துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட டெஸ்லா சைபர்டிரக் மின்சார வாகனம் துபாய் போலீஸிஸ் இணைய இருக்கிறது.

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

உலகின் மிக முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்கும் துபாய் செல்வ வளம் கொழிக்கும் நகரமாக விளங்குகிறது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரவும், கண்காணிப்புப் பணிகளுக்காகவும், உலகின் மிக விலை உயர்ந்த சூப்பர் கார்களை துபாய் போலீசார் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

துபாய் போலீசாரின் சூப்பர் கார் கலெக்ஷன் பற்றி ஏற்கனவே பல செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள். புகாட்டி வேரான், அஸ்டன் மார்ட்டின் ஒன்-77 , லம்போர்கினி அவென்டேடார், லைகன் ஹைப்பர்ஸ்போர்ட், லாஃபெராரி உள்ளிட்ட மிக மிக உயரிய சூப்பர் கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தவிரவும், வித்தியாசமான வாகனங்களையும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

இந்த நிலையில், கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட டெஸ்லா சைபர்டிரக் மின்சார வாகனத்தையும் வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், துபாய் போலீசாரின் அதிகாரப்பூர்வ வண்ணக் கலவையிலான டெஸ்லா சைபர்டிரக் ஒன்றின் படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

ஏற்கனவே டெஸ்லா சைபர்டிரக் முன்பதிவுகளை குவித்து வருகிறது. நேற்றுமுன்தினம் வரை 2.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், துபாய் போலீசாரும் இந்த டெஸ்லா சைபர்டிரக்கை வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

வித்தியாசமான டிசைன், அதி செயல்திறன் மிக்க இந்த எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் துபாய் போலீசாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரத்தில், துபாய் போலீசார் மூலமாக அதிக பிரபல்யம் கிடைக்கும் என்பதால், முன்னுரிமை அடிப்படையில் இந்த சைபர்டிரக்கை டெஸ்லா டெலிலிரி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

அடுத்த ஆண்டு தங்களது கார் கலெக்ஷனில் டெஸ்லா சைபர்டிரக் இணைக்கப்பட இருப்பதாகவும் துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு துபாய் போலீசாருக்கு இந்த டெஸ்லா சைபர்டிரக் டெலிவிரி கொடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

MOST READ: வரும் டிசம்பர் 1 முதல் கட்டாயம்... இதுவரை எவ்வளவு பாஸ்ட்டேக்குகள் வினியோகிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

மேலும், நகர்ப்புறங்களில் பெட்ரோல், டீசல் கார்களின் புகையால் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக, பேட்டரியில் இயங்கும் இந்த அதிசெயல்திறன் மிக்க பிக்கப் டிரக் வாகனத்தை வாங்குவதற்கு அவர்கள் ஆர்வம் காட்டி இருக்கின்றனர். அவர்களது தனித்துவமான கார் கலெக்ஷனில் இந்த டெஸ்லா சைபர்டிரக்கும் தனித்துவமான தேர்வாக இருக்கும்.

MOST READ: பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

இந்த எலெக்ட்ரிக் பிக்கப் டிரக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல தொடுதிரையுடன் கூடிய பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், குண்டுதுளைக்காத ஜன்னல் கண்ணாடிகள், வலிமையான கட்டமைப்பு, ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

MOST READ: புதிய டொயோட்டா காரில் ஏகப்பட்ட பழுது... கோபத்தில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா? இது வேற லெவல்

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

டெஸ்லா சைபர்டிரக் பேட்டரி திறன் மற்றும் மின் மோட்டார்கள் எண்ணிக்கையை வைத்து மூன்று மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், ஒரு மின் மோட்டார் கொண்ட மாடலின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 402 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பையும், இரண்டு மின் மோட்டார்கள் கொண்ட மாடலின் பேட்டரி 482 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பையும், மூன்று மின் மோட்டார் கொண்ட மாடல் 804 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

துபாய் போலீஸில் இணையும் டெஸ்லா சைபர்டிரக்!

பேஸ் மாடல் ரூ.29 லட்சத்திலும், டியூவல் மோட்டார் மாடல் ரூ.36 லட்சம் விலையிலும், ட்ரை மோட்டார் மாடல் ரூ.50 லட்சம் விலையிலும் கிடைக்கும். இதில், ட்ரை மோட்டார்கள் மாடலானது 2022ம் ஆண்டு வாக்கில்தான் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Cybertruck will be added in the official car fleet of the Dubai Police in 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X