தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசம் புதுச்சேரி ஆகியவற்றிற்கு முன்னோடியாக திகழ்கின்ற வகையிலான, சிறப்பு நடவடிக்கையில் தமிழக அரசு களமிறங்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதவில் காணலாம்.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

நாடு முழுவதும் பெரும் அதிர்வைலையை ஏற்படுத்தியுள்ளது இந்திய வாகனத்துறை. இதற்கு, இத்துறை அண்மைக் காலங்களாக சந்தித்து வரும் மிகப் பெரிய வீழ்ச்சியே முக்கிய காரணம்.

மிகப் பெரிய வாகனச் சந்தையாக விலங்கி வந்த இந்திய வாகனத்துறை இத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்து வருவது, நாட்டின் வருவாயில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என துறைசார்ந்த வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

அதற்கேற்ப வகையில், பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைப்பது, பணியாட்களை வேலையை விட்டு நீக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இந்திய வாகனத்துறையின் இத்தகைய சூழலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று மின் வாகன ஊக்குவிப்பு.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. இது நாட்டின் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பொதுவாக, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, காற்றில் அதிக மாசை உண்டாக்குகின்றது. இதனால், புவி வெப்பமயமாதல், காற்று மாசுறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

ஆனால், மின் வாகனங்கள் அவ்வாறு இல்லாமல், சுற்றுப்புறச்சூழலுக்கு நண்பனாக விளங்குகின்றது. அதுமட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் காட்டிலும், இவற்றை பராமரிப்பது சுலபம். ஆகையால், குறைந்த செலவில் அதிக பலன் மின் வாகனங்களில் கிடைக்கும்.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

மேலும், தற்போது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அரசு செலவிடும் தொகையும் கணிசமாக குறைக்கப்படும். இதுபோன்ற பல காரணங்களால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

இதற்காக ஃபேம் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் நாடு முழுவதும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும். அதற்கேற்ப வகையில், மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இத்திட்டத்தின்மூலமே கொண்டுவரப்படுகின்றது.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

இந்நிலையில், தமிழக அரசு இத்திட்டத்தின்மூலம், பொது பயன்பாட்டிற்கான மின் வாகனங்களை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த ஆங்கில செய்தி தளம் ஆட்டோ எகனாமிக் டைம்ஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அசோக் லேலேண்ட் நிறுவனம் தயாரித்த மின்சார பஸ்களை மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

அந்தவகையில், ஃபேம்-2 திட்டத்தின்கீழ் 525 யூனிட் மின்சார பஸ்களை தமிழக அரசு பயன்பாட்டிற்குக் கொண்டு வரவுள்ளது.

தென் தமிழகத்திலேயே இத்தகையை நடவடிக்கையில் களமிறக்குவது தமிழகம்தான் முதலிடம்.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

இதுகுறித்து, எம்டிசி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "சோதனையோட்டமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மின்வாகனங்களை அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் ஊழியரே இயக்க உள்ளார். ஆனால், அதில் ஓட்டுநராக எம்டிசி கழகத்தின் பணியாளர் அமர்த்தப்படுவார். மின் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக அந்தந்த பேருந்து பணிமனைகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆகையால், தங்கு தடையின்றி மின்சார பேருந்து இயக்கப்படும்" என்றார்.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

முன்னதாக, நடப்பாண்டில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கேஎஃப்டபிள்யூ குழுமத்திடம் நிதி பெற்று மாநிலத்தில் மின் வாகனங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரவிருப்பதாக அறிவித்திருந்தார்.

தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

இதனடிப்படையில், தற்போது மாநிலத்தின் சில முக்கிய பகுதிகளில் இயக்கும் விதமாக மின்சார பேருந்துகள் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

முக்கியமாக, அவை பாரிஸ்முனை, கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து சென்னை நகரத்தின் பல இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன. பின்னர், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
TN e-Buses For Public Transport. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X