விமர்சனங்களை கடந்து வெற்றி நடைபோடும் டெஸ்லா சைபர்டிர்க்!

விமர்சனங்களை கடந்து டெஸ்லா சைபர்டிரக் மின்சார வாகனம் வெற்றி நடைபோட்டு வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விமர்சனங்களை கடந்து வெற்றி நடைபோடும் டெஸ்லா சைபர்டிர்க்!

எலெட்ரிக் கார் தயாரிப்பில் பிரபலமான டெஸ்லா நிறுவனம் கடந்த 21ந் தேதி சைபர்டிரக் என்ற புதிய எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் வாகனத்தை அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியது. முதல்பார்வையிலேயே இதன் வினோதமான தோற்றம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

விமர்சனங்களை கடந்து வெற்றி நடைபோடும் டெஸ்லா சைபர்டிர்க்!

அடுத்து, அறிமுக நிகழ்ச்சியின்போது இதன் குண்டு துளைக்காத கண்ணாடியை உலோக உருண்டையை வைத்து தாக்கியபோது, கண்ணாடி கடுமையாக சேதமடைந்தது. இதனால், டெஸ்லா பங்குகளின் விலையும் சரிவை சந்தித்தது. ரேஸ்வானி வாகன தயாரிப்பு நிறுவனமும் உலோக உருண்டை சோதனையை கிண்டலடித்தது.

விமர்சனங்களை கடந்து வெற்றி நடைபோடும் டெஸ்லா சைபர்டிர்க்!

இதனால், இதுவரை எந்த டெஸ்லா தயாரிப்பும் பெறாத வகையிலான கடுமையான எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், சைபர்டிரக் இந்த விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு முன்பதிவில் அசத்தி வருகிறது. அதாவது, நாளுக்கு நாள் முன்பதிவு எண்ணிக்கை புதிய மைல்கல்லை தொட்டு வருகிறது.

விமர்சனங்களை கடந்து வெற்றி நடைபோடும் டெஸ்லா சைபர்டிர்க்!

டெஸ்லா சைபர்டிரக் மின்சார வாகனத்திற்கு செவ்வாய்க்கிழமை வரை 2.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதாவது, டெஸ்லா நிறுவனமே எதிர்பாராத அளவு முன்பதிவு குவிந்து வருகிறது.

விமர்சனங்களை கடந்து வெற்றி நடைபோடும் டெஸ்லா சைபர்டிர்க்!

இந்த வினோதமான மின்சார பிக்கப் டிரக்கிற்கு 100 டாலர்கள் காப்புத் தொகையுடன் முன்பதிவு ஆன்லைன் மூலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அடித்துப் பிடித்து முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு லட்சங்களை தாண்டியதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், அசராமல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

MOST READ:திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் ஓர் இரவு... லோகேஸ்வரனின் ஆச்சர்ய அனுபவம்!

விமர்சனங்களை கடந்து வெற்றி நடைபோடும் டெஸ்லா சைபர்டிர்க்!

டெஸ்லா சைபர்டிரக் என்ற பெயரில் வந்த பிக்கப் டிரக் டிசைன் விமர்சனங்களை பெற்றாலும், 6 பேர் வசதியாக அமர்ந்து பயணிப்பதற்கான வசதி, கரடுமுரடான சாலைகளை எதிர்கொள்வதற்கான அதிக தரை இடைவெளி மற்றும் பெரிய சக்கரங்கல், குண்டு துளைக்காத ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவை இந்த எலெக்ட்ரிக் டிரக்கின் சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

MOST READ: புதிய டொயோட்டா காரில் ஏகப்பட்ட பழுது... கோபத்தில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா? இது வேற லெவல்

விமர்சனங்களை கடந்து வெற்றி நடைபோடும் டெஸ்லா சைபர்டிர்க்!

சிங்கிள் மோட்டார் மாடலின் பேட்டரி 402 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இரண்டு மின் மோட்டார்கள் கொண்ட மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 482 கிமீ தூரம் பயணிக்க முடியும். மூன்று மின் மோட்டார்கள் கொண்ட மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலின் பேட்டரி 804 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

MOST READ: ஹூண்டாய் அவ்ரா செடான் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

விமர்சனங்களை கடந்து வெற்றி நடைபோடும் டெஸ்லா சைபர்டிர்க்!

இந்திய மதிப்பில் சிங்கிள் மோட்டார் மாடலுக்கு ரூ.29 லட்சம் விலையும், டியூவல் மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு ரூ.36 லட்சம் விலையும், ட்ரை மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு ரூ.50 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில், ட்ரை மோட்டார் மாடலின் உற்பத்தி 2022ம் ஆண்டுதான் துவங்கப்பட இருக்கிறது. ஆனாலும், இப்போதை பல வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து காத்திருக்க தாயாராகிவிட்டனர்.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla has received 250,000 pre-orders for its cybertruck electric pickup truck since its launch in US.
Story first published: Thursday, November 28, 2019, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X