குகளின் எண்ணிக்கைக்கு நிகராக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களும் கட்டமைக்கப்பட வேண்டும். இவை எல்லாம் நடந்தால் மட்டுமே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு நனவாகும்.

Most Read Articles
English summary
TERI Director Ajay Mathur Speaks About Electric Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X