எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

தானியங்கி வாகன உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய டெஸ்லா நிறுவனம், அதன் மிகப்பெரிய போட்டியாளானாக விளங்கும் பிஎம்டபிள்யூ-விற்கு எதிர்பார்க்காத வகையிலான ஓர் அடியை கொடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

தானியங்கி வாகன உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனமாக டெஸ்லா காணப்படுகின்றது. இந்நிறுவனத்தின், மிகவும் மலிவு விலை மற்றும் அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய வகையிலான சிறப்பம்சத்தை மாடல் 3 பெற்றிருக்கின்றது.

இந்த மாடல் 3 தானியங்கி எலெக்ட்ரிக் கார் தற்போது புதிய விற்பனை விகிதத்தைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

அந்தவகையில், அதன் மிகப்பெரிய போட்டியாளான பிஎம்டபிள்யூ-வின் 2, 3, 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய செரீஸ்களில் விற்பனையாகும் செடான் ரக எரிபொருளால் இயங்கும் கார்களின் விற்பனையை டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் வீழ்த்தியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. அவற்றை விற்பனைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அந்நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க் ஈடுபட்டு வருகின்றார்.

எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

இந்நிலையிலேயே, அமெரிக்காவில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான வாகன விற்பனைகுறித்த தகவல் வெளியாகியது.

இதில், டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 கார் 1,27,836 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அந்த காரின் மற்றுமொரு போட்டி நிறுவனமாக காட்சியளிக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்கள் 1,16,073 யூனிட்டுகளை விற்பனைச் செய்து பின் தங்கியுள்ளது.

எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

இந்த புதிய விற்பனை அதிகரிப்பால் டெஸ்லா, அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

மாடல் 3 தானியங்கி எலெக்ட்ரிக் காரை, டெஸ்லா நிறுவனம் முதல் முறையாக கடந்த 2016ம் ஆண்டுதான் அறிமுகம் செய்தது. செடான் ரகத்திலான இந்த எலெக்ட்ரிக் கார் சாதாரண பெட்ரோல், பெட்ரோல்-ஹைபிரிட் மற்றும் டீசல் ஆகிய கார்களின் விலைக்கு இணையான மதிப்பில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

எனவே, பெரும்பாலான அமெரிக்கர்கள் எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் அதிகம் பயனளிக்கக்கூடிய டெஸ்லா மாடல் 3 பக்கம் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

டெஸ்லா மாடல் 3 கார் தற்போது அமெரிக்காவில் 40,690 டாலர்கள் என்ற மதிப்பில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் ஆகும்.

எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

இந்த மினசார கார் ஸ்டாண்டர்டு பிளஸ் ஆர்டபிள்யூடி, லாங் ரேஞ்ச் ஆர்டபிள்யூடி மற்றும் ஃபெர்பார்மன்ஸ் ஆர்டபிள்யூடி என மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில், ஆரம்ப நிலை வேரியண்டாக காட்சியளிக்கும் ஸ்டாண்டர்டு பிளஸ், 54kWh தரம் கொண்ட பேட்டரி பேக்கில் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 283 பிஎச்பி மற்றும் 416 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

இதையடுத்த இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இரு வேரியண்டுகளிலும் 75kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதில், லாங் ரேஞ்ச் வேரியண்ட் 446 பிஎச்பி மற்றும் 510 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதேபோன்று, ஃபெர்பார்மென்ஸ் வேரியண்ட் 473 பிஎச்பி மற்றும் 639 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு, அது வழங்கக்கூடிய ரேஞ்ச் மிகப்பெரிய கவலையாக இருக்கின்றது. ஆனால், டெஸ்லா மாடல் 3 மூன்று விதமான தேர்வை வழங்குவதால் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இதில், ஸ்டாண்டர்டு பிளஸ் வேரியண்டு 402 கிமீ வரையும், மற்ற இரு வேரியண்டுகளும் 518 கிமீ வரையிலும் ரேஞ்சை வழங்குகின்றன.

எதிர்பார்க்காத அடியை கொடுத்த டெஸ்லா... கலக்கத்தில் பிஎம்டபிள்யூ..!

ஐசி எஞ்ஜின்களுடன் ஒப்பிடும்போது மின்சார பவர் ட்ரெயின் கொண்ட கார்களின் வளர்ச்சி ஓர் சிறு குழந்தை நிலையிலேயே உள்ளன. இதற்கு மின்சார வாகனங்களின் விலையும், போதிய சார்ஜிங் நிலையங்களும் இல்லாததே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இத்துடன், வாகனங்களைச் சார்ஜ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்பதும் மின்சார வாகனங்களின் சந்தை விரிவடையாமல் இருப்பதற்காக காரணமாக உள்ளது.

Via:insideevs

Most Read Articles
English summary
Tesla Model 3 Sale Beats BMW. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X