இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி ரக கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வழக்கம் போல மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

கடந்த ஏப்ரல் மாதத்தில் 11,785 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்த உள்ளதால், விட்டாரா பிரெஸ்ஸாவின் பெட்ரோல் வேரியண்ட்டை மாருதி சுஸுகி அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

அனேகமாக வரும் ஜனவரி மாதத்திற்கு முன்பாக விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இரண்டாவது இடத்தை ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

மொத்தம் 10,487 ஹூண்டாய் கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிரெட்டாவின் விற்பனை மிக சிறப்பாக உள்ள சூழலில், புதிய வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி காரை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் நிறுவனம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 10 ஆயிரம் வெனியூ கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மாருதி சுஸுகியை வீழ்த்தி, இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி விற்பனையாளர் என்ற இடத்தை அடைய ஹூண்டாய் முயன்று கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

இதனிடையே இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து, மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ்யூவி300 காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதிதான் விற்பனைக்கே அறிமுகம் செய்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

அதற்குள்ளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மூன்றாவது எஸ்யூவி என்ற இடத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிடித்திருப்பதுதான் ஆச்சரியத்திற்கு காரணம். கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 4,200 எக்ஸ்யூவி300 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

போதாக்குறைக்கு குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் காரான டாடா நெக்ஸானையும் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி300 வீழ்த்தியுள்ளது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் காருக்கு நான்காவது இடமே கிடைத்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

மொத்தம் 3,976 நெக்ஸான் கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்துள்ளது. 5வது இடத்தை மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) பிடித்துள்ளது. மொத்தம் 3,930 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த பட்டியலில் 6வது இடம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (Ford EcoSport) காருக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் 3,191 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து 7வது இடத்தை மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ் (Maruti Suzuki S-Cross) பிடித்துள்ளது. 2,163 எஸ்-க்ராஸ் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

8வது இடத்தை டாடா நிறுவனத்தின் ஹாரியர் (Tata Harrier) கைப்பற்றியுள்ளது. 2,075 டாடா ஹாரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா ஹாரியரும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் இவைதான்... உங்களுக்கு இங்கே ஆச்சரியம் இருக்கிறது...

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களின் பட்டியலில் 9வது இடத்தை 1,604 யூனிட்களுடன் ஹோண்டா டபிள்யூஆர்-வி (Honda WR-V) காரும், 10வது மற்றும் கடைசி இடத்தை 1,508 யூனிட்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரும் பிடித்துள்ளன.

Most Read Articles
English summary
Top 10 Best-selling SUVs In April 2019 In India. Read in Tamil
Story first published: Saturday, May 11, 2019, 21:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X