ஹூண்டாய் கோனா காரில் பவனி வந்த முதல்வர் பழனிச்சாமி!

சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

கடந்த 9ந் தேதி ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.25.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட தினத்திலிருந்து முதல் 10 நாட்களில் 120 பேர் இந்த காரை முன்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து முன்பதிவு அதிகரித்து வருகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

இந்த நிலையில், புதிய கோனா எலெக்ட்ரிக் கார் முக்கிய உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்தநிலையில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுப்பதற்கான பணிகளை ஹூண்டாய் துவங்க இருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

அதன்படி, சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட கோனா எலெக்ட்ரிக் காரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான பணியை இன்று தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் துவங்கி வைத்தார்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழிற்துறை அமைச்சர் சம்பத், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உள்ளே அமர்ந்து சிறிது தூரம் பயணித்தனர்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மஹிந்திரா, டாடா உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தாலும், தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்ற மிகச் சிறப்பான அம்சங்களுடன் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலாக ஹூண்டாய் கோனா கார் வந்துள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், அதற்கு மதிப்புமிக்க ஏராளமான அம்சங்களை இந்த மாசு உமிழ்வு இல்லாத கார் பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

மின்சார கார் என்பதுடன், இந்த எலெக்ட்ரிக் கார் எஸ்யூவி ரகத்தில் வந்திருப்பது சாதகமான முதல் விஷயம். எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், எலெக்ட்ரிக் கார் மாடல் என்பதால், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் பெறும் வகையில், முகப்பில் க்ரில் அமைப்பு இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். தவிரவும், 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் ஹீட்டடு மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள், 10 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய டிரைவர் சீட் அட்ஜெஸ்ட் வசதி, லெதர் இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹீட்டடு வசதியுடன் சைடு மிரர்கள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ரியர் டீஃபாகர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், பெட்ரோல், டீசல் கார்கள் போன்று செயற்கையாக சப்தத்தை தரும் சவுண்ட் சிஸ்டமும் முக்கிய பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் 136 எச்பி பவரையு், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 9.7 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் 39.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதும் ஆகச் சிறந்த விஷயம். ஆனால், நடைமுறை பயன்பாட்டில் இந்த ரேஞ்ச் குறையும் வாய்ப்பும் இருக்கிறது. எனினும், பிற எலெக்ட்ரிக் கார் மாடல்களை விட இது மிகச் சிறப்பான ரேஞ்ச் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

இந்த காருக்கு வீட்டிலேயே சார்ஜ் செய்வதற்கான சாதாரண ஏசி சார்ஜர் வழங்கப்படும். இந்த ஏசி சார்ஜர் மூலமாக ஆறரை மணிநேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யலாம். 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக வறும் 57 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்த ஃபாஸ்ட் சார்ஜர் வசதி டீலர்களிலும், பொது இடங்களில் அமைக்கப்படும் சார்ஜ் நிலையங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு 3 ஆண்டுகள் அல்லது வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கான பொது வாரண்டி வழங்கப்படுகிறது. பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வெள்ளை, நீலம், சில்வர் மற்றும் கருப்பு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. தவிரவும், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்திலான இரட்டை வண்ணக் கலவையிலும் இந்த கார் கிடைக்கிறது. இரட்டை வண்ணக் கலவை மாடலுக்கு ரூ.20,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி!

கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மின்சார கார்களை தயாரிக்கும் பணிகளுக்காக தமிழக அரசுடன் ஹூண்டாய் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. மின்சார கார் உற்பத்திக்காக தமிழகத்தில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய இருப்பதாகவும் அறிவித்தது. அதன்படி, முதல் மாடலாக ஹூண்டாய் கோனா கார் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tamilnadu Cheif Minister Edappadi Palaniswami has launched new Hyundai Kona electric car in Chennai today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X