இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

இந்திய வாடிக்கையாளர்கள் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்கு ஏற்ப தற்போது மார்க்கெட்டில் பல்வேறு எஸ்யூவி கார்கள் கிடைக்கின்றன. அத்துடன் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர், ஹூண்டாய் வெனியூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட எஸ்யூவி கார்களின் விற்பனையும் மிக சிறப்பாக உள்ளது.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

இந்த சூழலில் மேலும் பல்வேறு எஸ்யூவி ரக கார்கள் இந்திய மார்க்கெட்டில் வரிசையாக களமிறங்கவுள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள 3 முக்கியமான மாடல்கள் குறித்த தகவல்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

டாடா பஸ்ஸார்டு

ஹாரியரின் 7 சீட்டர் வெர்ஷன்தான் பஸ்ஸார்டு. ஜெனீவா மோட்டார் வாகன கண்காட்சியில் டாடா நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக காட்சிக்கு வைத்திருந்தது. ஹாரியரை காட்டிலும் இது மிக நீளமானது மற்றும் உயரமானது. ஆனால் வெளிப்புற தோற்றம் பெரும்பாலும் ஹாரியரை போலவே இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருடன் நேருக்கு நேராக மோதும் வகையில் பஸ்ஸார்டு காரை டாடா நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டாடா பஸ்ஸார்டு காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்த கூடியது. பிஎஸ்6 விதிகளுக்கு இணையானதாக இருக்கும். இதில், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பண்டிகை காலத்தையொட்டி டாடா பஸ்ஸார்டு விற்பனைக்கு களமிறக்கப்படலாம்.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

கியா செல்டோஸ்

தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் கார் செல்டோஸ்தான். கியா செல்டோஸ் கார் இந்திய மார்க்கெட்டில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. கியா செல்டோஸ் காரில், பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெறவுள்ளன.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

2020 மஹிந்திரா ஸ்கார்பியோ

புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது உள்ள வெர்ஷனுடன் ஒப்பிடுகையில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரின் டிசைன் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியாயின.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

முழுவதுமாக உருமறைக்கப்பட்ட நிலையில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் உள்ளிட்ட கார்களுடன் புதிய தலைமுறை ஸ்கார்பியோ போட்டியிடும். புதிய தலைமுறை ஸ்கார்பியோ, புத்தம் புதிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜினை பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 160 முதல் 170 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய கார்களையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Top-3 Upcoming SUVs In India. Read in Tamil
Story first published: Saturday, July 13, 2019, 21:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X