நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

ஒரு சில ரகசியங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டார்கள். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

இன்றைய சூழலில் கார்கள் இல்லா உலகை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்டு வந்த கார்கள் தற்போது உணவு, உடை மற்றும் இருப்பிடம் போல் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி விட்டன. தற்போதைய நவ நாகரீக யுகத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு காராவது இருப்பது அவசியமாகிறது.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

எனவே சொந்தமாக புதிய கார் வாங்குவது என்பது தற்போது பலருக்கும் வாழ்நாள் லட்சியமாக மாறியுள்ளது. இதை எட்டுவதற்காக பலரும் கடினமாக உழைக்கின்றனர். சிறுக சிறுக சேமித்து வைக்கின்றனர். சொந்த வீட்டிற்கு அடுத்தபடியாக ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் செய்யும் இரண்டாவது மிகப்பெரிய முதலீடு கிட்டத்தட்ட காராகதான் இருக்கும்.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

ஆனால் புது கார்களை வாங்கும்போது, டீலர்கள் உங்கள் தலையில் நன்றாக மிளகாய் அரைக்கலாம். எனவே டீலர்களிடம் இருந்து தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு போன்ற சலுகைகளை பெறுவது எப்படி? என்ற சூட்சமங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் கணிசமான பகுதியை சேமிக்க முடியும்.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

ஆனால் இந்த ரகசியங்களை எல்லாம் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதை டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டார்கள். எனினும் உங்களுக்கு பலன் அளிக்கும் விதமாக டீலர்களிடம் இருந்து சலுகைகளை பெறுவது எப்படி? என்பது தொடர்பான டிப்ஸ்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். புதிய காரை வாங்கும்போது இவை நிச்சயமாக உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

பொதுவாக புதிய கார்களை வாங்க செல்வதற்கு என ஒரு நேரம் உள்ளது. ஒரு மாதத்தின் கடைசி வாரம்தான் அது. கார் டீலர்ஷிப்களில் பணியாற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு கண்டிப்பாக 'சேல்ஸ் டார்க்கெட்' இருக்கும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கை எட்டுவதற்காக மாத கடைசியில் அவர்கள் மிக தீவிரமாகவும், வேகமாகவும் பணியாற்றுவார்கள்.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

அந்த சமயத்தில் புதிய காரை வாங்க சென்றால், உங்களுக்கான ஆஃபர்களை எளிதாக அதிகரித்து கொள்ள முடியும். எனவே மாத கடைசியை குறி வைத்து கார் டீலர்ஷிப்களுக்கு செல்லுங்கள். இதுதவிர புதிய கார் வாங்கும்போது கொஞ்சம் சிரமப்படாமல் பல்வேறு டீலர்களுடன் தொடர்பில் இருப்பது உங்களுக்கு கண்டிப்பாக நன்மை பயக்கும்.

MOST READ: ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள டீலர்ஷிப்பிற்கு செல்வது என்பது எளிதான காரியம்தான். இருந்தாலும் கொஞ்சம் கூடுதல் உழைப்பை போட்டு மேலும் ஒரு சில ஷோரூம்களுக்கும் செல்லுங்கள். ஏனெனில் ஒவ்வொரு டீலர்ஷிப்பும் தங்கள் அளவில் வித்தியாசமான டீல்களை வாடிக்கையாளர்களுக்காக வைத்திருப்பார்கள்.

MOST READ: சத்தமே இல்லாமல் தரமான சம்பவம்... இந்தியாவையே பிரம்மிக்க வைத்த மஹிந்திரா... என்னவென்று தெரியுமா?

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

அவை கேஷ் டிஸ்கவுண்ட் உள்பட பல்வேறு தள்ளுபடிகளாக இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு டீலருடன் நீங்கள் தொடர்பில் இருந்தால், அவற்றை இழக்க நேரிடலாம். ஒவ்வொரு டீலர்ஷிப்பிலும் கார்ப்பரேட் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஆக்ஸஸெரீஸ்கள் உள்ளிட்ட ஆஃபர்கள் தொடர்பாக விசாரித்து வைத்து கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.

MOST READ: துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

அடுத்தபடியாக குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இருக்கும் டீலர்ஷிப்களை குறி வையுங்கள். பொதுவாக முக்கியமான இடங்களில் செயல்பட்டு வரும் டீலர்ஷிப்களுக்கு மிக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் செல்வார்கள். அவர்களிடம் நீங்கள் கறாராக அடித்து பேசி ஆஃபர்களை பெறுவது கொஞ்சம் சிரமமான காரியம்.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

அதே சமயம் சிறிய மற்றும் அதிகமாக வெளியில் தெரியாத டீலர்ஷிப்களுக்கு வாடிக்கையாளர்கள் செல்வது மிகவும் குறைவாகதான் இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக அவர்கள் அதிகப்படியான ஆஃபர்களை வழங்குவார்கள். எனவே சிறிய டீலர்ஷிப்களில் ஒருவேளை உங்களுக்கு அதிகமான ஆஃபர்கள் கிடைக்கலாம்.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

பொதுவாக பேரம் பேசுவதில் இந்தியர்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது. எக்காரணத்தை கொண்டும் நமது இந்த பெருமையை விட்டு விடாதீர்கள். உங்களுக்கு ஒரு டீலரிடம் இருந்து கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது இலவச ஆக்ஸஸெரீஸ்கள் அல்லது இன்சூரன்ஸ் உதவி போன்ற ஆஃபர்கள் கிடைத்தால், அதை மற்ற டீலர்ஷிப்புடன் ஒப்பிட்டு பாருங்கள்.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

மற்ற டீலர்கள் உங்களுக்கு வழங்க தயாராக உள்ள ஆஃபர்களை உங்கள் டீலரிடமும் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்க இது உதவி செய்யும். உங்களுக்கான சலுகைகளை அதிகரித்து கொள்ள மற்றொரு தந்திரமும் உள்ளது. டீலர்ஷிப் மற்றும் உங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் முடிவு செய்யப்பட்ட உடனேயே காரை முன்பதிவு செய்து விடாதீர்கள்.

நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா?

அதற்கு பதிலாக ஓரிரு நாட்கள் காத்திருங்கள். டீலர்ஷிப் தரப்பில் உங்களுக்கான சலுகைகளை அதிகரித்து கொள்வதற்கான வாய்ப்பை இது கண்டிப்பாக ஏற்படுத்தும். நீங்கள் வேறொரு டீலரிடம் சென்று விட கூடாது அல்லது மனம் மாறி விட கூடாது என்பதே இதற்கு காரணம். இங்கே வழங்கப்பட்டுள்ள டிப்ஸ்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று மாத கடைசியில் இன்னும் நன்றாக வேலை செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Tips To Get Best Discounts From Car Dealers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X