கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

திருவள்ளூர் அருகே நடைபெற்ற கோர விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் எங்கே போனது? என தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் சுதாகர். இவர் காக்களூர் என்ற இடத்தில் உள்ள தொழிற்பேட்டையில் செயல்பட்டு கொண்டிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

கடந்த 9ம் தேதி இரவு (புதன் கிழமை) வேலை முடிந்ததும், திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், சுதாகர் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். சுதாகரிடம் இரு சக்கர வாகனம் ஒன்று உள்ளது. இதில்தான் அவர் பயணித்து கொண்டிருந்தார்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

பாண்டூர் என்ற இடத்திற்கு அருகே சென்றபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை சுதாகர் முந்தி செல்ல முயற்சி செய்தார். அதே நேரத்தில் எதிரே திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

சுதாகர் இதனை கவனிக்காமல், லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த கார், சுதாகர் பயணித்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், சுதாகர் தூக்கி வீசப்பட்டார்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

ஆனால் விபத்து நிகழ்ந்ததும், காரின் டிரைவர் காரை நிறுத்தாமலேயே சென்று விட்டார். இதனிடையே சுதாகர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தீவிரமாக தேட தொடங்கினர். அப்போதுதான் சுதாகர் விபத்தில் சிக்கிய தகவல் அவர்களுக்கு தெரியவந்தது.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

எனவே விபத்து நடைபெற்ற இடத்திற்கு அவர்கள் உடனடியாக விரைந்து சென்றனர். அப்போது சுதாகரின் இரு சக்கர வாகனம் மற்றும் ஹெல்மெட் ஆகியவை சாலையில் தனித்தனியாக சிதறி கிடந்தன. அத்துடன் சுதாகரின் ஒரு கால் மட்டும் துண்டாகி கிடந்தது.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

இதனால் சுதாகரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவரது உடலை மட்டும் காணவில்லை. இதனால் சுதாகர் குடும்பத்தினரின் அதிர்ச்சி அதிகரித்தது. அருகே உள்ள இடங்கள் அனைத்திலும் தேடி பார்த்தபோதும் சுதாகரின் உடல் கிடைக்கவில்லை.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

இதன்பின் யாரேனும் சுதாகரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே மருத்துவமனை மருத்துவமனையாக சுதாகரை அவரது குடும்பத்தினர் தேட தொடங்கினர். ஆனால் எங்கும் அவரை காணவில்லை.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

திருவள்ளூரில் இருந்து சென்னை வரை உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவர்கள் தேடிபார்த்து விட்டனர். என்றாலும் சுதாகர் கிடைக்கவில்லை. சுதாகர் குறித்த எந்த தகவலும் தெரியவராததால், திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அவரது குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

சுதாகர் குடும்பத்திற்கு ஆதரவாக பாண்டூர் கிராம மக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதன்பின்புதான் சுதாகருக்கு என்ன ஆனது? என்பதை கண்டறியும் பணியை திருவள்ளூர் மாவட்ட போலீசார் தீவிரப்படுத்தினர்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

இந்த சூழலில் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே, காலியான லாரி ஒன்றில் சுதாகரின் சடலம் கிடக்கும் தகவல் திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு கிடைத்தது. சிமெண்ட் ஏற்ற சென்ற அந்த லாரியில் கால் துண்டான நிலையில் சுதாகரின் சடலம் கிடந்தது.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சுதாகரின் உடலை மீட்டு வருவதற்காக திருவள்ளூர் மாவட்ட போலீசார் தற்போது கடப்பாவிற்கு விரைந்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு சுதாகரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

இதனிடைய சுதாகரின் உடல் லாரிக்குள் சென்று, ஆந்திர மாநிலம் கடப்பா வரை சென்றது எப்படி? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீசார் கூறுகையில், ''விபத்து நடைபெற்றபோது, சுதாகரின் கால் துண்டாகி தனியாக கீழே விழுந்து விட்டது.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

ஆனால் அவரது உடல் தூக்கி வீசப்பட்டு, பின்னால் வந்து கொண்டிருந்த லாரிக்குள் சென்று விழுந்துள்ளது. என்றாலும் லாரியின் ஓட்டுனருக்கு இந்த தகவல் தெரியவில்லை. அவர் லாரியை அப்படியே கடப்பாவிற்கு ஓட்டி சென்று விட்டார்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

ஆனால் சிமெண்ட் லோடு ஏற்றுவதற்கு முன்பாக லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கடப்பா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

இதன்பேரில் கடப்பா போலீசார் அங்கு சென்று விசாரணையை முடுக்கி விட்டனர். இதில்தான் சுதாகரின் சடலம் என்பது கண்டறியப்பட்டது. இதன்பின்பு கடப்பா போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்'' என்றனர்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வது என்பது சவால் நிறைந்த ஒன்றாகதான் அனைவராலும் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நள்ளிரவு நேரங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

எனவே கூடுமானவரை இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். அதையும் மீறி இரவு நேரங்களில் பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஒருவேளை ஏற்பட்டால், வாகனங்களை கூடுதல் கவனத்துடன் ஓட்டி செல்லுங்கள்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனங்களை, வளைவான இடங்களில் ஓவர் டேக் செய்வதை தவிர்த்து விடுங்கள். அதேபோல் கனரக வாகனங்களை பின்தொடர்ந்து சென்று, ஓவர் டேக் எடுக்கும்போதும் அதிக கவனம் அவசியம்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

ஏனெனில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இளைஞர் சுதாகர் உயிரிழந்த விபத்து இப்படித்தான் நடைபெற்றது. ஓவர்டேக் செய்யும்போது முன்னால் செல்லும் மற்றும் பின்னால் வரும் வாகனங்களுக்கு இண்டிகேட்டர் மூலமாக சிக்னல் தருவது அவசியம்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

இதுதவிர எதிரில் வரும் வாகனத்திற்கும் எச்சரிக்கை செய்வது கட்டாயம். ஹெட்லைட்டை ஒளிர விடுவதன் மூலமாக எதிரில் வரும் வாகனத்தை எச்சரிக்கை செய்யலாம். ஒரு சில நெடுஞ்சாலைகளில், சென்டர் மீடியன் இருக்காது.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

அப்படிப்பட்ட நெடுஞ்சாலைகளில், மஞ்சள் கோட்டை தாண்டி சென்று ஓவர்டேக் செய்வது என்பது மிகவும் ஆபத்து நிறைந்தது. அதே சமயம் இடைவெளி விட்டு கோடு போடப்பட்ட சாலைகளில், எதிரே வாகனம் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்பு ஓவர்டேக் செய்யலாம்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த நெடுஞ்சாலைகளில் கூட, சீரான வேகத்தை கடைபிடிக்க பழகிக் கொள்வது நல்லது. அதாவது கார்கள் என்றால், மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்தால் பாதுகாப்பு கிடைக்கும்.

கோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...

ஆனால் ஒரு சிலர் சர்வ சாதாரணமாக மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர்கள் என்ற அதிவேகத்தில்தான் காரை ஓட்டுகின்றனர். சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tiruvallur Youngster Dies In Accident: How To Drive On The National Highways. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X