ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

வாசகர்களுக்கு தேவையான ஆட்டோமொபைல் செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒரு சில செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே ஆட்டோமொபைல் உலகில் கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தொகுப்பு உங்களுக்கு பயன்படும் என நம்புகிறோம்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

01. எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா மற்றும் மாருதி நிறுவனங்கள்தான் விற்பனையில் முன்னிலை வகித்து வந்தன. எனினும் தற்போது வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் பிடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

02. கொத்து கொத்தாக வீட்டுக்கு அனுப்பப்படும் பணியாளர்கள்!

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது கஷ்ட காலத்தில் சிக்கி கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வாகனங்கள் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருவதால், டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கொத்து கொத்தாக வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

03. வாகன பதிவு சரிவு!

இந்தியாவில் வாகனங்களின் விற்பனை சமீப காலமாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் சரிவடைந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

04. ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைந்தது!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

05. புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

வரும் 22ந் தேதி புத்தம் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் தொழில்நுட்பம் மற்றும் இதர முக்கிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

06. 10ல் 7 இடங்களை பிடித்தது மாருதி சுஸுகி!

விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ள சூழலிலும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

07. மரண மாஸ் காட்டும் எம்ஜி ஹெக்டர்!

இந்திய மார்க்கெட்டிற்கு புது வரவான எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் அசத்த தொடங்கியுள்ளது. டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களை, இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனை செய்யப்படும் காராக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

08. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான அதிரடி ஆபரேஷன் உறுதி!

வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணங்களை பல மடங்கு உயர்த்த வழிவகை செய்யும் வரைவு அறிக்கை ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகர் தயார் செய்துள்ளது. எனினும் மார்க்கெட் மந்த நிலை காரணமாக கட்டண உயர்வு தள்ளி போகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கட்டண உயர்வு அமலுக்கு வருவது உறுதி. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

09. ஈரோடு, சேலம், திருப்பூர், வேலூருக்கு 50 எலெக்ட்ரிக் பஸ்கள்!

மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் தமிழகத்திற்கு 525 எலெக்ட்ரிக் பஸ்களை ஒதுக்கியுள்ளது. இதுதவிர ஜெர்மன் நிதியுதவியுடன் 300 எலெக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்யும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்திற்கு மகிழ்ச்சிகரமான இந்த செய்தி குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஈரோடு, சேலத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள்! மலிவான விலையில் புல்லட்! பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு செக்!

10. மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு...

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய புல்லட் 350எக்ஸ் மாடலை இந்தியாவில் களமிறக்கியுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லைன் அப்பில் மிகவும் மலிவான விலை மாடலாக இந்த பைக் உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week - Royal Enfield Bullet 350X Launched, Hyundai Grabs NO-1 Spot In SUV Segment And More. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X