இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

டொயோட்டா பார்ச்சூனர் காரை மக்கள் இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் தற்போது இரண்டாம் தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் (Toyota Fortuner) கார் விற்பனையாகி வருகிறது. ஆனால் முந்தைய தலைமுறை மாடலை போலவே இதுவும் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது இந்திய வாகன மார்க்கெட்டில் மிக கடுமையான மந்த நிலை நிலவி கொண்டுள்ளது.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் கடந்த சில மாதங்களாக தடுமாறி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட டொயோட்டா நிறுவனம் ஒரு மாதத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட பார்ச்சூனர் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி இவ்வளவு பிரபலமாக இருக்க என்ன காரணம்?

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகளை கடந்த பிறகும் கூட இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகி வரும் காராக டொயோட்டா பார்ச்சூனர் இருப்பதற்கான உண்மையான காரணங்கள் என்ன? நல்லது. உங்களின் இந்த அனைத்து சந்தேகங்களுக்கும் இனி நாங்கள் விடையளிக்கிறோம்.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

பிராண்ட் மீதான நம்பிக்கை

டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் காரை கடந்த 2009ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. லான்ச் செய்யப்பட்ட உடனேயே டொயோட்டா பார்ச்சூனர் மார்க்கெட்டில் 'ஹிட்' அடித்தது. பார்ச்சூனர் காரின் அறிமுகம் ஃபோர்டு எண்டேவர் காரின் விற்பனையில் கடும் தாக்கத்தை உண்டாக்கியது. ஆம், இந்திய மார்க்கெட்டில் பார்ச்சூனருக்கு முன்னதாகவே எண்டேவர் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

இதற்கு முன்னதாக குவாலிஸ் மற்றும் இன்னோவா போன்ற பெரும் வெற்றியை சந்தித்த கார்களை இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இந்த 2 கார்களுக்கும் கிடைத்த பிரம்மாண்டமான வெற்றி டொயோட்டா நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிராண்ட் இமேஜை ஏற்படுத்தியது.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக டொயோட்டா கார்கள் உரிமையாளர்களுக்கு எவ்வித தொந்தரவும் தராமல் பல லட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் ஓடும் என வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். அது உண்மையும் கூட. எனவே டொயோட்டா என்ற பிராண்ட் மீதான நம்பிக்கை பார்ச்சூனர் காரின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

பராமரிப்பு செலவு குறைவு

பராமரிப்பு செலவு மிக குறைவு என்ற காரணத்திற்காகவும் டொயோட்டா கார்கள் நன்கு அறியப்படுகின்றன. பார்ச்சூனர் காரும் அதற்கு விதிவிலக்கல்ல. பராமரிப்பு செலவு குறைவு என்ற காரணத்தால் டொயோட்டா பிராண்டின் பெயர் உலக அளவில் பிரபலமாக இருந்து வருகிறது. அந்த இமேஜ் இந்தியாவிலும் டொயோட்டாவை பாப்புலர் ஆக்கி விட்டது.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

டொயோட்டா கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. அவை நீளமான சர்வீஸ் இடைவெளி கொண்டவை. அத்துடன் சர்வீஸ் செய்வதற்கான செலவும் குறைவாகதான் இருக்கும். எனவே 'ஓனர்ஷிப் காஸ்ட்' குறைவாகவே இருக்கும். அத்துடன் பார்ச்சூனர் அடிக்கடி பிரேக் டவுன் ஆகி தொல்லை கொடுக்க கூட காரும் அல்ல. எனவேதான் வாடிக்கையாளர்கள் அதனை அதிகம் நம்புகின்றனர்.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

அசத்தலான ரீசேல் வேல்யூ

ஒரு சில புகழ்பெற்ற நிறுவனங்களின் கார் மாடல்களே ஷோரூமை விட்டு வெளியே வந்து விட்டால் மதிப்பை இழந்து விடும். ஆனால் டொயோட்டா நிறுவனத்தின் கதையே வேறு. டொயோட்டா பார்ச்சூனர் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 28 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக வருகிறது. அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 34 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக வருகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

புதிதாக வாங்கப்பட்டு சில ஆண்டுகளை கடந்த பின்பும் கூட டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் மதிப்பு கிட்டத்தட்ட அப்படியே இருக்கும். இது பார்ச்சூனருக்கும் பொருந்தும். கார்வாலே கடந்த ஆண்டு ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது. இதன் முடிவு உங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுக்கலாம்.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

டொயோட்டா பார்ச்சூனர் கார் விற்பனை செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகும் கூட அதன் ரீசேல் வேல்யூ 85 சதவீதமாக உள்ளது என அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு அதிகமான ரீசேல் வேல்யூ கொண்ட வேறு கார் மாடல்கள் ஏதாவது இருக்குமா? என்பது சந்தேகமே. வாடிக்கையாளர்கள் பார்ச்சூனரை நம்பிக்கையுடன் வாங்க இது மற்றொரு முக்கியமான காரணம்.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் பல்வேறு வேரியண்ட்கள்

ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ற வேரியண்ட்களை பார்ச்சூனர் காரில் டொயோட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். நீங்கள் பெட்ரோல் இன்ஜினை விரும்புகிறவர் என்றால், டொயோட்டா பார்ச்சூனர் காரில் உங்களுக்கு அந்த ஆப்ஷன் கிடைக்கிறது.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

இது 4X2 வெர்ஷன்தான் என்றாலும் கூட நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யலாம். அதே சமயம் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் 4X2 மற்றும் 4X4 என இரண்டு செட் அப்பிலும் கிடைக்கின்றன. அதேபோல் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் உள்ளன. சாதாரண சாலைகளில் பயன்படுத்த போகிறீர்கள் என்றால், 4X2 ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

அதுவே நீங்கள் வெறித்தனமான ஆஃப்ரோடு ஆர்வலர் எனும் பட்சத்தில், 4X4 ஆப்ஷனுக்கு செல்லலாம். ஆக உங்கள் தேவை என்னவோ அதை டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி அப்படியே பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காரின் பிரம்மாண்ட வெற்றி நடைக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

மிக அட்டகாசமான டீசல் இன்ஜின் ஆப்ஷன்

ஆல் நியூ டொயோட்டா பார்ச்சூனர் காரில் உலகம் முழுவதும் பாராட்டு பெற்ற ஜிடி சீரிஸ் (GD Series) டீசல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. புதிய ஜிடி சீரிஸ் இன்ஜின்கள் கடந்த 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. பல்வேறு அப்டேட்களையும் அவை பெற்றிருந்தன. இந்த அப்டேட்கள் ஜிடி சீரிஸ் இன்ஜின்களை மிகவும் திறமையானவையாக மாற்றியுள்ளன.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

புதிய ஜிடி சீரிஸ் இன்ஜின்கள் ESTEC டெக்னாலஜியுடன் (Economy with Superior Thermal Efficient Combustion) வருகின்றன. இது எரிபொருள் சிக்கனத்தை கணிசமாக உயர்த்துவதுடன் மட்டுமல்லாது, வாகனத்திற்கு சிறப்பான ஆக்ஸலரேஷனையும் வழங்குகிறது. டொயோட்டா பார்ச்சூனர் காரில், 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இன்னமும் இந்த டொயோட்டா காரை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் மக்கள்... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 174.5 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதன் ஆட்டோமெட்டிக் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 15.04 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க வல்லது. அதே சமயம் மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 14.24 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும். இது அராய் சான்றளித்த மைலேஜ் ஆகும்.

Most Read Articles
 
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Top 5 Reasons For The Massive Success Of Toyota Fortuner SUV In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X