Just In
- 1 hr ago
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- 7 hrs ago
காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்
- 9 hrs ago
டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சினிமாவை விஞ்சும் நிஜ கதை!
- 10 hrs ago
தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!
Don't Miss!
- News
மாணவர்கள் பேருந்தை எரிக்கவில்லை.. போலீசார் அத்துமீறுகின்றனர்.. ஜாமியா மிலியா துணை வேந்தர் அதிரடி!
- Sports
தோனி ஆடலைனாலும் பரவாயில்லை.. அந்த வீரருக்கு குரல் கொடுப்போம்.. நெகிழ வைத்த சென்னை ரசிகர்கள்!
- Movies
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Lifestyle
இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா?
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான்கு டிஸ்க் ப்ரேக்குடன் நியூ 2020 ஹூண்டாய் ஐ20 சென்னையில் சோதனை ஓட்டம்
2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகின்ற ஹூண்டாய் ஐ20-ன் அடுத்த தலைமுறைக்கான மாடல் கார் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நடைபெற்றுள்ள இந்த சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நியூ 2020 ஹூண்டாய் ஐ20 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அப்டேட்களை இந்த வகையான கார் பிரிவில் முதன்முறையாக கொண்டு வருகிறது. இந்த க்ளஸ்ட்டர் அமைப்பு இதனுடன் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ஹூண்டாய் க்ரெட்டாவின் அடுத்த தலைமுறைக்கான மாடலில் இருப்பதை போல உள்ளது.

ஆனால் இந்த அமைப்பு ஐ20 மாடலின் அனைத்து அடுத்த தலைமுறைக்கான காரின் வேரியண்ட்டிலும் உள்ளதா என்பதை தெளிவாக கூற முடியவில்லை. ஏனெனில் இம்மாடலின் டாப் வேரியண்ட்டான அஸ்டா வேரியண்ட்டிற்கு மட்டும் கூட ஹூண்டாய் நிறுவனம் இதை வழங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 மாடலில் ஏற்கனவே ஆறு காற்று பைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின்புறம் வரை கார் முழுவதும் பரவ கூடிய ஏசி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பொத்தான் மூலம் காரை இயக்குவது மற்றும் நிறுத்துவது போன்ற நவீன தொழிற்நுட்பங்கள் உள்ளன. அவை அப்படியே இந்த நியூ 2020 ஐ20 மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் கூடுதல் அம்சமாக ஹூண்டாய் பிரபலமான மாடல் காராக அனைத்து வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்று வரும் வென்யூவில் உள்ள ப்ளூலிங் தொழிற்நுட்பம், அதாவது இணையதள வசதி இந்த காரிலும் வழங்கப்பட்டுள்ளது. மிக பெரிய தொடுத்திரையாக 8 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இக்காரில் உள்ளது.

ப்ரேக்கிங் அமைப்பிலும் அப்டேட்டாக நான்கு டிஸ்க் ப்ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் காட்டுகின்றன. மற்றொரு மாற்றமாக 1.5 லிட்டர் டீசல் என்ஜினிற்கு பதிலாக கியா செல்டோஸில் உள்ளது போன்ற 1.4 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டுள்ளது. கியா செல்டோஸின் என்ஜின் 115 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால் ஐ20-ன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 90 பிஎச்பி பவரை தான் வெளிப்படுத்தவல்லது.

ஐ20க்கு போட்டி மாடல்களாக கருதப்படும் ஹோண்டா ஜாஸ்-ன் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ளது, பலேனோவில் ஏப்ரல் 2020ல் முதல் டீசல் என்ஜினை வழங்குவதை நிறுத்த மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிஎஸ்6 தேர்வை பெற்றுவிட்டது. விரைவில் இந்த பெட்ரோல் என்ஜினுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இணைக்கப்படவுள்ளது.

ஐ20-ன் பெட்ரோல் வேரியண்ட் மாடல்கள் வென்யூவில் இருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுள்ளன. இதனால் இவை ஏழு வேக நிலைகளை வழங்கக்கூடிய டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 120 பிஎச்பி பவரை தான் வழங்கவுள்ளது என்பது நமக்கு தெரியும்.
Most Read:இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 மாடல் கார் அறிமுகமானதில் இருந்து சிறந்த முறையில் விற்பனையாகி வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ஐ20 மாடலின் அடுத்த தலைமுறைக்கான காரும் பிரபலமடையும் என ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது. கடந்த மாத விற்பனை நிலவரத்தில் 11,420 யூனிட்கள் விற்பனையான மாருதி சுசுகி பலேனோவிற்கு அடுத்த இடத்தை ஹூண்டாய் ஐ20 மாடல் கார் தான் 10,141 யூனிட்களுடன் பெற்றது குறிப்பிடத்தக்கது.