எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு குறித்து டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டத் தகவல் டெஸ்லா ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

பேட்டரியில் இயங்கும் மின்சார கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை பேட்டரியில் இயங்கும் செடான் மற்றும் எஸ்யூவி கார்களை உருவாக்கி விற்பனை செய்து வரும் டெஸ்லா நிறுவனம் வர்த்தக விரிவாக்கத் திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

பேட்டரியில் இயங்கும் டிரக், பஸ், பிக்கப் டிரக் என இந்த பட்டியல் நீள்கிறது. அண்மையில், பேட்டரியில் இயங்கும் மின்சார பிக்கப் ரக வாகனத்தை அறிமுகம் செய்தது. சைபர்டிரக் என்ற பெயரில் மிக வினோதமான டிசைனில் வந்த இந்த பிக்கப் டிரக் பெரும் வரவேற்பை பெற்றது.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த பிக்கப் டிரக்கிற்கு ஏதுவாக, அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் தகவமைப்பு கொண்ட மூன்றுசக்கர ஏடிவி ரக வாகனத்தையும் காட்சிப்படுத்தியது. சைபர்க்வாட் என்ற பெயரில் இந்த ஏடிவி வாகனம் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏடிவி வாகனம் சைபர்டிரக் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக்கில் வைத்து எடுத்துச் செல்லும் வடிவமைப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த நிலையில், ட்விட்டரில் ஒருவர் டெஸ்லா ஏடிவி வாகனம் அறிமுகம் குறித்து எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், "இந்த வாகனம் டெஸ்லா சைபர்டிரக் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் வாகனத்துடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

டெஸ்லா சைபர்டிர்க் விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது இந்த ஏடிவி வாகனமும் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2021ம் ஆண்டு இந்த டெஸ்லா சைபர்டிரக் மற்றும் சைபர்குவாட் ஏடிவி வாகனங்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த எலெக்ட்ரிக் ஏடிவி வாகனத்தில் இரண்டு பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்டதாக இருக்கும். கரடுமுரடான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்களை இந்த ஏடிவி வாகனம் பெற்றிருக்கும். டெஸ்லா சைபர்டிரக்கிலிருந்து சார்ஜ் ஏற்றும் வசதியுடன் வர இருக்கிறது.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த பதிலுடன் சேர்த்து, எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு குறித்தும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், தான் 17வயதாக இருக்கும்போது சந்தித்த சாலை விபத்தை குறிப்பிட்டு, பைக்குகள் அபாயகரமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

எனினும், எலெக்ட்ரிக் டர்ட் பைக்கை தயாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதாவது, ஒழுங்குப்படுத்தப்படாத சாலை பகுதிகளில் நடத்தப்படும் ரேஸ் மற்றும் மிக கரடுமுரடான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சாகச வகையிலான எலெக்ட்ரிக் டர்ட் பைக் தயாரிக்கும் திட்டத்தை அவர் கையில் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்

ட்விட்டரில் எலான் மஸ்க் தெரிவித்துள்ள இந்த தகவல், டெஸ்லா எலெக்ட்ரிக் வாகனப் பிரியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரண சாலைகளில் பயன்படுத்துவதற்கான எலெக்ட்ரிக் பைக்கை டெஸ்லா நிறுவனம் உருவாக்கினால் அது நிச்சயம் பெரிய அளவிலான வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
According to social media post by Elon Musk, Tesla will not build any electric street bikes in near future.
Story first published: Wednesday, December 11, 2019, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X