காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

2019 அக்டோபரில் விற்பனையான டாப்-7 சப் 4மீட்டர்- காம்பேக்ட் எஸ்யூவிகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் கடந்த சில மாதங்களாகவே முதலிடம் வகித்து வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் கார் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

கடந்த அக்டோபர் மாதத்தில் 10,227 யூனிட்கள் விற்பனையுடன் விட்டாரா பிரெஸ்ஸா கார் முதலிடத்தை பெற்றுள்ளது. முதலிடத்தை பெற்ற போதிலும் இந்த கார் 15,832 யூனிட்கள் விற்பனையான 2018 அக்டோபர் மாதத்தை விட 35.40 சதவீதமும் 10,362 யூனிட்கள் விற்பனையான 2019 செப்டம்பரை விட 1.30 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் வென்யூ மாடல் உள்ளது. இந்த வருட ஜூலை மாதத்தில் தான் அறிமுகமான இந்த கார் கடந்த அக்டோபர் மாதத்தில் 8,576 யூனிட்கள் விற்பனையாகி கடந்த செப்டம்பர் மாதத்தை விட 8 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

விட்டாரா பிரெஸ்ஸா டீசல் என்ஜினில் மட்டும் தான் விற்பனையாகி வருகிறது. ஆனால் ஹூண்டாய் வென்யூ டீசல் மற்றும் பெட்ரோல் என இரு என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகுகிறது. இருப்பினும் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு மாருதி சுசுகி நிறுவனம் பல சலுகைகளை அறிவித்துள்ளதால் தொடர்ந்து முதலிடத்தை இந்த கார் பிடித்து வருகிறது.

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இந்த இரண்டு கார்களுக்கும் அடுத்ததாக டாடா நெக்ஸான் மாடல் கார் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக விற்பனை லிஸ்ட்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடல்களை விட பின்தங்கி இருந்த டாடா நெக்ஸான் கடந்த மாதத்தில் 4,438 யூனிட் விற்பனையுடன் மீண்டும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

டாடா நெக்ஸானின் இந்த விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 3.69 சதவீதம் குறைவாக இருந்தாலும் 2,842 யூனிட்கள் மட்டுமே விற்பனையான கடந்த செப்டம்பர் மாதத்தை விட சுமார் 56.16 சதவீதம் கூடுதலாகும்.

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

நான்காவது இடத்தில் உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வழக்கம் போல நல்ல விதத்தத்திலேயே கடந்த மாதத்திலும் விற்பனையாகியுள்ளது. கடந்த மாதத்தில் 4,326 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த கார் 2018 அக்டோபரை விட 9.33 சதவீதமும், கடந்த செப்டம்பர் மாதத்தை விட 37.81 சதவீதமும் விற்பனையில் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

அடுத்ததாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடல் கார் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகமான இந்த கார் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாகவே விற்பனையாகி வருகிறது. லிஸ்ட்டில் இரண்டாவது இடம் வரை பிடித்துள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார், வென்யூவின் அறிமுகத்திற்கு பிறகு சிறிது விற்பனை யூனிட் எண்ணிக்கையை இழந்துள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இருந்தபோதிலும் தற்போது ஐந்தாவது இடத்தை பெற்றுள்ள இந்த கார், கடந்த மாதத்தில் 3,045 யூனிட்கள் விற்பனையாகி கடந்த செப்டம்பர் மாதத்தை விட 22.19 சதவீதம் விற்பனையில் வளர்ச்சியை கண்டுள்ளது. கடைசி 6வது மற்றும் 7வது இடத்தில் ஹோண்டா டபிள்யூஆர்வி மற்றும் மஹிந்திரா டியூவி300 மாடல்கள் உள்ளன. இவை முறையே கடந்த மாதத்தில் 1,367 மற்றும் 1,246 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளன.

காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இவை இரண்டும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட பெரிய அளவில் சரிவை கண்டிருந்தாலும், கடந்த செப்டம்பர் மாதத்தை விட முன்னேற்றமே அடைந்துள்ளன. குறிப்பாக கடைசி இடத்தில் உள்ள மஹிந்திரா டியூவி300 கடந்த செப்டம்பர் மாதத்தை விட கடந்த மாதம் 25.23 சதவீதம் விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

Most Read Articles
மேலும்... #sales
English summary
Oct 2019 sub 4m SUV sales; Maruti Brezza, Hyundai Venue top 2; Tata Nexon beats Ford EcoSport
Story first published: Thursday, November 7, 2019, 13:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X