முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

இந்தியாவில் செல்டோஸ் காரின் விற்பனை கியா நிறுவனமே எதிர்பார்க்காத அளவிற்கு அமோகமாக உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், கியா செல்டோஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களை பின்னுக்கு தள்ளி, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி என்ற பெருமையை கியா செல்டோஸ் பெற்றுள்ளது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

கியா நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி காரை கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. முதல் மாதத்தில் கியா நிறுவனம் 6,236 செல்டோஸ் கார்களை விற்பனை செய்தது. அதன்பின் வந்த செப்டம்பர் மாதத்தில், 7,754 கியா செல்டோஸ் கார்கள் விற்பனையாயின. அதற்கு அடுத்த அக்டோபர் மாதம் கியா செல்டோஸ் கார்களின் விற்பனை ஏறக்குறைய இரட்டிப்பானது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

அக்டோபர் மாதம் 12,654 செல்டோஸ் கார்களை விற்பனை செய்து கியா அசத்தியது. இதன் மூலம் 4.5 சதவீத மார்க்கெட் ஷேரை அது பெற்றது. அத்துடன் கடந்த அக்டோபர் மாதம், டொயோட்டா, ஹோண்டா, ரெனால்ட் மற்றும் ஃபோர்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் 5வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக கியா உருவெடுத்தது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

அதே டிரெண்ட் கடந்த நவம்பர் மாதமும் தொடர, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் என்ற பெருமையை கியா செல்டோஸ் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 14,005 செல்டோஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவுடன் ஒப்பிடுகையில், சுமார் 2,000 செல்டோஸ் கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

வரும் மாதங்களிலும் கியா செல்டோஸ் காரின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில், 5.3 சதவீத மார்க்கெட் ஷேர் உடன், இந்தியாவின் 4வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக கியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவிகளின் பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா 2வது இடம் பிடித்துள்ளது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

கடந்த நவம்பர் மாதத்தில் 12,033 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 14,378 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. அதாவது விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனை 16 சதவீதம் குறைந்துள்ளது. எனினும் இந்த பட்டியலில் தனது முக்கிய போட்டியாளரான ஹூண்டாய் வெனியூவிற்கு மேலாக அது இடம்பிடித்துள்ளது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

ஹூண்டாய் வெனியூவிற்கு இந்த பட்டியலில் 3வது இடமே கிடைத்துள்ளது. மொத்தம் 9,665 வெனியூ கார்களை ஹூண்டாய் கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா 4வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 6,684 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 9,677 ஹூண்டாய் கிரெட்டா கார்கள் விற்பனையாகியிருந்தன. இதன் மூலம் ஹூண்டாய் கிரெட்டா கார்களின் விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது. இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யூவி கார்களின் பட்டியலில், மஹிந்திரா ஸ்கார்பியோ 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில், 3,878 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 2,906 ஸ்கார்பியோக்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

இதன் மூலம் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் விற்பனை 33 சதவீதம் உயர்ந்திருப்பது தெரிய வருகிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் அடுத்த தலைமுறை வெர்ஷன் 2020ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த பட்டியலில், டாடா நிறுவனத்தின் பிரபல மாடலான நெக்ஸான் 6வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

கடந்த நவம்பர் மாதம் 3,437 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 4,224 நெக்ஸான் கார்களை டாடா விற்பனை செய்திருந்தது. இது 19 சதவீத வீழ்ச்சி. இந்த பட்டியலில் எம்ஜி ஹெக்டர் 7வது இடத்தை பிடித்துள்ளது. 3,239 ஹெக்டர் கார்களை எம்ஜி நிறுவனம் கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

இந்த பட்டியலில் 4 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 8வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,724 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 2,822 ஈக்கோ ஸ்போர்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த பட்டியலில் 9வது இடத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி 300 பிடித்துள்ளது.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

கடந்த நவம்பர் மாதம் 2,224 எக்ஸ்யூவி 300 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 10வது மற்றும் கடைசி இடத்தை டொயோட்டா பார்ச்சூனர் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 1,063 பார்ச்சூனர் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,475 பார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 28 சதவீத வீழ்ச்சியாகும்.

முதல் தயாரிப்பிலேயே தனி முத்திரை பதித்த கியா... இந்தியாவில் செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்த செல்டோஸ் கார் இந்திய மார்க்கெட்டில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. செல்டோஸ் காருக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பின் மூலமாக, கியா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது முதல் தயாரிப்பிலேயே முத்திரை பதித்துள்ளது.

Most Read Articles
English summary
Top 10 SUVs Sold In November 2019. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X