சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

உலகின் மிக முக்கியமான கார் மார்க்கெட்களில் ஒன்று இந்தியா. ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன துறை இன்னும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக வளர்ச்சியடையவில்லை. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது கிடைத்து வரும் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனினும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

இந்த சூழலில் மத்திய பட்ஜெட் நேற்று (ஜூலை 7) தாக்கல் செய்யப்பட்டது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களின் சில உதிரி பாகங்களுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

இதுதவிர இனி நீங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை லோன் மூலமாக வாங்கினால், அதற்கான வட்டிக்கு வருமான வரியில் இருந்து கூடுதலாக 1.5 லட்ச ரூபாய் வரை விலக்கும் பெறலாம். இதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வீசியுள்ளார் நிர்மலா சீதாராமன். எனவே இதனை பசுமை பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

இந்த சூழலில் மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் போன்ற உள்ளூர் நிறுவனங்களும், ஹூண்டாய், எம்ஜி, ஆடி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய மார்க்கெட்டில் தங்கள் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய போட்டி போட்டு கொண்டு தயாராகி வருகின்றன. இந்த வகையில் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான எலெக்ட்ரிக் கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

ஹூண்டாய் கோனா

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் வரும் ஜூலை 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டிஆர்எல்கள் உடனான ட்வின் ஹெட்லைட் டிசைன், எல்இடி ரியர் லேம்ப்ஸ், 17 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை இந்த காருக்கு அட்டகாசமான தோற்றத்தை தருகின்றன. இன்டீரியரை எடுத்து கொண்டால், 7 இன்ச் டிஜிட்டல் க்ளஸ்ட்டர் மற்றும் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் வழங்கப்படவுள்ளது.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்து வருகிறது. அங்கு 39.2 kWh மற்றும் 64.0 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் கோனா கிடைத்து வருகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் 312 கிலோ மீட்டர்கள் வரையும், டாப் எண்ட் வேரியண்ட்டில் 482 கிலோ மீட்டர்கள் வரையும் பயணம் செய்ய முடியும்.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

ஆனால் இந்திய மார்க்கெட்டில் எந்த வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது தற்போது வரை உறுதியாக தெரியவில்லை. அனேகமாக ஸ்டாண்டர்டு வேரியண்ட்டைதான் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வரும் என தெரிகிறது. ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு 25 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையை நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

எம்ஜி இஇஸட்எஸ்

ஹூண்டாய் கோனாவிற்கு சரியான சவால் அளிக்க இந்தியாவில் களம் இறங்கவுள்ளது எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி. ஹெக்டர் எஸ்யூவிக்கு பிறகு இந்திய மார்க்கெட்டில் எம்ஜி களமிறக்கவுள்ள இரண்டாவது தயாரிப்பு இது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என குறிப்பிடப்படும் ஹெக்டர், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சவாலான விலை நிர்ணயம் காரணமாக மார்க்கெட்டில் இது ''இன்ஸ்டன்ட் ஹிட்'' அடித்துள்ளது.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

இதற்கு அடுத்தபடியாக இஇஸட்எஸ் 5 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்திய மார்க்கெட்டில், வரும் டிசம்பர் மாதம் எம்ஜி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. குஜராத் மாநிலம் ஹலோல் பிளாண்ட்டில்தான் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை எம்ஜி உற்பத்தி செய்யவுள்ளது. எனவே இதன் விலை, ஹூண்டாய் கோனாவிற்கு கடுமையான சவால் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், ஹைதராபாத், மும்பை, பெங்களூர் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனது ஷோரூம்களில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக, 50 KW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்காக, பின்லாந்தை சேர்ந்த ஃபோர்டம் நிறுவனத்துடன் எம்ஜி கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக்

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். வேகன் ஆர் எலெக்ட்ரிக் 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த காரை பற்றி விரிவான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. எனினும் இதன் ரேஞ்ச் 150 முதல் 200 கிலோ மீட்டர்கள் வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் வேகன் ஆர் எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்பா பிளாட்பார்ம் (ALFA - Agile Light Flexible Advanced) அடிப்படையில் டாடா அல்ட்ராஸ் கார் உருவாக்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் காரை 60 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடுவதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

இதன் ரேஞ்ச் 250 முதல் 300 கிலோ மீட்டர்கள் வரை இருக்கலாம். டாடா அல்ட்ராஸ் காரின் நீளம் 3,988 மிமீ. அகலம் 1,754 மிமீ. உயரம் 1,505 மிமீ. வீல்பேஸ் 2,501 மிமீ. முதலில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள்தான் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அதன் விலை 10 லட்ச ரூபாய்க்கும் (எக்ஸ் ஷோரூம்) மேலாகதான் இருக்கும் என கூறுகின்றன.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

ஆடி இ-ட்ரான்

ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஆல் வீல் டிரைவ் காரில் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புற ஆக்ஸிலில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 170 எச்பி பவரையும், பின்புற ஆக்ஸிலில் வழங்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 190 எச்பி பவரையும் வெளிப்படுத்த கூடியவை.

சலுகைகளை வாரி வழங்கும் அரசு... இந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள 5 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள்...

ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 360 எச்பி, 561 என்எம் டார்க். அதே சமயம் பூஸ்ட் மோடில் வைத்து ஓட்டினால், 408 எச்பி பவர் மற்றும் 664 என்எம் டார்க் திறனை இவை வாரி வழங்கும். இந்த 5 சீட்டர் எஸ்யூவி 95 kWh லித்தியம் இயான் பேட்டரியை பெற்றுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிலோ மீட்டர்கள். ஆடி நிறுவனம் இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை சிபியூ வழியில் இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது. எதிர்பார்க்கப்படும் விலை 1.15 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம், இந்தியா). பாதுகாப்பு என்ற விஷயத்திலும் ஆடி இ-ட்ரான் சிறந்து விளங்கும். யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஆடி இ-ட்ரான் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர நிஸான் லீஃப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Most Read Articles
English summary
Top-5 Upcoming Electric Cars In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X